Home /News /lifestyle /

"ஜூம் மீட்டிங்" ஆண்களை விட அதிகமாக பெண்களை பாதிக்கிறது : ஆய்வில் கண்டுபிடிப்பு!

"ஜூம் மீட்டிங்" ஆண்களை விட அதிகமாக பெண்களை பாதிக்கிறது : ஆய்வில் கண்டுபிடிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

பெண்கள் தாங்கள் திரையில் எவ்வாறு தோன்றுகிறோம் என்பதில் அதிக கவலை கொள்வதால் இந்த அதீத சோர்வு அவர்களில் காணப்படுகிறது என்று ஹான்காக் விளக்கினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தொற்றுநோய்களுக்கு மத்தியில் பல மாதங்களாக ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்தே பணிபுரிவதால் தனிப்பட்ட வாழ்க்கை பணிகள் மற்றும் வேலைப்பணிகள் இரண்டையும் சமாளிக்க முடியாமல் சற்று திணறி வருகின்றனர். இந்த நிலையில் தொலைதூர வேலை காரணமாக ஊழியர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் பணிகளை செய்ய வேண்டியிருப்பதால் பெண்கள் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு புதிய ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியில், “ஜூம் சோர்வு” (Zoom Fatigue) என்றும் அழைக்கப்படும் பேக்-டு-பேக் ஆன்லைன் மீட்டிங் காரணமாக ஒரு நாளில் ஏற்படும் சோர்வு உணர்வு ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் என்று கண்டறிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, ஏழு பெண்களில் ஒருவர் 13.8% ஜூம் அழைப்புகளுக்குப் பிறகு மிகவும் சோர்வடைவதாக உணர்கின்றனர். இது 20 ஆண்களில் ஒருவருடன் ஒப்பிடும்போது அதாவது 5.5% பேரை காட்டிலும் மிக அதிகம்.

சோசியல் சயின்ஸ் ரிசர்ச் நெட்ஒர்க்கில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, வீடியோ கான்பரன்சிங்கில் சுய பார்வையால் தூண்டப்படும், அதாவது சமூக உளவியலாளர்கள் விவரிக்கும் “சுய-கவனம் செலுத்துதல்” என்பதில் ஏற்படும் அதிகரிப்புதான் பெண்கள் மத்தியில் சோர்வு உணர்வுக்கு அதிக பங்களிப்பு செய்கிறது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து புதிய ஆய்வின் இணை ஆசிரியரும் மனிதநேயம் மற்றும் அறிவியல் பள்ளியில் தகவல் தொடர்பு பேராசிரியருமான ஜெஃப்ரி ஹான்காக் கூறியதாவது, "சுய-கவனம் என்பது ஒரு உரையாடலில் ஒருவர் எவ்வாறு தெரிகிறார் அல்லது ஒருவர் எவ்வாறு தோன்றுகிறார் என்பது பற்றிய விழிப்புணர்வைக் குறிக்கிறது" என்றும் கூறினார்.தொலைதூர பணிகளின் போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாளொன்றுக்கு ஒரே எண்ணிக்கையிலான ஆன்லைன் மீட்டிங் நடக்கும். அதுவும் இந்த மீட்டிங் நீண்ட நேரத்திற்கு நடக்கும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆன்லைன் மீட்டிங்களுக்கு இடையில் பெண்கள் கொஞ்சம் இடைவேளை எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தன. எனவே ஆய்வின் படி, பெண்களின் சோர்வு அதிகரிப்பதற்கு இது மற்றொரு காரணியாக அமைகிறது என்பது தெரியவந்துள்ளது.

Work from Home : கட்டில், சோஃபா தான் வேலை செய்யும் இடங்களா..? நீங்கள்தான் இதை படிக்கனும்..!

இந்த புதிய கண்டுபிடிப்புகள் காகித அடிப்படையில் உருவாக்கப்பட்டு ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் தொழில்நுட்பம், மனம் மற்றும் நடத்தை இதழில் வெளியிடப்பட்டது. அதில், குறிப்பாக வீடியோ கான்பரென்ஸ் கால்ஸ்கள் காரணமாக மக்கள் ஏன் தொடர்ந்து சோர்வடைகின்றனர் என்பதை ஆராய்ந்தது. அதிலும் இந்த புதிய ஆராய்ச்சி ஆண்கள் மற்றும் பெண்களில் யார் அதிக கஷ்டத்தை உணர்ந்தனர் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த ஆய்வுக்காக, ஆய்வாளர்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 10,322 பங்கேற்பாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த ஆண்டில் வீடியோ கான்பரன்சிங் தொழில்நுட்பங்களின் விரிவான பயன்பாடுகள் மூலம் ஏற்பட்ட burnout-ன் தனிப்பட்ட வேறுபாடுகளை நன்கு புரிந்துகொள்ள அவர்களின் “ ஜூம் களைப்பு மற்றும் சோர்வு அளவை” பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.இது பற்று ஹான்காக் கூறியதாவது, "ஜூம் சோர்வு மற்றும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான முன்மாதிரியான சான்றுகள் பற்றிய கதைகளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது ஜூம் சோர்வு பெண்களுக்கு மோசமானது என்பதற்கான தரவுகள் எங்களிடம் உள்ளது. மேலும் முக்கியமாக, ஏன் என்பதும் எங்களுக்குத் தெரியும்" என்றும் கூறினார். பெண்களின் நீடித்த சுய-கவனம் அவர்களில் பல எதிர்மறை உணர்ச்சிகளை உருவாக்கக் கூடும். இதனை ஆராய்ச்சியாளர்கள் “கண்ணாடி கவலை” என்று அழைக்கிறார்கள்.

ஏனெனில் பெண்கள் தாங்கள் திரையில் எவ்வாறு தோன்றுகிறோம் என்பதில் அதிக கவலை கொள்வதால் இந்த அதீத சோர்வு அவர்களில் காணப்படுகிறது என்று ஹான்காக் விளக்கினார். இதைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, இயல்புநிலை காட்சி அமைப்புகளை மாற்றி, ஜூம் மீட்டிங்கில் ஒருவர் “சுய பார்வை” ஐ முடக்குவதே ஆகும். கேமராவின் பார்வையில் மையமாக இருக்க வேண்டிய அவசியத்தால் உடல் ரீதியாக சிக்கிக்கொள்ளும் உணர்வுகள் தான் பெண்களிடையே ஜூம் சோர்வு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தீர்க்க மக்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் திரையில் இருந்து வெகுதூரம் நகர்ந்து அமர்வது அல்லது அழைப்புகளின் போது ஒருவரின் வீடியோவை முடக்குவது அவசியம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fatigue syndrome, Work From Home, Zoom App

அடுத்த செய்தி