மழைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்

news18
Updated: July 10, 2018, 7:02 PM IST
மழைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்
rain flows down from a roof down
news18
Updated: July 10, 2018, 7:02 PM IST
மழைக்காலம் வந்துவிட்டால் போதும் சிலருக்கு காய்ச்சல், இருமல், சளி, தலைவலி என நோய்கள் வந்துவிடும். மழைக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் கூட இந்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். எனவே மழைக்காலத்தில் எந்த மாதிரியான உணவை எப்படி சாப்பிடலாம் என இப்போது பார்க்கலாம்.

மழைக்காலத்தில் தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலி சளித்தொல்லை எனப் பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கும். இது சைனஸ், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களை வெகுவாக பாதிக்கும். அதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும்.

அப்படிப்பட்ட சூழலில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும், சூடான பானங்களையே அருந்த வேண்டும். காபி, டீ அருந்துவதற்கு பதில் இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடிக்கலாம். தேயிலையுடன் இஞ்சி, துளசி சேர்த்துக் கொதிக்கவைத்து இனிப்பு சேர்த்து அருந்தலாம். வெதுவெதுப்பான நீருடன்  எலுமிச்சைச்சாறு தேன்கலந்து குடிக்கலாம்.

சளி பிரச்னை அதிகம் உள்ளவர்கள் மிளகு, சீரகம், துளசி, ஓமவல்லி, தூதுவளையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். இது தொண்டைக்கு இதமாக இருக்கும். அதோடு மூக்கடைப்பில் தொடங்கி சளி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் இது தீர்வை தரும்.

தொண்டை கட்டிக் கொண்டிருந்தால் வெந்நீருடன் உப்புச் சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். துளசி இலைகளை ஊறவைத்த நீரை அருந்துவதும் நன்மை தரும்.  காய்கறி சூப் அருந்தலாம். முற்றிய வெண்டைக்காயில் சூப் செய்து அருந்தினாலும் தக்காளியில் சூப் செய்து அருந்தினாலும் இருமல், ஜலதோஷம் விலகும். மழையில் நனைவதாலோ அல்லது குளிர்ந்த சூழலாலோ மூக்கை அடைத்துக்கொண்டு சளி பிடிப்பதுபோல இருக்கும். அது போன்ற சூழலில் மணத்தக்காளிக் கீரையை சூப் செய்து அருந்தினால் உடனடியாக ஜலதோஷம் விலகும்.

மழைக்கு இதமாக இருக்கிறது என்பதற்காக மாலை நேரத்தில் வடை, போண்டா, பஜ்ஜி என்று எண்ணெயில் பொரித்த உணவுவகைகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. இரவு உணவு எளிமையாக ஆவியில் வேகவைத்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்.  பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து 10,12 பூண்டு சேர்த்து வேகவைத்து மிளகுத்தூள், மஞ்சள் தூள் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து குடியுங்கள் மழைக்காலங்களில் வரும் மூச்சுத்திணறலுக்கு எளிமையான தீர்வு.
First published: July 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...