முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / டெல்டா முதல் ஓமைக்ரான் வரை… 2021-ஆம் ஆண்டில் மக்களை அச்சுறுத்திய கோவிட் தொற்றின் பயணம்...

டெல்டா முதல் ஓமைக்ரான் வரை… 2021-ஆம் ஆண்டில் மக்களை அச்சுறுத்திய கோவிட் தொற்றின் பயணம்...

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உலகையே புரட்டி போட்ட கோவிட் வைரஸ் தொற்று தற்போது இந்தியாவில் மற்றும் வேறு சில நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கோவிட் வைரஸ் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு உலகப் பொருளாதாரம் முதல் தனிநபர் வாழ்க்கை வரை பல விதங்களில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வரும் நிலையில், திடீரென்று இந்தியாவில் கோவிட் வைரஸால் கிட்டத்தட்ட 3000 நபர்கள் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதில் 32 பேர் தொற்று பாதிப்பால் இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டா பாதிப்புகள் குறைந்ததால் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அச்சுறுத்தி வருகிறது ஓமைக்ரான். தடுப்பூசிகளிலிருந்து பெறப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டி இந்த வேரியன்ட் அதிவேகத்தில் அதாவது டெல்டாவை விட 5 மடங்கு வேகத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

இன்னும் ஒரு வாரத்தில் 2022-ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில் 2020-ஆம் ஆண்டு துவங்கிய கோவிட் தொற்றின் ஆட்டம் இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனிடையே நடந்து கொண்டிருக்கும் 2021-ல் டெல்டா முதல் ஓமைக்ரான் வரை பல வேரியன்ட்கள் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. இறப்பு மற்றும் பரவலின் அடிப்படையில் 2020-ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு இன்னும் கொடியதாக இருந்தது துரதிர்ஷ்டவசமானது.

இந்தாண்டு கோவிட்-19 தொற்றின் கடுமையான இரண்டாவது அலையை இந்தியா எதிர்கொள்ள நேரிட்டது. 2021 இன்னு சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் கோவிட் தொற்றின் பயணம் மற்றும் இதனால் நம் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதையும் திரும்பி பார்ப்போம்.

தீவிரமான 2-வது அலையை ஏற்படுத்திய டெல்டா..

தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதால் 2021-ஆம் ஆண்டு நம்பிக்கையாக தான் துவங்கியது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை அளிக்கப்பட்டிருந்தாலும், உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போட இயலவில்லை என்பதால், சிதைக்க நேரம் கொடுக்காமல் அசுரர் உருவெடுத்தது டெல்டா வேரியன்ட். 2021 ஏப்ரல் - மே மாதங்களில் டெல்டா வேரியன்ட் காரணமாக உருவான 2-வது அலை நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை சிதைத்தது. மூர்க்கமாக பரவிய டெல்டா காட்டு தீ போல பரவியதால் நாடு முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் அதன் வாசலிலேயே உயிர் விட்டவர்கள் ஏராளம். சுடுகாட்டில் விடாமல் சிதைகள் எரியூட்டப்பட்டன.

இது தொடர்பான வீடியோக்கள் ஊடங்கங்களில் வெளியாகி காண்போரை பயத்திலும், பீதியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. டெல்டா தீவிரமாக பரவிய நேரத்தில் பெரும்பாலான இள வயதினர் தடுப்பூசி போட்டிருக்கவில்லை, பலரது உடல்கள் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கவில்லை. இந்த 2 காரணிகளின் கலவையே டெல்டா வேரியன்ட்டை ஆபத்தானதாக மாற்றியது. 9 மாதங்களுக்கு மேலாகியும் நாடன் பல இடங்களில் இன்னும் டெல்டா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

உச்சத்தை தொட்ட கரும்பூஞ்சை பாதிப்பு..

பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் நீரிழிவு நோயாளிகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது கரும்பூஞ்சை தொற்று. மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் ரத்தம் இருமல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. தொற்றுநோய்களின் மத்தியில், கோவிட்-19 நோயாளிகள் குணமடைய போராடிய போது அவர்களை இந்த கொடிய பூஞ்சை தொற்று தாக்கியதால் இந்த தொற்று பாதிப்புகள் உச்சத்தை எட்டத் தொடங்கின. 2-வது அலையின் பிற்பகுதியில் ஏற்பட்ட கரும்பூஞ்சை எழுச்சிக்கு ஸ்டீராய்டுகளின் பயன்பாடு மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டரில் காணப்பட்ட குறைபாடுகள் போன்றவை முக்கிய காரணமாகின.

Rewind 2021 : 2021-இல் உடல் எடையைக் குறைத்து நம்மை ஆச்சரியப்படுத்திய பிரபலங்கள்..!

100 கோடி கோவிட்-19 தடுப்பூசி டோஸ்..

நாடு மெல்ல மெல்ல 2-வது அலையிலிருந்து மீண்ட பின் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அக்டோபர் மாதத்திற்குள் 100 கோடி மக்களுக்கு குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. உலகின் பல பகுதிகளில், இரண்டாவது அலை இன்னும் தொடர்கிறது. இந்தியாவில் இப்போதும் கூட நாள்தோறும் தொடர்ந்து புதிய பாதிப்புகள் பதிவாகின்றன.

அச்சுறுத்தும் ஓமைக்ரான்..

டெல்டா பாதிப்புகள் குறைந்ததால் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அச்சுறுத்தி வருகிறது ஓமைக்ரான். தடுப்பூசிகளிலிருந்து பெறப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டி இந்த வேரியன்ட் அதிவேகத்தில் அதாவது டெல்டாவை விட 5 மடங்கு வேகத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் கோவிட்-19-க்கு எதிரான தடுப்பூசி கடுமையான நோய் மற்றும் தொற்று அல்லது மீண்டும் தொற்று ஏற்பட்டால் மரணத்தைத் தடுப்பதில் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதால் நாட்டில் ஓமைக்ரான் பாதிப்பு லேசான அறிகுறியுடன் தான் தற்போது வரை பதிவாகி வருகிறது. எனினும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2022-ல் முடிவுக்கு வருமா.?

குழந்தைகள், பெரியவர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதே பெருந்தொற்றை முடிவுக்கு கொண்ட வர உதவும் சிறந்த வழியாக பார்க்கிறார்கள் நிபுணர்கள். நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் வைரஸ் ஆபத்தான ஒன்றாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகிறது. ஒரு சில நாடுகள் இரண்டாவது பூஸ்டர் டோஸை தங்கள் மக்களுக்கு வழங்கி வரும் நிலையில், இன்னும் சில நாடுகள் தங்கள் மக்களுக்கு முதல் டோஸ் கூட வழங்க முடியாமல் திணறி வருவது கவலையளிக்க கூடியதாக இருக்கிறது. உலக மக்கள் அனைவருமே தடுப்பூசி போட்டு கொள்ளும் போது இது ஒரு தினசரி அடிப்படையில் நாம் கவலைப்படாத வைரஸாக மாறும் என்றும் நிபுணர்கள் கூறுகிறர்கள்.

First published:

Tags: CoronaVirus, Health, Omicron, YearEnder 2021