• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • டிஜிட்டல் திரையில் அதிக நேரம் செலவிடுவோருக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் - ஆய்வில் தகவல்!

டிஜிட்டல் திரையில் அதிக நேரம் செலவிடுவோருக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் - ஆய்வில் தகவல்!

டிஜிட்டல் திரையில் அதிக நேரம் செலவிடுவோருக்கு பக்கவாதம்

டிஜிட்டல் திரையில் அதிக நேரம் செலவிடுவோருக்கு பக்கவாதம்

எந்நேரமும் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போனுடன் இருக்கும் பலருக்கு இதனால் மிக விரைவில் பக்கவாதம் உண்டாகும் என எச்சரிக்கிறது.

  • Share this:
மாறிவரும் நமது வாழ்க்கை சூழலால் ஏராளமான பாதிப்புகளை உடல் அளவிலும், மனதளவிலும் நாம் அடைந்து வருகிறோம். குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நமது வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போனுடன் இருக்கும் பலருக்கு இதனால் மிக விரைவில் உண்டாகும் பாதிப்புகள் பற்றி தெரிவதில்லை.

அதிக நேரம் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் கழுத்து வலி, உடல் பருமன், கண் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும். சமீபத்தில் நடந்த ஆய்வில், அதிக நேரம் டிஜிட்டல் திரையில் நேரம் செலவிடுவோருக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என கண்டுபிடித்துள்ளனர். தற்போது 60 வயதுக்கும் மேல் உள்ளவர்கள் அதிக நேரம் டிஜிட்டல் திரையில் நேரம் செலவிட்டால் பக்கவாதம் ஏற்படுவதற்கான பாதிப்பு மிக அதிகமாம்.

அமெரிக்கன் ஸ்ட்ரோக் அசோசியேஷன் வெளியிட்ட ஸ்ட்ரோக் ஜர்னல் என்கிற நாளிதழில் இதை பற்றி விரிவான அறிக்கையை தந்துள்ளனர். தினமும் டிஜிட்டல் திரையில் 1 மணி நேரம் செலவிட்டால் உங்கள் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழப்பதற்கு சமம் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதனால் இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படலாம்.

லண்டனை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய மற்றொரு ஆய்வில், இப்படி அதிக நேரம் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் பக்கவாதம் உருவாகும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக 2 மணி நேரம் தொடர்ந்து டிஜிட்டல் திரையை பார்ப்பவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாம். மேலும் டிஜிட்டல் கேட்ஜட்களுக்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பின் அளவு 20 சதவீதம் உயரும்.



 

இந்த ஆய்வின் முடிவுகளை படிக்கும் யாராக இருந்தாலும், தற்போதைய இளம் தலைமுறையினர் எந்த அளவுக்கு இந்த பாதிப்புகளை பெறுவார்கள் என்று உணரலாம். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இதன் பாதிப்பு பெரிதளவில் இருக்கும். கொரோனா பெருந்தொற்றுக்கு பின் டிஜிட்டல் திரையின் பயன்பாடு இளம் தலைமுறையினரிடம் அதிகமான அளவில் உள்ளதால் எண்ணில் அடங்காத ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சொரியாசிஸ் குணப்படுத்த முடியாத நோயா..? இதற்கான சிக்கிச்சை முறைகள் என்ன..? `

டிஜிட்டல் திரையில் இருந்து வரும் நீல நிற லைட் உங்கள் உடலில் மெலடோனின் அளவை குறைத்து ஹார்மோன் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனால் உங்களின் தூக்கத்தின் சுழற்சியில் மாறுபாடு உருவாகிறது. இதுவும் உங்கள் உடல் நலனில் கேடு விளைவிக்கும். இந்த பாதிப்புகள் அனைத்தையும் நீங்கள் தடுக்க வேண்டுமென்றால், இதற்கு ஒரு வழி தான் உள்ளது.



டிஜிட்டல் திரைகளை பயன்படுத்தினால் அவ்வப்போது இடைவேளை எடுத்து கொள்ளுங்கள். அதே போன்று தினமும் உடற்பயிற்சி செய்து வருவதால் இதன் பாதிப்புகளை குறைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நல்ல ஆரோக்கியத்தை பெற அவசியம் டிஜிட்டல் திரையின் பயன்பாட்டை குறைத்தாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: