அடிக்கடி கை கழுவியவுடனோ அல்லது குளித்தவுடனோ ஈரத்தை துடைக்கப் பயன்படுத்தும் டவல் கிருமிகள் வாழ ஏதுவானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதாவது 90% பாத்ரூம் டவலில் காலிஃபோர்ம் பாக்டீரியா இருக்கும் என்றால் 14% ஈ கோலி பாக்டீரியாக்கள் இருக்கும் என அரிஸோனா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அந்த டவலை உரிய பராமரிப்பின்றி அப்படியே உடலில் தேய்க்கும் போது பாக்டீரியாக்கள் உடலில் தொற்றி உடல் நலத்தை பாதிக்கக் கூடும் என கூறியுள்ளன. எனவே இனியும் விழித்துக்கொண்டு எப்படிப் பராமரிப்பது என்பதில் கவனம் செலுத்துங்கள்.
எப்படிப் பராமரிப்பது - வழிகள் இதோ :
அடிக்கடி துவைத்தல் : மூன்று அல்லது ஐந்து பயன்பாட்டிற்குப் பிறகு துவைத்துவிடுவது அவசியம். நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துதலைத் தவிறுங்கள். அதேபோல் கெர்பா ஆய்வுப் படி சாதாரண டிடர்ஜெண்ட் பவுடர்களும் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கின்றன என்பதால் சுடு தண்ணீரில் துவைத்து அலசுவது அவசியம்.
ஈரத்தோடு வைக்க வேண்டாம் : பாத்ரூமிற்கு உள்ளே துடைத்துவிட்டு ஈரத்தோடு தொங்க விடாதீர்கள். வெயில் படும்படியோ அல்லது காற்றோட்டமாகவோ காய வைத்து பின் உள்ளே எடுத்து வையுங்கள்.
வினிகர் : ஸ்டைலிஸ் லொரைன் லியா டிப்ஸாக டவல் துடைக்கும் போது ஒயிட் வினிகரை டிடர்ஜெண்டுடன் கலந்து டவலைத் துடைத்தால் கிருமிகள் அழியும் . டிடர்ஜெண்ட் கெமிக்கல்களும் டவலில் தங்காது.
பகிர்தல் தவறு : உங்கள் டவலை மற்றவர்களுடன் பகிர்வதோ, மற்றவர்களின் டவலை நீங்கள் பகிர்வதோ முற்றிலும் தவறு. இந்த பழக்கம் அலர்ஜி தேவையற்ற ஒவ்வாமைகளை உண்டாக்கலாம்.
பார்க்க :
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health