அக்டோபர் 29ம் தேதி உலக பக்கவாத தினமாக அனுசரிக்கப்படுகிறது. பொன்னான நேரம் எனப்படும் பக்கவாதத்துக்கான அறிகுறிகள் தென்பட்ட முதல் 4.5 மணி நேரத்தில் செய்ய வேண்டியது என்ன என்று விளக்குகிறது இந்த தொகுப்பு.
பக்கவாதத்துக்கான அறிகுறிகள் தென்பட்ட முதல் 4.5 மணி நேரத்தை வீணடிக்காமல் முதலுதவி பெற்றால் 100% பாதிப்பு ஏதும் இல்லாமல் தவிர்க்கலாம் என நரம்பியல் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பக்கவாதம் என்றால் என்ன..?
ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லக்கூடிய ரத்தம் தடைபடுவதால் மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு அதன் காரணமாக உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழக்கின்றன. அதில் முக்கியமாக கை கால் ஒரு புறம் செயலிழந்து பக்கவாதம் ஏற்படும்.
அறிகுறிகள் எப்படி இருக்கும்..?
ஒரு கண் பார்வை திடீரென மங்கி போவது, ஒரு புறம் கை கால் பலமிழந்தது போல் தோன்றுவது, பேசும் போது பேச்சு குளறுவது, வாய் கோணலாக இருப்பது, பிறர் பேசுவது புரியாமல் போவது, மேலும் சமநிலை பாதிக்கப்படுவது அதாவது நேர் கோட்டில் பத்தடி நடக்க முடியாமல் போவது, நினைத்த பொருளை தொட நினைத்தும் தொட முடியாமல் போவது உள்ளிட்டவை பக்கவாதத்துக்கான முதல் கட்ட அறிகுறிகள் ஆகும்.
உடனடியாக செய்ய வேண்டியவை :
இந்த அறிகுறிகள் தென்பட்டு 4.5 மணி நேரத்துக்குள் சி டி ஸ்கேன் வசதி கொண்ட பெரிய மருத்துவமனைக்கு சென்றால் ரத்த உறைதலை தவிர்க்க RTPA என்ற மருந்து செலுத்தப்பட்டு ரத்தக்கட்டியை நீக்கி 100% பாதிப்பு இல்லாமல் தவிர்க்கலாம் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நரம்பியல் துறை இயக்குநர் லக்ஷ்மி நரசிம்மன் தெரிவிக்கிறார்.
கண்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள்..!
மது அருந்துதல், உடற்பயிற்சி இல்லாதது, சிகெரெட் பிடித்தல், சர்க்கரை நோய்ழ் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பழக்கங்கள் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட காரணமாகிவிடுகின்றன.
ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலும் அருகில் உள்ள நரம்புகள் பாதிக்காமல் இருக்க மருந்து கொடுக்கலாம். அதனை முதல் 4.5 மணி நேரத்தில் கொடுத்தால் மட்டும் செயல்படும். அதன் பிறகு கொடுத்தால் ரத்தக் கட்டை மருந்து மூலம் போக்க இயலாது என்கிறார் நரம்பியல் துறை பேராசிரியர் பாலசுப்ரமணியன்.
தமிழ்நாட்டில் பக்கவாத நோயாளிகளுக்கு முதலுதவி வழங்கி ரத்தக்கட்டை உடனே போக்க மருந்து கொடுக்கவும் தயார் நிலையில் மருத்துவக் கல்லூரிகள் உட்பட 88 அரசு மருத்துவமனைகள் உள்ளன. எனவே பொன்னான நேரம் எனப்படும் இந்த முதல் 4.5 மணி நேரத்தை வீணடிக்காமல் மருத்துவ உதவி பெற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health issues, Stroke