கழுத்து வலியால் அவதியா? முக்கிய காரணமே இது தான்.. முதல்ல இதை மாத்துங்க!

கழுத்து வலியால் அவதியா? முக்கிய காரணமே இது தான்.. முதல்ல இதை மாத்துங்க!

கழுத்து வலி

தலையணைகளை முறையான இடைவெளியில் மாற்றாமல் பல ஆண்டுகளாக பயன்படுத்துவதே சில தொற்று உபாதைகள் மற்றும் வேறு சில சிக்கல்கள் ஏற்பட காரணமாக உள்ளன.

  • Share this:
காலை தூங்கி எழுந்ததுமே அடிக்கடி கழுத்து வலி மற்றும் கழுத்து சுளுக்கு அல்லது கழுத்து தசை பிடிப்பால் அவதி உண்டாகிறதா. பெட்டிலிருந்து எழுந்ததுமே பெட்ஷீட்களை மடித்து வைத்து, தலையணைகளை ஒழுங்குபடுத்தி, மெத்தை விரிப்பை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மாற்றும் பழக்கம் உடையவரா நீங்கள். அப்படி இருந்தும் படுக்கையில் தூசி மற்றும் கிருமிகள் உங்களை தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாக உணர்கிறீர்களா.?

எல்லாம் சரியாய் செய்தும் நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தில் கோட்டை விடுகீறீர்கள் என்று சுட்டி காட்டுகின்றனர் மருத்துவர்கள். ஆம் எல்லாவற்றையும் சரியாய் செய்யும் நீங்கள், தலையணைகளை முறையான இடைவெளியில் மாற்றாமல் பல ஆண்டுகளாக பயன்படுத்துவதே சில தொற்று உபாதைகள் மற்றும் வேறு சில சிக்கல்கள் ஏற்பட காரணமாக உள்ளதாக கூறுகின்றனர்.

புற்றுநோய் பாதிப்புடையவர்கள் சிறுநீரக பராமரிப்புக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவம் என்ன? பின்பற்றவேண்டியவை என்னென்ன?

சமீப காலமாக இளம் வயதினருக்கும் கழுத்து வலி மற்றும் கழுத்து எலும்பு தேய்மானம் உள்ளிட்ட கழுத்து சார்ந்த பல பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு நாம் ஒரே இடத்தில உட்கார்ந்து வேலை பார்ப்பது, கம்ப்யூட்டரை தொடர்ந்து பயன்படுத்துவது என பல்வேறு காரணங்களை கூறினாலும் மிக முக்கிய காரணமாக இருப்பது நாம் படுத்து தூங்கும் முறை தான். நாம் உறங்கும்போது நமது கழுத்து தசைகளையும், தோள்பட்டை தசைகளையும் நேர்கோட்டில் வைத்து உறங்காமல் இருப்பதுதான் இந்த கழுத்து வலி ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.



 

இந்த பிரச்னை வருவதே என்பது பெரும்பாலும் பல வருடங்களாக நாம் ஒரே தலையணைகளை உபயோகிப்பது. ஆண்டுகள் ஏற ஏற தலையணைகள் பெரும்பாலும் கல்லை போல கடினமாகி விடுகின்றன. மேலும் படுக்கும் போது நம் தலைப்பகுதியின் எடை மற்றும் தூங்கும் நிலைக்கு ஏற்றவாறு தலையணைகளில் சிறு சிறு பள்ளங்கள் ஏற்படுவதையும் பார்க்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட தலையணைகளை பயன்படுத்துவதால் நேரும் ஆபத்துகள் குறித்து நாம் கண்டுகொள்வதில்லை.

நல்ல நிலையில் இல்லாத தலையணைகள் கழுத்து தசைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது நாம் பயன்படுத்தும் தலையணைகளை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் தலையணைகளை மாற்றவில்லை என்றால், சில சிக்கல்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.



 

6 மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் பல் விளக்க பயன்படுத்தும் டூத்பிரஷ்களை அவசியம் மாற்ற வேண்டும் என்பதை போலவே, தூய்மையான சூழலில் படுத்து தூங்குவதற்கும், கழுத்து எலும்புகளில் ஏற்படும் உபாதைகளை தவிர்க்கவும் தலையணைகளை புதிதாக மாற்றி கொண்டே இருப்பதும் அவசியம் தான் என்கின்றனர் மருத்துவர்கள்.

 
Published by:Sivaranjani E
First published: