• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஜைகோவ்-டி தடுப்பூசி மூன்றாம் அலையிலிருந்து நம்மை பாதுகாக்குமா..? குழந்தைகளுக்கு பலன் தருமா? மருத்துவரின் விளக்கம்

ஜைகோவ்-டி தடுப்பூசி மூன்றாம் அலையிலிருந்து நம்மை பாதுகாக்குமா..? குழந்தைகளுக்கு பலன் தருமா? மருத்துவரின் விளக்கம்

தடுப்பூசி

தடுப்பூசி

ஜைகோவ்-டி( Zycov-D )என்ற தடுப்பு மருந்து . இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பு மருந்து. முதல் தடுப்பூசி கோவாக்ஸின்.

  • Share this:
நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி….மூன்றாம் அலை வந்து கொண்டிருக்கிறது ,குழந்தைகளை குறிவைத்து தாக்கப் போகிறது என்று அடுத்தடுத்து வரும் கணிப்புகளும் புள்ளிவிபரங்களும் நம்மை கலங்கடிக்கின்றன. இந்தோனேஷியாவில் சென்ற மாதங்களில் அதிக அளவு குழந்தைகள் கொரோனா நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டனர் என்பதை கேள்விப்பட்ட போது பதைபதைத்தது நெஞ்சம். அது முடிவதற்குள் பெங்களூருவில் சென்ற பத்து நாட்களில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா நோய் பாசிட்டிவ் என்று தெரிந்ததும் மீண்டும் அச்சம் அதிகமானது.

வெளிநாடுகளில் ஃபைசர் தடுப்பூசி 12 லிருந்து 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது என்ற செய்தியையும் நாம் படித்திருப்போம் . அதுபோல நம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய நாள் எப்போது வரும் என்று காத்திருக்கும் பொழுது,

ஒரு விடிவெள்ளி!!!
ஒரு நல்ல செய்தி.!!!
ஒரு புதிய தடுப்பு மருந்து!!!!

குழந்தைகளுக்காக பரிசோதனை செய்யப்பட்டு வேலை செய்கிறது என்று நிரூபிக்கப்பட்ட தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் ஜைகோவ்-டி( ZycovD )என்ற தடுப்பு மருந்து . இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பு மருந்து. முதல் தடுப்பூசி கோவாக்ஸின்.

12 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற அரசின் பரிந்துரை யோடு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 28 ஆயிரம் பேர் பெரியவர்கள் குழந்தைகள் என்று மொத்தமாக பரிசோதனை செய்ததில் கிட்டத்தட்ட 67 சதவீதம் வரை , எடுத்துக் கொண்டவர்களுக்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.



முக்கியமாக டெல்டா என்ற புதிய உருமாற்றம் பாதித்த சமயத்தில் டெல்டா உருமாற்றம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டதால் இந்த தடுப்பு மருந்து முக்கியத்துவம் பெறுகிறது.
அத்துடன் மற்ற m RNA தடுப்பூசிகளை போலல்லாது, இந்த தடுப்பு மருந்தை பாதுகாக்க 2-8டிகிரி போதும். இந்தியா போன்ற நாடுகளுக்கு இது ஒரு பெரிய நன்மை.

இந்த தடுப்பு மருந்து மூன்று தவணைகளாக கொடுக்கப்படுகிறது. தவணை களுக்கு இடையே உள்ள காலம் 28 நாட்களாகும்.
செப்டம்பர் மாத இறுதிக்குள் கோடிக்கணக்கான அளவில் உற்பத்தி செய்யப்படும் என கடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட் தடுப்பூசிக்கு பின் கொரோனா Vs பக்கவிளைவுகள் : கண்டுபிடிப்பது எப்படி?

எத்தனை நல்ல தடுப்பூசி ஆக இருந்தாலும் குழந்தைகளுக்கு ஊசி என்றாலே ஒரு பயம் இருக்கும். அந்த பயத்தைப் போக்கும் வகையில், இன்னொரு முக்கியமான பலமாக பார்க்கப்படுவது இந்த தடுப்பு மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுவதில்லை. ட்ராபிஸ் என்ற ஸ்ப்ரிங் மூலம் தோலுக்கடியில் மருந்தை செலுத்தும் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துகிறது. இதனால் குழந்தைகள் அச்சமின்றி செலுத்தி கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



பல மாதங்களாக பிள்ளைகளைப் பார்க்காத பள்ளிகள் இப்பொழுதுதான் செப்டம்பர் 1-ஆம் தேதி திறக்கக்கூடும் என்று எதிர்பார்ப்போடு இருக்கிறோம். இந்த நேரத்தில் தடுப்பூசி தகவலானது நமக்கு மிகப்பெரிய மன தைரியத்தைக் கொடுக்கிறது என்றால் அது மிகையில்லை.

உலகிலேயே முதல்முறையாக டிஎன்ஏ என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக இந்த ஜைகோவிடி தடுப்பு மருந்த தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத இடைவெளியில் மூன்று தவணைகளாக கொடுக்கப்படும் இந்த தடுப்பு மருந்து தீவிரமான தொற்று மற்றும் மருத்துவமனையில் அனுமதி மற்றும் இறப்பிலிருந்து 100% சதம் வரை பாதுகாப்பை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளை முழுமையாக கெடிலா நிறுவனம் வெளியிட வேண்டும். அவ்வாறல்லாது தடுப்பூசிக்கு இந்திய அரசு அனுமதி வழங்கி விட்டது என்று குற்றப்பத்திரிகை வாசிக்கின்றன பல்வேறு அமைப்புகள்.



இருப்பினும் கோவாக்ஸின் தடுப்பூசிக்கும் இதுபோன்ற பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் எல்லாவற்றையும் வென்று இன்று தடுப்பூசி வானில் ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கிறது.

தடுப்பூசிகள் உற்பத்தியாகி வெளியே வரும்போது 12 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முன் வந்து செலுத்திக்கொண்டு அவர்களையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும். பள்ளிக்கு தைரியத்தோடு அனுப்பி வைக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கும்.

தயங்காமல் தடுப்பூசி எடுத்துக் கொள்வோம் , கொரோனாவிலிருந்து இருந்து குழந்தைகளைக்காப்போம்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: