Home /News /lifestyle /

இதய நோய்க்கான வாய்ப்பு ஆண்களைவிட இளம் பெண்களுக்கு குறைவு.. ஏன் தெரியுமா..?

இதய நோய்க்கான வாய்ப்பு ஆண்களைவிட இளம் பெண்களுக்கு குறைவு.. ஏன் தெரியுமா..?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Heart Care | தி லான்செட்டின் சமீபத்திய ஆய்வின்படி, ஆண்களுடன் ஒப்பிடும்போது இளம் வயது பெண்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தி லான்செட்டின் சமீபத்திய ஆய்வின்படி, ஆண்களுடன் ஒப்பிடும்போது இளம் வயது பெண்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த, நடுத்தர மற்றும் உயர் வருமானம் உள்ள நாடுகளில் இதய நோயால் பாதிக்கப்படுவோருக்கும், ஆபத்துக் காரணிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 21 நாடுகளைச் சேர்ந்த 1.56 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

    ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

    கடந்த 10 ஆண்டுகளாக 1.56 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 4.7 சதவீத பெண்களும் 7.6 சதவீத ஆண்களும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வயதின் அடிப்படையில் வரிசைபடுத்தபட்ட போது இளம் பெண்களை விட ஆண்களுக்கு இதய நோய் பாதிப்புகளுக்கான வாய்ப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 1000 பெண்களில் 5 நபர்களுக்கும், ஆண்களில் 1000 பேருக்கு 8 ஆண்களுக்கும் இதய நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஆய்வு முடிகளில், "ஆண்களை விட பெண்களுக்கு, குறிப்பாக இளைய வயதில் இதய பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு பெரிய அளவிலான வாஸ்குலார் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து விகிதங்கள் மிகவும் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Read More | சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா கெட்டதா..? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன..?


    ஆண், பெண்களுக்கான ஆபத்து காரணிகள் என்னென்ன?

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் வயதுக்கு ஏற்ப சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் எனப்படும் இதயம் துடிக்கும் போது தமனிகளில் ஏற்படக்கூடிய அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் பெண்களைப் பொறுத்தவரை இது சராசரியாக குறைவாகவே காணப்படுகிறது. இதேபோல் உணவுக்கு முந்தைய குளுக்கோஸ் அளவுகள் இரு பாலினருக்கும் வயதுக்கு ஏற்ப அதிகரித்தாலும், 55-70 வயது வரையுள்ள ஆண்களை விட பெண்களுக்கு குறைவாகவே காணப்படுகிறது.



    பிஎம்ஐ-யை விட தொப்பை அளவைத் தெளிவாக கணக்கிட உதவும் வெஸ்ட் டூ ஹிப் விகித (waist-to-hip ratio) முறையை பயன்படுத்திய போது, அனைத்து வயது ஆண்களையும் விட பெண்களுக்கு தொப்பை அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆண்கள் முன்பை விட தற்போது அதிகமாக மதுக்குடிப்பது, புகைப்பிடிப்பது, உடற்பயிற்சி இன்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



    ஆனால் ஆண்களை விட பெண்களின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் காணப்படுகிறது. அதேபோல் அனைத்து வயதான பெண்களிடமும் மனச்சோர்வு காணப்படுவதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஒரே மாதிரியான ஆபத்து காரணிகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கெட்ட கொழுப்பு, மனச்சோர்வு ஆகியவை ஆண்களுக்கு இதய நோய் பாதிப்புகளை அதிகரிக்கக்கூடிய முக்கிய காரணிகளாக உள்ளன. பெண்களுக்கு அதிக ரத்த அழுத்தம், வயிற்று பருமன் ஆகியவை இருதய நோய்கள் ஏற்பட முக்கிய காரணிகளாக உள்ளன.

    பாதிப்பில் இருந்து தப்பிக்க வழிகள் என்ன?

    ஆண்களுக்கு இளம் வயதிலேயே அதிக அளவு வளர்சிதை மாற்ற ஆபத்து காரணிகள் உள்ளன, எனவே ஆண்கள் இளம் வயதிலேயே இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய பயிற்சிகளில் ஈடுபட வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.



    மாதவிடாய் காலத்திற்கு முந்தைய அல்லது பிந்தைய வயதில் இருக்கும் பெண்களுக்கு கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்துக் காணப்படுகிறது. எனவே மெனோபாஸுக்கும் பெண்களுக்கான இருதய நோய் ஆபத்துக்களுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா? என்பதை கண்டறிய வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Heart attack, Lifestyle

    அடுத்த செய்தி