உலகின் முதல் விர்சுவல் ரியாலிட்டி ஜிம் : ஒரு முறை சென்றால் போதும் ஜிம்மை மறந்துவிடுவீர்கள்!

நீங்கள் பார்க்கக் கூடிய அந்த மெய் நிகர் காட்சியில் உங்களை சூப்பர் மேனாகவும், அவென்ஞ்சர்ஸ் ஹீரோக்களாகவும் உணர்வீர்கள்.

உலகின் முதல் விர்சுவல் ரியாலிட்டி ஜிம் : ஒரு முறை சென்றால் போதும் ஜிம்மை மறந்துவிடுவீர்கள்!
உலகின் முதல் விர்சுவல் ரியாலிட்டி ஜிம்
  • News18
  • Last Updated: May 15, 2019, 1:11 PM IST
  • Share this:
உலகின் முதல் விர்ட்சுவல் ரியாலிட்டி ஜிம் சான் ஃபிரான்சிஸ்கோவில் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு முறை ஒர்க்கவுட் செய்யும் அனுபவம் கிடைத்தாலே இன்றைய உடற்பயிற்சிக் கூடங்களை வெறுத்துவிடு விடுவீர்கள் என சவால் விடுகிறது அந்நிறுவனம்.பிளாக் பாக்ஸ் விஆர் என்னும் இந்த உடற்பயிற்சிக் கூடத்தை பிரெஸ்டோன் லெவிஸ் மற்றும் ரையான் டிலுகா ஆகிய இருவர்தான் திறந்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு முதல் இதற்கான கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஆராய்ச்சிகள், தொழில்நுட்ப உத்திகளை ஆராய்ந்து திருப்தி அடைந்த பிறகு ஃபாக்ஸ் ப்ளாஸாவில் மார்ச் மாதம் திறந்துள்ளனர்.


இவர்கள் முதன் முதலில் ஆன்லைன் ஃபிட்னஸ் கருவிகள் மற்றும் ஃபிட்னஸ் சப்லிமெண்டுகளை மட்டும் விற்று டெமோ பார்த்துள்ளது. ஏனெனில் இன்று தொழில்நுட்ப சந்தைக்கு ஆன்லைன் விற்பனைதான் பெரும் லாபம் ஈட்டுகிறது என்று குறிப்பிடுகிறார் லிவிஸ்.இந்த உடற்பயிற்சிக் கூடத்தில் சென்றதும் நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கென தொழில்நுட்பங்கள் நிறைந்த 10க்கு 10 என்ற முறையில் குறிப்பிட்ட பாய்ண்ட் அளிக்கப்படும். அங்கு நின்று கொண்டு வி ஆர் ஹெட்செட் மற்றும் சில கருவிகள் அளிக்கப்படும். அதுதான் உங்களுடைய பொசிஷன், கைகளின் பொசிஷன் ஆகியவற்றைக் கண்காணிக்கும். அவற்றை அணிந்து கொண்டு சண்டைப் பயிற்சி மேற்கொள்வதைப்போல் உடற்பயிற்சி செய்வார்கள். அதில் உங்களுடன் சண்டையிடுவதற்கென கார்டூன் கதாபாத்திரங்கள் இருக்கும் அல்லது நீங்கள் உங்கள் எதிராளியாக உடன் பயிற்சி செய்யும் நபரையும் தேர்வு செய்து சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும். இதுதான் அந்த ஜிம்மின் சிறப்பு அம்சம். 
View this post on Instagram

 

A post shared by Black Box VR (@black_box_vr) on


நீங்கள் பார்க்கக் கூடிய அந்த மெய் நிகர் காட்சியில் உங்களை சூப்பர் மேனாகவும், அவென்ஞ்சர்ஸ் ஹீரோக்களாகவும் உணர்வீர்கள். அதில் கிட்டத்தட்ட மூழ்கிப் போவீர்கள். களைப்பும் தெரியாது என்கிறது பிளாக் பாக்ஸ்.

”இதில் தொடர்ந்து 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே அதிக அளவிலான கலோரிகள் குறைவதாகவும், இதயம் ஆரோக்கியம் பெறுகிறது” என டிலுகா குறிப்பிடுகிறார்.
இந்த அனுபவத்தை ஒரு முறை பெற்றுவிட்டாலே தற்போது பின்பற்றப்படும் உடற்பயிற்சிக் கூடங்களை விரும்ப மாட்டீர்கள் என்கிறது அந்நிறுவனம்.

இதையும் படிக்க...

உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

ஆண்களே ஃபிட்டான உடல் வேண்டுமா ? தினமும் இந்த உடற்பயிற்களை கடைபிடியுங்கள்!


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்