முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் தொற்று - தற்காத்து கொள்வது எப்படி?

அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் தொற்று - தற்காத்து கொள்வது எப்படி?

ஜிகா வைரஸ்

ஜிகா வைரஸ்

சமீபத்தில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதே போல டிசம்பர் மாத துவக்கத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு வந்த நாசிக்கை சேர்ந்த 67 வயதான முதியவருக்கும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.  

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீபத்தில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதே போல டிசம்பர் மாத துவக்கத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு வந்த நாசிக்கை சேர்ந்த 67 வயதான முதியவருக்கும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதன் காரணமாக 2 மாநில சுகாதார துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஜிகா வைரஸ் தொற்றானது ஏற்கனவே சிக்குன்குனியா மற்றும் டெங்கு வைரஸ் போன்ற தொற்றுக்களை பரப்பும் அதே கொசு இனமான ஏடிஸ் மூலம் பரவுகிறது. ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசு கடிப்பதால் பரவும் இது ஓர் ஆபத்தான தொற்று மற்றும் பல சந்தர்ப்பங்களில் இந்த வைரஸால் மக்கள் இறக்கின்றனர்.

ஜிகா வைரஸ் (zika virus) தொற்று:

கொசுக்களால் பரவும் தொற்றான ஜிகா வைரஸ் கடந்த 1947-ல் உகாண்டாவில் ரீசஸ் மக்காக் வகை குரங்கில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. இதை தொடர்ந்து 1950-களில் பிற ஆப்பிரிக்க நாடுகளில் மனிதர்களுக்கு இந்த தொற்று பரவியதாக கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஜிகா வைரஸானது கர்ப்பிணி மற்றும் அவருடைய வயிற்றில் இருக்கும் கருவையும் கூட பாதிக்கலாம். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் ஜிகா வைரஸ் தொற்று, கருவிலுள்ள குழந்தைக்கு சில பிறப்பு குறைபாடுகள் உள்ளிட்ட சில சிக்கல்களை ஏற்படுத்த கூடும். மூளை மற்றும் கண் குறைபாடுகள், ஹை மசில் டோன், செவித்திறன் இழப்பு உள்ளிட்ட சில பிறப்பு குறைபாடுகளை ஜிகா வைரஸ் ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். பெரியவர்களில் இந்த வைரஸ் தொற்று மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. தவிர இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றொருவருக்கு பாலியல் ரீதியாகவும் பரவ கூடியது.

அறிகுறிகள்:

பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடித்த 2 வாரங்களுக்குள் ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளதற்கான அறிகுறிகள் தோன்றும். காய்ச்சல், தலைவலி, சிவந்த கண்கள், ரேஷ், மூட்டு வலி மற்றும் தசை வலி உள்ளிட்டவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.

சிகிச்சை:

இந்த வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. மூட்டு வலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கட்டுப்படுத்த மருந்துகள் கொடுக்கப்படும் நோயாளிகள் நிறைய தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்கவும் மற்றும் போதுமான ஓய்வு எடுக்கவும் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

தடுப்பு நடவடிக்கை:

- இந்த அபாய தொற்றிலிருந்து தப்பிக்க வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
- தூங்கும் போது மறக்காமல் கொசுவலையை கட்டி கொண்டு அதனுள் படுக்கவும்.
- கொசுக்கடியிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ள தூங்கும் போது நீளமான முழுக்கை சட்டை, பேண்ட், சாக்ஸ் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு தூங்குங்கள்.
- உங்கள் ஆடைகளில் மஸ்கிட்டோ ரிப்லென்ட்டை பயன்படுத்துங்கள்.
- நீங்கள் படுக்கும் ரூமில் பூச்சிகளை விரட்டும் பக் ஸ்ப்ரே (bug spray) பயன்படுத்தவும்.
- மழைநீர் கால்வாய் மற்றும் செப்டிக் டேங்கில் ஏதேனும் விரிசல் அல்லது இடைவெளி காணப்பட்டால் அதை சரி செய்யவும். இருட்டுவதற்கு முன் மாலை நேரத்தின் போதே வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை அடைத்து வைப்பது கொசுக்களை வீட்டிற்குள் அதிகம் அண்டவிடாமல் தடுக்க சிறந்த வழி.
First published:

Tags: Mosquito, Zika Virus