நாள் முழுவதும் மவுசை பிடித்து மணிக்கட்டு வலிக்கிறதா..? காரணங்களும்..சிகிச்சை முறைகளும்..!

மணிக்கட்டு வலி

உங்கள் மணிக்கட்டில் விறைப்பு தன்மை, பொருட்களைப் பிடிப்பதில் சிக்கல், கைகளை / மணிகட்டை மடிப்பதில் சிரமம், கைகளை நேராக வைக்கும் போது வலி இருந்தால் உடனடியாக பரிசோதித்து கொள்ள வேண்டும்.

  • Share this:
மணிக்கட்டு வலி என்பது வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, இளைய தலைமுறையினருக்கும் ஏற்படும் மிகவும் பொதுவாவன ஒரு வலியாக தற்போது உள்ளது. பல்வேறு காரணங்களால் மணிக்கட்டு வலி ஏற்படுகிறது. இவ்வலி ஊட்டச்சத்து குறைபாடு, மணிக்கட்டு பகுதியில் ஏற்படும் பிடிப்புகள், மணிக்கட்டில் அடிபட்டதன் அறிகுறி, நீண்ட நேரமாக கைகளை மடித்து வைத்திருப்பது அல்லது சில மருத்துவ நிலைமைகள் காரணமாக ஏற்படுகிறது.

ஒருசிலர் நீண்டகாலமாக மணிக்கட்டு வலியால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். சிலருக்கு இந்த வலி மிதமானதாக இருக்கும், சிலருக்கு கடுமையானதாக இருக்கும். மணிக்கட்டு என்பது ஒரே எலும்பு அமைந்திருக்கும் பகுதி அல்ல. சிறு எலும்புகள் சேர்ந்து அமைந்துள்ள கூட்டு பகுதியாகும். எனவே மணிக்கட்டில் ஏற்படும் வலிக்கான சரியான காரணத்தையும், அதற்கான சிகிச்சை செயல்முறையையும் நாம் தெரிந்து கொள்வது மிக முக்கியமானது.

கார்பல் டன்னல் நோய்க்குறி (Carpel Tunnel Syndrome)

கார்பல் டன்னல் நோய்க்குறி என்பது எலும்பின் தசைநார்கள் தடிமனாகி நரம்புகள் மீது அழுத்தம் கொடுக்கும் நிலையாகும். நரம்புகள் மீதான அழுத்தம் மணிக்கட்டு வலியை ஏற்படுத்துகிறது. இது மணிக்கட்டை பலவீனமாகவும், அசையாமலும், உணர்ச்சியற்றதாகவும் ஆக்கி விடுகிறது. நீரிழிவு நோய், மூட்டுவலி மற்றும் பிற நோய்கள் இந்த கார்பல் டன்னல் நோய்க்குறி ஏற்பட வழிவகுக்கும். இது தவிர தொடர்ச்சியாக எழுதுதல், டைப் செய்தல், கனமான பொருளை தூக்குதல் மற்றும் மணிக்கட்டு பகுதியை கொண்டு தேவையற்ற வழக்கத்திற்கு மாறாக செய்ய கூடிய பெரிய முயற்சி போன்றவை காரணமாக கூட இது ஏற்படும்.ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் (Osteoarthritis)

ஆஸ்டியோ-ஆர்த்ரைடிஸ் எனப்படும் கீல்வாதம் எலும்புகளின் எலாஸ்டிக் போன்ற குருத்தெலும்பு உறை சேதமடைவதால் ஏற்படுகிறது. இந்த உறை சேதமடைவதால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் உராய்ந்து, வலி, மூட்டு இறுக்கம் ஏற்பட்டு மூட்டைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனப்படும். இது இறுதியில் தசைகள் மற்றும் எலும்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. கூட்டு எலும்பு பகுதிகளில் இது ஏற்படுவது பொதுவானது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாருக்கேனும் இந்த பாதிப்பு ஏற்பட்ட இருந்தால் அந்த நீண்ட வரலாறு கூட இதற்கு காரணமாக இருக்கலாம். நடுத்தர வயதினர் மற்றும் வயதானோருக்கு இந்த பாதிப்பு ஏற்படுவது பொதுவானது.

முடக்குவாதம் (Rheumatoid Arthritis)

எலும்பு தொடர்பான நோய் அல்லது மூட்டுவலி காரணமாக முடக்கு வாதம் வருகிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது மூட்டு, தசைகள், இணைப்பு திசுக்கள் போன்றவற்றுடன் தொடர்புடையது. உடலின் பல்வேறு உறுப்புகளையும் பாதிக்ககூடியது. இந்த நிலையில் நோயெதிர்ப்பு மண்டலத்தால் திசுக்கள் உடைந்து போகின்றன. இந்த நிலை மூட்டு வலி, பலவீனம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இது கடுமையான மற்றும் நீண்ட கால மணிக்கட்டு வலியையும் ஏற்படுத்த கூடும்.

மணிக்கட்டு வலி ஏற்படுவதற்கான வேறு சில காரணங்கள்:

* டி குவெர்ன் நோய்

* மணிக்கட்டு தசைநாண் அழற்சி

* எலும்பு முறிவு

* நரம்பியல் காரணங்கள்

* டிரையாங்கிள் ஃபைப்ரோ கார்ட்டில்லேஜ் காம்ப்ளக்ஸ் இஞ்சூரி எனப்படும் கடும்காயம்

* மணிக்கட்டு சுளுக்கு

* கேங்க்லியன் நீர்க்கட்டிஉங்கள் மணிக்கட்டில் விறைப்பு தன்மை, பொருட்களைப் பிடிப்பதில் சிக்கல், கைகளை / மணிகட்டை மடிப்பதில் சிரமம், கைகளை நேராக வைக்கும் போது வலி இருந்தால் உடனடியாக பரிசோதித்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாள்பட்ட மணிக்கட்டு வலியின் துவக்க அறிகுறியாக இவை இருக்கலாம்.

உங்கள் பெற்றோரிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்க அழைத்து செல்லுங்கள்..!

சிகிச்சை எப்படி.?

வீட்டு வைத்தியம்: மணிக்கட்டு வலியை வீட்டிலேயே எளிதில் சமாளிக்கலாம். ஐஸ் தண்ணீர் அல்லது சூடு நீர் கொண்டு ஒத்தடம் கொடுப்பது இந்த வலியை சமாளிக்க உங்களுக்கு நன்றாக உதவக்கூடும்.

மணிக்கட்டு பகுதி அதிகம் அசையாமல் இருக்க ஸ்பிளின்ட் வகை பேண்டுகளை பயன்படுத்தி சப்போர்ட் செய்யலாம். இது உங்கள்

மணிக்கட்டில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்க உதவும்.

உங்கள் மணிக்கட்டில் உள்ள வலியைப் போக்க சில உடற்பயிற்சிகளும் உதவக்கூடும். ஆனால் மருத்துவ உதவி கட்டாயம் தேவைப்படும் வலிகள் இருக்கும் போது இது உதவாது.

தீவிர மணிக்கட்டு வலியைக் குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து மருந்துகளை பின்பற்றலாம்.

 
Published by:Sivaranjani E
First published: