இன்று உலக தைராய்டு தினம் : ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கும் வழிகள்

தைராய்டு பெண்களுக்கு வந்துவிட்டால் குழந்தையின்மை, இதய நோய் போன்ற பிரச்னைகள் வருகின்றன.

news18
Updated: May 25, 2019, 7:14 PM IST
இன்று உலக தைராய்டு தினம் : ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கும் வழிகள்
இன்று உலக தைராய்டு தினம்
news18
Updated: May 25, 2019, 7:14 PM IST
ஒவ்வொரு வருடமும் மே-25 ஆம் தேதி தைராய்டு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தைராய்டு என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இருப்பினும் ஒருவருக்கு தைராய்டு வருகிறதெனில் அதன் அறிகுறிகளைக் கண்டுபிடிக்கவே முடியாது.

தைராய்டு பெண்களுக்கு வந்துவிட்டால் குழந்தையின்மை, இதய நோய் போன்ற பிரச்னைகள் வருகின்றன. சில தைராய்டு செல்கள் மற்ற உடல் உறுப்புகளையும் பாதிக்கும் என்கிறனர். எனவே தைராய்டை அண்டவிடாமல் உடலைப் பேணிக் காக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதைக் காணலாம்.
கட்டுக்கோப்பான , ஆரோக்கியமான உடல் : உடல் பருமனும் தைராய்டு புற்றுநோய் உருவாகக் காரணம் என 2013-ம் ஆண்டு யூரோப்பியன் ஜர்னல் ஆஃப் எண்டோக்ரினாலஜி வெளியிட்ட ஆய்வில் குறிப்பிட்டுள்ளனது. எனவே உடலை தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாக்க வேண்டும்.

ஐயோடின் அவசியம் : தைராய்டு கட்டுப்பாட்டில் இருக்க ஐயோடின் அவசியம். ஐயோடின் சத்து குறைவது பொதுவானப் பிரச்னையாக இருக்கின்றன. காரணம் பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் கடல் சார் உணவுகளை உட்கொள்வதால் ஐயோடின் சத்துக் குறையும் என்கின்றனர்.Loading...

நட்ஸ் வகைகள் : நட்ஸ் வகைகள் ஆரோக்கியமான உடல் எடைக்கு உதவும். அதில் உள்ள ஊட்டச்சத்துகளும் உங்களை தைராய்டு தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.

உடற்பயிற்சி : குறைந்த அளவிலான தைராய்டும் உடலுக்கு நல்லதல்ல. இதனை சரிசெய்ய உடற்பயிற்சி அவசியம். இது உடல் எடையைக் குறைக்கவும், கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும்.

ஆண்டி ஆக்ஸிடண்ட் அவசியம் : காய்கறிகள், பழங்கள் அதிகம் உட்கொள்ளலாம். அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட் தைராய்டிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...