ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

World Pneumonia Day 2022 : குளிர்காலத்தில் குழந்தைகளை நிமோனியா தாக்க என்ன காரணம்..? பெற்றோர் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்..!

World Pneumonia Day 2022 : குளிர்காலத்தில் குழந்தைகளை நிமோனியா தாக்க என்ன காரணம்..? பெற்றோர் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்..!

உலக நிமோனியா தினம் 2022

உலக நிமோனியா தினம் 2022

World Pneumonia Day 2022 : குழந்தைகளின் இறப்புக்கும் காரணமாக இருக்கும் இந்த நிமோனியா தொற்று இருமல் , தும்மல் வழியாக காற்றில் பரவும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  World Pneumonia Day 2022 : குளிர்காலத்தில் அதிகமாக பரவும் நோய் தொற்றுகளில் நிமோனியாவும் ஒன்று. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா மூலமாகவும், ஹீமோபிலஸ் இன்ஃபுளூயன்ஸா பி பாக்டீரியா மூலமாக பரவும் இந்த பாக்ட்ரீயாக்களுக்கு குளிர்காலம் ஏதுவானது என்பதால் செழித்து வளர்கிறது.

  பொதுவான வைரஸான சைன்சிடியல் வைரஸ் காரணமாகவும் தொற்று ஏற்படுகிறது. எனவேதான் குளிர்காலத்திலும் இதன் தொற்று வேகம் அதிகமாக இருக்கிறது. இந்த தொற்றால் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு என்ன காரணம், அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

  நிமோனியா எப்படி பரவுகிறது..?

  குழந்தைகளின் இறப்புக்கும் காரணமாக இருக்கும் இந்த நிமோனியா தொற்று இருமல் , தும்மல் வழியாக காற்றில் பரவும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இது நுரையீரலையும் தாக்குகிறது.

  அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

  இப்படி நிமோனியாவின் தாக்கம் தீவிரமடையும்போது நுரையீரலை சளியால் நிரப்பி வீக்கமடைய வைக்கிறது. அதோடு காய்ச்சல், சளி, சுவாசப்பிரச்சனை, வறட்டு இருமல், சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ,நடுக்கம், பசியிழப்பு, சளியில் ரத்தம்,நெஞ்சு வலி, போன்ற அறிகுறிகளையும் உண்டாக்குகிறது.

  Also Read : நிமோனியாவை குணப்படுத்தும் ஆரோக்கிய உணவு முறைகள் இதோ!

  குழந்தைகளை நிமோனியா தாக்க என்ன காரணம்..?

  கண்கள் மற்றும் வாயை அடிக்கடி தொடுவது, வீட்டில் உள்ள பொருட்களை வாயில் வைத்து கடிப்பது போன்றவை பாக்டீரியா பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது. அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தாலும் நிமோனியா தொற்று எளிதாக தாக்கும். எனவே குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் இல்லாமல் பார்த்துக்கொள்வதும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் அவசியம்.

  நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணம். எனவே குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்தை தருவது அவசியம். குறிப்பாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதுதான் அவர்களுக்கான இயற்கை மருந்து. சரியான முறையில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு நோய் தொற்றை எதிர்த்துப் போராடும் சிக்கல் உள்ளது. எனவே பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்யுங்கள்.

  நிமோனியா போன்ற நோய் தொற்றை தவிர்க்க சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்துவது அவசியம். புகை , உட்புற காற்று மாசுபாடு இல்லாத வண்ணம் குழந்தைகளை பராமரிப்பது அவசியம். நிமோனியா அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை சென்று உரிய சிகிச்சை பெறுதல் அவசியம்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Kids Care, Pneumonia