• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Yoga Day 2021 : பாலிவுட் பிரபலங்கள் பகிர்ந்துகொண்ட யோகா தின வாழ்த்து புகைப்படங்கள்..!

Yoga Day 2021 : பாலிவுட் பிரபலங்கள் பகிர்ந்துகொண்ட யோகா தின வாழ்த்து புகைப்படங்கள்..!

யோகா தினம் 2021

யோகா தினம் 2021

பரபரப்பான வேலை சூழலுக்கு நடுவே உடலையும் , மனதையும் சாந்தப்படுத்த உதவுவது யோகாதான். அதோடு உடலில் ஒட்டுமொத்த உறுப்புகளுக்கும் பாயும் இரத்த ஓட்டம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

  • Share this:
    யோகா உடலுக்கும் மனதிற்கும் ஒருசேர ஆரோக்கியத்தை கொடுக்கும் பயிற்சியாகும். இதன் நன்மைகளை உலகம் அறிய வேண்டும் என இதற்கென சிறப்பு நாளைக் கொண்டாட கொண்டவரப்பட்டதுதான் யோகா தினம். யோகா பிரபலங்களின் விருப்பமாக இருக்கிறது. காரணம் இதில் கிடைக்கும் மன அமைதிக்கு ஈடு இணையே கிடையாது.

    பரபரப்பான வேலை சூழலுக்கு நடுவே உடலையும் , மனதையும் சாந்தப்படுத்த உதவுவது யோகாதான். அதோடு உடலில் ஒட்டுமொத்த உறுப்புகளுக்கும் பாயும் இரத்த ஓட்டம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. எனவேதான் பிரபலங்களும் இந்த யோகா விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துகொள்கின்றனர். அந்த வகையில் யோகாவை கொண்டாடும் பிரபலங்கள் பகிந்துகொண்ட புகைப்படங்கள் உங்களுக்காக...

    ஆலியா பட் : என்றும் இளமை என்பதற்கு ஆலியா பொருத்தமாக இருப்பார். கல்லூரி பெண் முதல் குடும்ப பொருப்புகள் கொண்ட முதிர்ந்த பெண் என எந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்தக் கூடிய நடிகை. எப்போதும் சுருசுருபுடன் இருக்கும் இவருக்கு உடற்பயிற்சிகளும், யோகாவும்தான் மூச்சு. அதனால்தான் உடலை வில்லாக வளைத்த்து இளகுவாக வைத்திருக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt)






    அமிதாப் பச்சன் : பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான இவரைப் பற்றி சொல்ல வார்த்தைகள் தேவையில்லை. உலகறிந்த அவரின் படங்களே அவரின் திறமைகளையும், கடின உழைப்பையும் பேசும். அமிதாப்பச்சன் இன்றளவும் ஆக்டிவாக இருக்கிறார் எனில் அவர் தினசரி செய்யும் யோகாசனங்கள்தான் காரணம். அதை அவர் பல நேர்காணல்களிலும் கூறியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)






    கங்கனா ரணாவத் : கடின உழைப்பின் சிறந்த எடுத்துக்காட்டுதான் கங்கனாவின் வளர்ச்சி. கங்கனா இத்தனை வயதிலும் இளமையாக இருக்க உடற்பயிற்சிகள் மட்டுமன்றி யோகா முக்கிய காரணம். தான் யோகாவை விரும்பியது மட்டுமன்றி தன் குடும்பத்தில் உள்ளவர்களையும் யோகாவில் ஈடுபத்தியுள்ளார். அவ்வபோது அவர் போடும் யோகா போஸ்கள் மலைக்க வைக்கம். ஈஷா யோகா மையத்திலிருந்து அவர் எடுத்த இந்த படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Kangana Ranaut (@kanganaranaut)






    சாரா அலிகான் : துறையில் மிகவும் தேவைப்படும் நடிகைகளில் சாரா அலிகானும் ஒருவர். சாரா அலிகான் யோகாவில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அதற்கு அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவுகளே சாட்சி. அவர் பகிர்ந்து கொண்ட இன்றைய யோகா நிலை இதுதான்.



     




    View this post on Instagram





     

    A post shared by Sara Ali Khan (@saraalikhan95)






    நீங்களும் தினசரி பழக்கவழக்கங்களில் யோகாவையும் ஒன்றாக சேர்த்துக்கொள்வதால் எதிர்காலத்தில் நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். அதேசமயம் நோயால் பாதிகப்பட்டிருந்தாலும் அதன் தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் யோகாவிற்கு உண்டு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: