COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் நுரையீரல் எச்சரிக்கும் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன..?

நுரையீரல்

சாதாரண நுரையீரலுடன் ஒப்பிடும்போது, கோவிட் நோயாளிகளின் நுரையீரல் மேக்ரோபேஜ்கள் எனப்படும் நோயெதிர்ப்பு உயிரணுக்களை கொண்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 • Share this:
  கொரோனா தொற்றின் பலமே நுரையீரலை பாதிப்பதுதான். உயிர்வாழவதற்கு ஆதாரமாக இருக்கும் சுவாசப்பாதையில் தொற்றை தீவிரப்படுத்தி உயிரைப் பறிக்கும் இந்த நோய் ஆரம்பத்தில் நுரையீரலை பாதித்தால் எந்த மாதிரியான அறிகுறிகளை உண்டாக்கும் என்று பார்க்கலாம்.

  முதலில் கொரோனா வைரஸ் வாய் , மூக்கு, கண்கள் வழியாக மனிதனை தொற்றிக்கொள்கிறது. பின் அது கொஞ்சம் கொஞ்சமாக பயணித்து சுவாசப்பாதையை சென்றடைந்து தன்னை பலப்படுத்திக்கொள்கிறது. பின் நுரையீரலை மொத்தமாக ஆக்கிரமித்துக்கொண்டு தீவிரமான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

  அறிகுறிகள் என்ன?

  அப்படி அது ஆரம்பத்தில் உங்கள் நுரையீரலை தாக்கும்போதுதான் நெஞ்சு எரிச்சல், தொண்டை கரகரப்பு. வறட்டு இருமல், திடீரென மூச்சுவிடுவதில் சிரமம், நுரையீரலின் கீழ்பகுதியில் வலி, நெஞ்சு வலி , ஏற்கனவே நிமோனியாவால் பாதிக்கப்பட்டால் நுரையீரலில் வீக்கம் உண்டாகி மூச்சு விடுவதில் சிரத்தை உண்டாக்கும்.  தொற்று பாதிக்கப்பட்ட நுரையீரல் எவ்வாறு செயல்படும்..?

  சாதாரண நுரையீரலுடன் ஒப்பிடும்போது, கோவிட் நோயாளிகளின் நுரையீரல் மேக்ரோபேஜ்கள் எனப்படும் நோயெதிர்ப்பு உயிரணுக்களை கொண்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வாயு பரிமாற்றத்திற்கு முக்கியமான அல்வியோலர் எபிடெலியல் செல்களை SARS-CoV-2 வைரஸ் அழிப்பது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த அழற்சி பாதிப்புகள் சேதமடைந்த நுரையீரலில் உள்ள உயிரணுக்களின் திறனையும் பாதிக்கிறது.

   

  கோவிட் -19 நுரையீரலில் விரைவான வடுவை உருவாக்கும் நோயியல் ஃபைப்ரோபிளாஸ்ட்கள் எனப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குறிப்பிட்ட ஃபைப்ரோபிளாஸ்ட் செல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஃபைப்ரோபிளாஸ்ட் செல்கள் ஃபைப்ரோஸிஸ் எனப்படும் வடு திசுக்களால் நுரையீரலை நிரப்பும்போது, நுரையீரல் வாயு பரிமாற்றத்தில் ஈடுபடும் உயிரணுக்களுக்கு குறைந்த இடத்தை அளிக்கிறது. இதனால் நிரந்தரமாக சேதமடைகிறது.

  MK Stalin : மாஸ்க் எப்படி போடனும்..? சொல்லிக்கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

  அதிக பாதிப்பு யாருக்கு..?

  இந்த பாதிப்புகள் வயதான பெரியவர்கள் மற்றும் இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற பிற உடல்நல பாதிப்புகளைக் கொண்டவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் கடுமையான அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்..?

  உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சுவாச பயிற்சிகள் உதவும்.

  உங்கள் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்கவும் - உங்கள் ஆக்ஸிஜன் அளவை தெரிந்துகொள்ள ஆக்சிமீட்டர் -ஐ பயன்படுத்தவும். ஆக்ஸிஜன் அளவு எப்போதும் 94-100 க்கு இடையில் இருக்க வேண்டும்.

  zinc நம்மை காக்குமா? வெற்றிலைக்கும் துத்தநாகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? ஜிங்க் பற்றிய முழுமையான தகவல்..!

  ஜாகிங், விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்றவற்றில் ஈடுபடுங்கள். இவை உங்கள் நுரையீரல் சிறப்பாக செயல்பட உதவும்.

  உங்கள் நுரையீரலுக்கு உதவும் மற்றொரு முக்கியமான குறிப்பு ஒரு நல்ல உணவுப் பழக்கத்தை பின்பற்றுவதுதான். உங்கள் உணவில் அதிக வாழைப்பழங்கள், ஆப்பிள், தக்காளி மற்றும் திராட்சை (ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் உணவுகள்) சேர்க்கவும்.  உங்கள் நுரையீரல் நச்சுத்தன்மையை நீக்க உதவும் யோகா பயிற்சிகளை முயற்சி செய்யலாம். யோகா ஆசனங்களில் சில: சுகாசனா (குறுக்கு கால் உட்கார்ந்த போஸ்), புஜங்காசனா (கோப்ரா போஸ்), மத்ஸ்ய ஆசனம் (மீன் போஸ்), பத்ம சர்வங்கசனா (தாமரை தோள்பட்டை நிலை).

   
  Published by:Sivaranjani E
  First published: