Home /News /lifestyle /

IVF சிகிச்சையில் இருக்கும் போது யோகா செய்யலாமா..? மருத்துவரின் விளக்கம்

IVF சிகிச்சையில் இருக்கும் போது யோகா செய்யலாமா..? மருத்துவரின் விளக்கம்

யோகா

யோகா

IVF-ன் போது யோகா சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேண உதவுகிறது. மேலும் இந்த சிகிச்சையின் போது யோகா செய்வதால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்படாது என்றாலும், நல்ல யோகா பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் அதை செய்ய வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
தற்போது தம்பதிகளிடையே குழந்தையின்மை அதிகரித்து வருகிறது. திருமணமாகி பல ஆண்டுகள் முயற்சித்தும் குழந்தை செல்வம் கிடைக்காத தம்பதிகள், IVF சிகிச்சையை தேர்வு செய்கிறார்கள். பல காரணங்களால் இயற்கையாக கருத்தரிக்க முடியாமல் இருக்கும் பெண்களுக்கு IVF சிகிச்சை பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. IVF சிகிச்சையில் கருமுட்டையை தனியாக பிரித்து, ஆய்வகத்தில் விந்தணுக்களுடன் சேர்த்து கருவுற வைக்கப்படுகிறது.

IVF சிகிச்சையின் போது மன அழுத்தம், பதற்றம், எரிச்சல், மனச்சோர்வு மற்றும் கவலை போன்ற பலவித உணர்ச்சிகளை சந்திக்க நேரிடலாம். இந்த அறிகுறிகளை வெற்றிகரமாக சமாளிக்கவும், IVF சிகிச்சையின் போது மன அமைதி பெறவும் உதவுகிறது யோகா. IVF சிகிச்சை பெறும் தம்பதிகள் நீங்கள் என்றால் யோகாவின் நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். IVF சிகிச்சையின் போது தம்பதிகளிடையே மன அழுத்தம் அதிகமாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

IVF-ன் போது யோகா சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேண உதவுகிறது. மேலும் இந்த சிகிச்சையின் போது யோகா செய்வதால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்படாது என்றாலும், நல்ல யோகா பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் அதை செய்ய வேண்டும். மன அழுத்தத்தை தணிக்க மற்றும் மேம்படுத்த, ஆரோக்கியமாக இருக்கவும் உதவும் யோகா IVF சிகிச்சையின் போது எப்படி பயனுள்ளதாக இருக்கிறது என்பதை கருத்தரிப்பு ஆலோசகர் டாக்டர் ரிது ஹிந்துஜா பகிர்ந்து கொள்கிறார்.முற்றிலும் பாதுகாப்பானது:

IVF-ன் போது உடலை மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது நிபுணர்களின் பரிந்துரை. தவிர ஆரோக்கியமான எடையை பராமரிக்க விரும்பும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் யோகா நல்லது. IVF-ன் போது யோகா செய்யலாமா என அச்சப்பட தேவை இல்லை. ஏனென்றால் இது பாதுகாப்பானது. கர்ப்பமாகிவிட்டால் சான்றளிக்கப்பட்ட யோகா பயிற்றுவிப்பாளரிடம் சென்று அவர் பரிந்துரைக்கும் யோகாசனங்களை பயிற்சி செய்யலாம்.

எடை தூக்குதல் அல்லது கார்டியோ பயிற்சியா? எடை இழப்பிற்கு முதலில் செய்ய வேண்டிய ஒர்க்அவுட் இதுதான்..!

மன அழுத்தத்தை குறைக்கிறது:

ஆழ்ந்த சுவாசம் மற்றும் தியானம் உள்ளிட்டவை யோகாவில் இருப்பதால் IVF -ன் போது பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், கவலை மற்றும் மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஏனென்றால் யோகா உடல்நிலையை மட்டுமல்ல மனநலம் அல்லது உணர்ச்சி நலனையும் சேர்த்தே மேம்படுத்துகிறது. IVF நேரத்தில் யோகா செய்வது மன அழுத்தத்தினால் ஏற்படும் பக்க விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது.IVF சிகிச்சை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது:

IVF சிகிச்சை வெற்றியடையும் விகிதங்களை யோகா மேம்படுத்துவதை ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. இடுப்பு மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல ரத்த ஓட்டம், குறைந்த மன அழுத்தம் உள்ளிட்ட நன்மைகளை வழங்கி ஆரோக்கியமான கருவுறுதல் செயல்முறைகளை யோகா ஊக்குவிக்கிறது.

66 நாட்களுக்கு இந்த 12 விஷயங்களை பின்பற்றினால் நோயின்றி நீண்ட காலம் ஜம்முனு வாழலாம்...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

யோகா மசில் டோன், ஸ்டாமினா மற்றும் ஃபிலெக்ஸிபிலிட்டி உள்ளிட்டவற்றை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தும். பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) அல்லது எண்டோமெட்ரியோசிஸ் போன்ற கருவுறாமை காரணிகளின் அறிகுறிகளுக்கு பங்களிக்கும் வீக்கத்தையும் குறைக்கும்.

IVF-ன் போது கருப்பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல மற்றும் சீரான ரத்த ஓட்டம் தேவை என்பதால் ஒருவர் ட்விஸ்டிங் யோகா போஸ்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். எந்த மாதிரியான யோகாவை செய்யலாம், செய்ய கூடாது என்பதற்கு கட்டாயம் நிபுணரின் வழிகாட்டுதல் தேவை என்பதை மறக்க வேண்டாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: IVF Treatment, Yoga

அடுத்த செய்தி