இரைப்பை புற்றுநோய் என்பது வயிற்றில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் உருவாகும் ஒரு நிலை. வயிற்றில் ஏற்படும் அசாதாரணங்கள் முழு செரிமான அமைப்பிலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஸ்டொமக் கேன்சர் என்பது இரைப்பை உணவுக்குழாய் சந்திப்பில் இருந்து தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஸ்டொமக் கேன்சர் ( Stomach Cancer ) அதாவது இரைப்பை புற்றுநோயில் கேன்சர் செல்கள் மேலும் வளர்ச்சியடைவதில் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்று புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு சிறந்த வாழ்க்கை தரத்தை உறுதி செய்ய சில மாற்றங்கள் தேவைப்படுவதாக கூறுகிறார்கள் நிபுணர்கள். வயிற்றுப் புற்றுநோயின் அபாயத்தை டயட் எவ்வாறு பாதிக்கிறது மற்றும் பசி கிச்சைக்கு பின் டயட்டை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதற்கான நிபுணரின் அறிவுறுத்தலை இங்கே பார்க்கலாம்.
ஸ்டொமக் கேன்சர் அபாயத்தை டயட் எப்படி அதிகரிக்கிறது?
- அதிக உப்பு உட்கொள்ளல், பல பாரம்பரிய சால்ட்-ப்ரிசர்வ்ட் உணவுகளான க்யூர்ட் மீட், உப்பு சேர்க்கப்பட்ட மீன் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடும் ஒரு நபர் இரைப்பை புற்றுநோயை சந்திப்பதற்கான அதிக ஆபத்தில் இருக்கிறார்.
Also Read : PCOS பிரச்சனை உள்ளவரா நீங்க..? சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத உணவுகள்
- மனிதர்கள் தங்கள் டயட் பழக்கத்திலிருந்து N-nitroso காம்பவுண்ட்ஸ்களுக்கு ஆளாகிறார்கள். காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற உணவுகளின் இயற்கையான கூறுகளான நைட்ரேட்ஸ்களை உட்கொண்ட பிறகு இந்த N-nitroso கலவைகள் நம் உடலில் உருவாக்கப்படுகின்றன. அதே போல N-nitroso காம்பவுண்ட்ஸ்கள் சில வகையான சீஸ் மற்றும் cured meat-களில் உணவு சேர்க்கையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
- ஒரு ஹை-pH சூழல் மற்றும் அதிக அளவு கேஸ்ட்ரிக் நைட்ரைட் ஆகியவை புற்றுநோய்க்கு முந்தைய இரைப்பை புண்களுடன் தொடர்புடையவை. வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் கடல் உணவுகள் மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றுடன் வயிற்று புற்றுநோய் ஆபத்து இணைக்கப்பட்டுள்ளது.
- பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான sausages, bacon, ham மற்றும் சால்ட்டட், ஃபெர்மென்ட்டட் அல்லது க்யூர்ட் மீட்ஸ்கள் போன்றவை புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கான உறுதியான சான்றுகளை கொண்ட Group 1 carcinogens-களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் புகையிலை மற்றும் ஆல்கஹாலும் அடக்கம்.
- அதிக உடல் எடையும் இரைப்பை புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது
ஸ்டொமக் கேன்சர் சிகிச்சைக்கு பிறகு பின்பற்ற வேண்டிய 3 முக்கிய டயட் மாற்றங்கள்:
- அதிக புரதம் மற்றும் கொழுப்பை உள்ளடக்கிய உணவுகளை கொஞ்சமாக அதே சமயம் குறிப்பிட்ட சீரான இடைவெளியில் சாப்பிட (ஒரு நாளைக்கு 6 முறை) சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. திரவ மற்றும் திட உணவுகளை தனித்தனியாக சாப்பிடுவது அவசியமாக இருக்கலாம். சிம்பிள் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ள உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் அவற்றால் டம்பிங் சிண்ட்ரோம் ஏற்படலாம்.
Also Read : இந்த 3 பொருள் இருந்தா போதும்.. PCOS எடையை ஈஸியா குறைக்கலாம்..!
- டம்பிங் சிண்ட்ரோம் (Dumping syndrome) பொதுவாக குமட்டல், பலவீனம், அதிக வியர்வை, மயக்கம் மற்றும் சாப்பிட்ட உடனேயே வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றை அறுவைசிகிச்சைக்கு பிறகான முதல் சில ஆண்டுகளில் ஏற்படுத்துகிறது. இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி12, ஏ, டி, ஈ மற்றும் கே, புரதம், கால்சியம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றின் தவறான உறிஞ்சுதலின் (malabsorption) விளைவாக துர்நாற்றம் கொண்ட மலம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
-அதே போல வயிற்று புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று இரும்புச்சத்து குறைபாடு. இது ரத்த சோகையை ஏற்படுத்துகிறது. இரும்புச்சத்து குறைபாட்டிற்கான சிகிச்சையானது, நிலைமை எவ்வளவு கடுமையானது என்ற தீவிரத்தை சார்ந்தது. சூழ்நிலையை பொறுத்து, Elemental iron-ஐ வாய்வழியாகவோ அல்லது ஊசி மூலமோ கொடுப்பதை உள்ளடக்கியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cancer symptoms, Healthy Food, Stomach Pain