• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அடுத்த 10 ஆண்டுகளில் 18-24 வயதுக்குட்பட்டவர்களுக்கு காத்திருக்கும் அபாயம்.!

அடுத்த 10 ஆண்டுகளில் 18-24 வயதுக்குட்பட்டவர்களுக்கு காத்திருக்கும் அபாயம்.!

உடல் பருமன்

உடல் பருமன்

18 - 24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இந்த வயதில் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை சந்திக்கிறார்கள்.

  • Share this:
நீடிக்கும் கோவிட் தொற்று காரணமாக பலர் வீடுகளுக்குளேயே அடைபட்டு இருக்கும் நிலையில், அதிகரித்த மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் உள்ளிட்ட வாழ்க்கை முறை கோளாறுகளின் அபாயம் அதிகரித்துள்ளது. ஒழுங்கற்ற உணவு, நீண்ட வேலை நேரம் காரணமாக அதிக நேரம் உட்கார்ந்திருக்கும் தேவை, உடல் செயல்பாடுகள் குறைந்து காணப்படுவது உட்பட பல இதற்கு வழிவகுக்கின்றன.

தொற்றுநோய் காலத்தில் காணப்படும் மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாக எடை அதிகரிப்பு இருக்கிறது. பல கூடுதல் உடல்நலக் கோளாறுகள் ஏற்படஉடல் பருமன் ஒரு முக்கிய காரணமாக இருந்துவரும் நிலையில், இனி வரும் ஆண்டுகளில் குறிப்பாக இளம் வயதினர் எடை அதிகரிக்கும் அபாயத்தில் இருப்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தி உள்ளது.

இந்த ஆய்வு கூறுவது, "18 - 24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் தங்கள் வாழ்வின் அடுத்த 10 ஆண்டுகளில் வேறு எந்த வயதினரையும் ஒப்பிடும் போது அதிக எடை அல்லது உடல் பருமன் சிக்கலால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்". லண்டன் பல்கலைக்கழக கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் பெர்லின் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மற்றும் சாரிட் யுனிவர்சிட்டட்ஸ்மெடிசின் பெர்லின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது. The Lancet Diabetes and Endocrinology இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆய்வில் பாலினம், இனம், புவியியல் பகுதி அல்லது சமூக பொருளாதார பகுதியின் பண்புகள் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் மிக முக்கிய ஆபத்து காரணியாக இளம் வயதுடையவர்களில் எடை அதிகரிப்பு காணப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பது தெரிய வந்துள்ளது. அதே போல இளம் வயதினரிடையே எடை அதிகரிக்கும் ஆபத்து அதிகமாக இருந்தாலும் வயதுக்கு ஏற்ப இது படிப்படியாக குறைகிறது.

1998 மற்றும் 2016-ம் ஆண்டுகளுக்கு இடையில் இங்கிலாந்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்களின், முதன்மை பராமரிப்பு சுகாதார பதிவுகள் மூலம் எடை மாற்றங்களின் அபாயத்தை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். இந்த ஆய்வில் 65 - 74 வயதிற்குட்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது ,18 - 24 வயதுடையவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் அதிக எடை மற்றும் உடல் பருமன் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு சுமார் 4 மடங்கு அதிகம் என்பது கண்டறியப்பட்டது. அதிக எடை மற்றும் பருமன் உள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்ட இளம் வயதினரும் அதிக பிஎம்ஐ வகைக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

weight loss

இது அதிக எடை வகையிலிருந்து உடல் பருமன் வகைக்கு அவர்களை மாற்றுகிறது. அதிக எடை வகைக்கு (higher weight category) மாறுவதற்கான தனிப்பட்ட ஆபத்தை அறிவது அனைவருக்கும் முக்கியம். ஏனென்றால் உடல் பருமன் நம் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். சமூக வாழ்க்கை முறையை கருதிகள் கொள்ளும் போது பிஎம்ஐ மாற்றத்திற்கான மிக முக்கியமான காரணிகளில் வயதும் ஒன்றாகும். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது 18 - 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பிஎம்ஐ பெறும் அபாயத்தை தெளிவாக இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

புகை பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு என்ன காரணம்? ஆய்வில் கண்டுபிடிப்பு

18 - 24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இந்த வயதில் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை சந்திக்கிறார்கள். வேலைகள் அல்லது உயர்கல்விக்காக வீட்டை விட்டு வெளியேறி வெளியில் தங்குவதால் அவர்களை ஒட்டிக்கொள்ளும் சில உணவு பழக்கவழக்கங்கள் அவர்கள் உடல் எடை அதிகரிப்பு அபாயத்தில் வருவதற்கான காரணங்களில் முக்கியமானதாக இருக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: