• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உலக மருந்தாளுநர் தினம் 2021: இந்நாள் கொண்டாடப்படுவதற்கான காரணம் மற்றும் வரலாறு!

உலக மருந்தாளுநர் தினம் 2021: இந்நாள் கொண்டாடப்படுவதற்கான காரணம் மற்றும் வரலாறு!

உலக மருந்தாளுநர் தினம் 2021

உலக மருந்தாளுநர் தினம் 2021

உலக மருந்தாளுனர் தினத்தை சிறப்பாக கொண்டாட ஒவ்வொரு ஆண்டும், FIP அமைப்பு ஒரு புதிய டாபிக் அல்லது கருப்பொருளை (தீம்) வெளியிடுகிறது.

  • Share this:
உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுனர் (Pharmacists- ஃபார்மசிஸ்ட்ஸ்) வகிக்கும் பங்களிப்பிற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 25 (இன்று) உலக மருந்தாளுநர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மருந்தாளுநர்கள் மருத்துவ உலகை அனைவருக்கும் சிறந்த இடமாக மாற்ற அவர்கள் தங்கள் அனுபவம், அறிவு மற்றும் திறமையைப் பயன்படுத்துகிறார்கள். மருந்துகளை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதை மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். உலக மருந்தாளுனர் தினமானது சர்வதேச மருந்தியல் கூட்டமைப்பால் (FIP) தொடங்கப்பட்டது.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் நடந்த கூட்டத்தின் போது மருந்தாளுனர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் பணிகளை வெளிப்படுத்தவும், அவர்கள் வழங்கும் நல்ல ஆரோக்கிய நன்மைகள் மீது கவனத்தை ஈர்க்கவும் இந்த தினத்தை கொண்டாடுவது என FIP கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உலக மருந்தாளுனர் தினத்தை சிறப்பாக கொண்டாட ஒவ்வொரு ஆண்டும், FIP அமைப்பு ஒரு புதிய டாபிக் அல்லது கருப்பொருளை (தீம்) வெளியிடுகிறது.

இதன் மூலம் மருந்து வணிகத்தில் உள்ள தனிநபர்களும் அமைப்புகளும் தேசிய பிரச்சாரங்கள, சமூக திட்டங்கள், சிறப்பு கண்காட்சிகள், விரிவுரைகளை வழங்குவது, ஒரு ஃபார்மஸி மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பல வழிகளை எடுத்து கூறும் வகையில் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு செயல்பாட்டு நாளை (activity day) திட்டமிட்டு நடத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கையில் ஈடுபடலாம். இவற்றின் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தாங்கள் செய்யும் அற்புத பணிகளை ஃபார்மசிஸ்ட்ஸ்கள் முன்னிலைப்படுத்தலாம்.

ALSO READ |  உலக காண்டாமிருக தினம் : இந்த நாள் உருவான வரலாறும், காண்டாமிருங்கங்களை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளும்!

உலக மருந்தாளுநர் தினம் 2021-ன் தீம்:

நடப்பாண்டிற்கான தீம் "ஃபார்மஸி - எப்போதும் உங்கள் ஆரோக்கியத்திற்காக நம்பப்படுகிறது" (Pharmacy: Always Trusted For Your Health) என்பதாகும். இந்த ஆண்டிற்கான இந்த தீம் சுகாதாரத் துறையில் நம்பிக்கை மற்றும் மருந்தக நடைமுறையில் சிறப்பு கவனம் செலுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக FIP வெளியிட்டுள்ள அறிக்கையில், " சுகாதாரப் பாதுகாப்பிற்கும் நம்பிக்கை அவசியம். சுகாதாரப் பணியாளர்கள் மீதான நம்பிக்கை மற்றும் நோயாளிகளுக்கான ஆரோக்கிய விளைவுகளுக்கு இடையே ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பு உள்ளது. பல மருத்துவ அமைப்புகளில், நோயாளிகள் சிகிச்சையில் அதிக திருப்தியை பதிவு செய்துள்ளனர். மக்கள் தங்கள் சுகாதார நிபுணர்களிடம் அதிக நம்பிக்கை வைத்திருந்த போது மேம்பட்ட வாழ்க்கை தரத்தை அனுபவித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ |  உலகளாவிய சவால்களை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து எதிர்கொள்ளும் - பிரதமர் மோடி

இந்த நாள் வந்த வரலாறு:

நாம் முன்னர் கூறியபடி 2009-ல் இஸ்தான்புலில் நடந்த மருந்தியல் மற்றும் மருந்து அறிவியல் உலக மாநாட்டின் போது, சர்வதேச மருந்து கூட்டமைப்பு உலக மருந்தாளுநர் தினத்தை அனுசரிப்பது குறித்து முன்மொழிந்தது. மேலும் 1912-ஆம் ஆண்டு FIP நிறுவப்பட்ட செப்டம்பர் 25-ம் தேதி இந்த தினத்தை கடைபிடிப்பது என்றும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களின் பங்கு மற்றும் செயல்களை ஊக்குவிப்பதே என்றும் அறிவித்தது FIP. இந்த தினத்தில் உலகின் ஒவ்வொரு மூலையிலும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளரின் பங்கை அதிகமாக்கும் மற்றும் தெரியப்படுத்தும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய FIP ஊக்குவிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: