மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, பரபரப்பான வேலை , மோசமான உணவுப் பழக்கம் போன்ற பல காரணங்களால் கருத்தரித்தல் என்னும் இயல்பான விஷயத்தை கூட சிக்கலாக்கியுள்ளது.
ஆராய்ச்சியின் படி, நீங்கள் குழந்தையைப் பெற முயற்சிக்கிறீர்கள் என்றால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது மிகவும் முக்கியம். கர்ப்பம் தரிக்கும் முயற்சியில், உடற்பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் நீங்கள் அதிக எடையுடன் இருக்கும்போது, கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே உடற்பயிற்சி அதோடு கூடிய ஆரோக்கியமான உணவும் அவசியம். இதற்கு யோகா சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் கருவுறாமை பிரச்சினைகளை கையாளும் போது யோகா பயிற்சி பாசிடிவ் ரிசல்டை தர உதவுகிறது.
யோகா எவ்வாறு கருவுறுதலை அதிகரிக்கிறது?
யோகப் பயிற்சிகள் கருப்பையின் ஆற்றலை தூண்டுகிறது. குறிப்பாக பின்புற தசைகளை பலப்படுத்துகிறது.
இது நச்சுக்களை வெளியேற்றி உடலை நச்சு நீக்கம் செய்து ஹெல்தியாக வைத்துக்கொள்கிறது.
இடுப்பு மற்றும் இடுப்பு தசைகளை சுற்றிலும் நெகிழ்வுத்தன்மையை உண்டாக்குகிறது.
கழுத்து தசைகள் வலுவாகவும், முதுகெலும்புக்கு நெகிழ்வுத் தன்மையை அளிக்கிறது.
இனப்பெருக்க உறுப்புகளுக்கு அதிக இரத்தம் பாய்ச்சுவதால் அதன் வேலையை தடையின்றி செய்ய உதவுகிறது.
உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனநிலை மாற்றங்களை தவிர்க்க உதவுகிறது.
பிசிஓஎஸ் பெண்கள் மாதவிடாயின்போது சந்திக்கும் வயிற்று வலியை சமாளிக்க உதவும் 7 பானங்கள்...
கருவுறுதலை அதிகரிக்க உதவும் யோகாசனங்கள் :
பச்சிமோட்டனாசனா (Paschimottanasana) - இந்த பயிற்சியானது கீழ் முதுகு, இடுப்பு மற்றும் தொடை எலும்புகளுக்கு ஆற்றலை தருகிறது. இதனால் கருப்பை செயல்பாடுகளை மேம்படுத்துகிறது மற்றும் உடலை தளர்த்தும்.
"விபரித கரணி" ( Viparita Karani ) - இந்த யோகாசனம் முதுகுவலியை நீக்குகிறது. இடுப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த போஸை செய்ய, சுவர் இருக்கும் இடமாக பார்த்து தரையில் படுக்கவும். பின் உங்கள் கால்களை சுவரின் மீது சாய்த்தவாறு மேல்நோக்கியபடி உயர்த்தவும். அப்படியே மெதுவாக இடுப்பையும் உயர்த்துங்கள். முடிந்தால் சுவரில் இருந்து கால்களை நீக்கி கைகளை இடுப்பில் வைத்தவாறு உயர்த்தி சில நிமிடங்கள் அப்படியே வையுங்கள். அப்போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியிடவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.