Home /News /lifestyle /

உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள தண்ணீரை தவிர வேறு எந்த பானங்களை குடிக்கலாம் ?

உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள தண்ணீரை தவிர வேறு எந்த பானங்களை குடிக்கலாம் ?

காட்சி படம்

காட்சி படம்

நீங்கள் ஒவ்வொரு நாளும் சரியான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்தால் பாதி உடல்நல பிரச்சனைகள் குணமாகிவிடும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    உங்கள் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்வது அவசியம். உங்கள் உடல் நச்சுகளை வெளியேற்றுவதற்கும், உடல் சீராக இயங்குவதற்கும் திரவங்களை பயன்படுத்துகிறது, இதனால் உங்கள் உடம்பில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதால் நீங்கள் போதுமான அளவு நீரை அருந்துவது இன்றியமையாத ஒன்றாகும். நீங்கள் ஒவ்வொரு நாளும் சரியான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்தால் பாதி உடல்நல பிரச்சனைகள் குணமாகிவிடும்.

    இருப்பினும், சில நேரங்களில், அடிக்கடி தண்ணீரை குடிப்பதால் ஒருவித சலிப்பு ஏற்படக்கூடும். அதனால் தண்ணீரை தவிர இருக்கும் மற்ற சில நீர் ஆதாரங்களான பானங்களை எடுத்துக்கொள்வது இதற்கு தீர்வாக இருக்கும். சில சுவையான, ஆரோக்கியமான பானங்கள் குடிப்பதன் மூலம் நீங்கள் நீரேற்றமாக இருக்கலாம். அவற்றை இங்கு காண்போம் .

    தேங்காய் தண்ணீர் : இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர் தண்ணீருக்கு மாற்றான ஆரோக்கியமான பானங்களில் ஒன்று. இனிப்பு சுவையுடன் இருக்கும் தேங்காய் தண்ணீரை தினமும் காலை வெறும் வயிற்றில் அருந்துவது எண்ணற்ற நன்மைகளை தருகிறது. மேலும் உங்கள் உடலுக்கு எலக்ட்ரோலைட்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவது மட்டுமின்றி உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக ஜிம் அல்லது வொர்க்அவுட்டிற்கு பிறகு, தங்கமாக இருக்கும் நேரத்திலும் தேங்காய் தண்ணீர் அருந்துவது மிகவும் நல்லது.

    பால்: பாலில் எண்ணிலடங்காத சத்துக்கள் இருப்பது நாம் அனைவரும் அறிவோம். இதில் உள்ள கால்சியம், புரதம் மற்றும் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. பசும் பால், பாதாம் பால்,தேங்காய் பால், சோயா பால் ஆகியவை உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

    வெள்ளரிக்காய் தண்ணீர் : ஒரு பாட்டிலில் தண்ணீரை நிரப்பி அதில் சில வெள்ளரி துண்டுகளை வெட்டி அதில் போடவும். நீங்கள் அதில் சில சியா விதைகளை சேர்க்கலாம். நீங்கள் தாகமாக இருக்கும்போதோ அல்லது குறிப்பிட்ட நேர இடைவெளிகளிலோ இந்த தண்ணீரைப் பருகிக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலை குளிர்விப்பதற்கும், அமிலத்தன்மையை கட்டுப்படுத்தவும் சிறந்தது. மேலும் இதில் சில எலுமிச்சை துண்டுகள், புதினா அல்லது துளசி இலைகளை சேர்ப்பதன் மூலம் இதன் சுவையை அதிகரிக்கலாம். இதேபோல் நீங்கள் வெள்ளரிக்காய்க்கு மாற்றாக ஸ்ட்ராபெர்ரி, கற்றாழை, பெர்ரி போன்ற சில பழங்களை சேர்த்து தண்ணீரை அருந்தலாம்.

    ஜூஸ் : ஆரோக்கியமான பானத்தைக் கொண்டு உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள விரும்பினால் பழச்சாறுகள் சிறந்த தீர்வாக இருக்கும். மாம்பழம், தர்பூசணி, அன்னாசி, மாதுளை, பீட்ரூட், கேரட் ஆகிய பழங்களில் இருந்து நீங்கள் ஜூஸ் தயாரித்து அருந்துவது உங்களை ஆரோக்கியமாக, நீரேற்றமாக வைத்துக்கொள்வதற்கான சிறந்த தேர்வாக இருக்கும்.

    ALSO READ : கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் இந்த நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது..தெரியுமா ?



     குறிப்பு : உங்கள் நீரேற்ற அளவைக் கண்காணிக்க வசதியான வழி உங்கள் சிறுநீரின் நிறத்தை கண்காணியுங்கள். நீரேற்ற நிலையில், உங்கள் சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இல்லையென்றால் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்பதால் அதன் மூலம் உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Health tips, Water

    அடுத்த செய்தி