Home /News /lifestyle /

Yoga Day 2021: கருவுறுதலுக்கு உதவும் யோகாவின் நன்மைகள்.! 5 சிறந்த ஆசனங்கள்

Yoga Day 2021: கருவுறுதலுக்கு உதவும் யோகாவின் நன்மைகள்.! 5 சிறந்த ஆசனங்கள்

யோகா தினம்

யோகா தினம்

கருத்தரிக்கும் வாய்ப்புகளை மேம்படுத்த ஒரே வழி மருந்துகள் மட்டும் அல்ல, யோகாசங்கள் மூலம் நாம் கருவுறாமை பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

யோகாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க யோகா தினம் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஏராளமானோர் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், டாக்டர் அபர்வா சதீஷ் அமர்நாத் கருவுறுதலை மேம்படுத்துவதற்கு உதவும் யோகாசனங்கள் குறித்து விளக்கிய தகவல்களை இங்கு காண்போம்.,

சமீப காலமாக பல பெண்கள் கருவுறாமை பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள் மற்றும் கருத்தரிப்பதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. கருவுறாமைக்கு ஆளான பெண்கள் பல வகையான மருந்துகளை உட்கொள்ள வேண்டும், இந்த மருந்துகளால் பிற்காலத்தில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும்.

இருப்பினும் கருத்தரிக்கும் வாய்ப்புகளை மேம்படுத்த ஒரே வழி மருந்துகள் மட்டும் அல்ல, யோகாசங்கள் மூலம் நாம் கருவுறாமை பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
இது பாலியல் ஹார்மோன்களின் உற்பத்திக்கு பங்களிக்கும், இனப்பெருக்க உறுப்புகளைத் தூண்டும், எனவே கருவுறுதலை மேம்படுத்துகிறது.



கருவுறுதலுக்கான யோகாவின் நன்மைகள் :

1. சில யோகாக்கள் கருவுறுதல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

2. தினமும் யோகா செய்வதால் மன அழுத்தம் குறைகிறது. கருவுறுதலுக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை தீங்கு விளைவிப்பதால் இதனை சரி செய்ய யோகாசனங்கள் உதவுகிறது. இயற்கையாகவே கருத்தரிக்க சிறந்த வாய்ப்பைப் பெற மன அழுத்தத்தை குறைப்பது மிகவும் முக்கியம்.

கொரோனா 2-ம் அலையால் கர்ப்பிணி பெண்கள், புதிய தாய்மார்களின் பாதிப்பு இரட்டிப்பானது : ICMR அறிக்கை

3. கருவுறுதல் யோகாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. தினமும் காலை யோகா செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் இனப்பெருக்க அமைப்புக்கு ஒரு நல்ல இரத்த ஓட்டம் கிடைப்பதால் கருவுறுதல் பிரச்சனை தீர்க்கப்படுகிறது. மேலும் உங்கள் கருப்பையில் சிறந்த இரத்த ஓட்டம் இருப்பதால், இது உங்கள் கருப்பைகள் மற்றும் நுண்ணறைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு சென்று ஆரோக்கியமான நுண்ணறைகளை உருவாக்கி இனப்பெருக்கத்தை தூண்டுகிறது.

4. கூடுதல் எடை இருப்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கருவுறாமைக்கு ஒரு காரணியாகும். ஆரோக்கியமான உணவுடன், எந்தவொரு எடை இழப்பு திட்டத்திலும் யோகா ஒரு முக்கிய பகுதியாகும்.



5. தினமும் யோகா செய்து வந்தால் ஒரு ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி மற்றும் ஹார்மோன் சமநிலை ஏற்படும்.

6. உலகெங்கிலும் உள்ள ஆண்களில் அதிகரித்து வரும் பிரச்சினை விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு. உடல் பருமன், புகைபிடித்தல் போன்ற வாழ்க்கை முறைகள் காரணமாக இந்த பிரச்னை ஏற்படுகிறது. அன்றாட வாழ்க்கையில் யோகாவை இணைப்பது மன அழுத்தத்தை குறைக்கவும், விந்து உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக குழந்தையின்மை பிரச்சினையை யோகாசனம் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என்றும் பெரும்பாலான மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். யோகா ஆசிரியர் மூலம் முறையாக கற்றுக்கொண்ட பின்னர் யோகாசனம் செய்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். தினசரி சூர்ய நமஸ்காரம், பத்த கோனாசனம், கூர்மாசனம்,அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம், மூலபந்தாசனம்,சர்வாங்காசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்வதன் மூலம் உடலில் உள்ள குழந்தையின்மை குறைபாடு நீங்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: International Yoga day, Yoga day, Yoga Health Benefits

அடுத்த செய்தி