மாறிவரும் வாழ்க்கை முறையில் அதிகம் பாதிக்கப்படுவது நமது உடல் நலம் தான். தேவையற்ற உணவு பழக்கம், சீரற்ற தூக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகளால் உடலானது நேரடியாக பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக உடல் பருமன் ஏற்படுகிறது. இன்றைய உலகில் உடல் பருமனால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை முழுவதுமாக ஒழிப்பதற்காகவே 'உலக உடல் பருமன் தினம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
உடல் பருமன் விழிப்புணர்வு தினம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அக்டோபர் 11 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து மார்ச் 4 தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. பிறகு தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை உலகெங்கும் நடத்தப்பட்டு வருகிறது.
உலக உடல் பருமன் தினம் 2022:
'அனைவரும் ஆக்டிவ்வாக இயங்க வேண்டும்' என்பது தான் இந்த 2022 ஆம் ஆண்டின் உலக உடல் பருமன் தினத்திற்கான குறிக்கோளாகும். 2021 ஆம் ஆண்டில், 'எல்லோருக்கும் எல்லோரும் தேவை' என்கிற கருப்பொருளை கொண்டு இந்த தினத்தை பற்றிய பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. அதே போன்று பல தரப்பட்ட மக்களுக்கும் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வும் இதன் மூலம் சென்று சேர்ந்தது.
உலக உடல் பருமன் தினத்தின் வரலாறு:
உலக உடல் பருமன் தினமானது முதல் முறையாக 2015 ஆம் ஆண்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது உலக உடல் பருமன் கூட்டமைப்பு, உலக சுகாதார அமைப்பு மற்றும் உடல் பருமன் தொடர்பான லான்செட் கமிஷன் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்பட கூடிய இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
2016 ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன் பற்றிய பல தரவுகள் கிடைத்தன. பிறகு 2017ஆம் ஆண்டில் உலக உடல் பருமன் தினத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளானது மிகவும் முக்கியமானதாக இருந்தது.
Also Read : உடல் எடையை குறைக்க டிப்ஸ்
'உடல் பருமனுக்கு இப்போதே சிகிச்சை அளித்து பின்னர் விளைவுகளைத் தவிர்க்கவும்' என்பதே அதன் கருப்பொருளாகும். உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோயிலிருந்து விடுபட தேசிய மற்றும் உலக அளவில் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச அமைப்பானது இந்த குறிப்பிட்ட நாளைக் கொண்டு வந்தது. எனவே கூட்டு முயற்சியின் மூலம் மட்டுமே மக்கள் நீண்ட ஆயுளை பெற முடியும். மகிழ்ச்சியான, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க இது வழிவகுக்கும்.
Also Read : ஃபிட்னஸ் பாதையில் நாம் தவிர்க்க வேண்டிய 7 விஷயங்கள்!
உலக உடல் பருமன் தினத்தின் முக்கியத்துவம்:
இந்த கொரோனா கால கட்டத்தில் உலக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே தான் இந்த பிரச்சாரத்தின் நோக்கமாக "உடல் பருமனை குறைக்க, தடுக்க மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை இயக்க மற்றும் வழிநடத்த வேண்டும்" என்பதைக் கொண்டுள்ளது. கோடிக் கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக இந்த அமைப்பை மறுவடிவமைப்பு அல்லது மறுசீரமைக்கும் முயற்சியில் இது ஈடுபட்டுள்ளது. சத்தான உணவுகள், தொடர் உடற்பயிற்சிகள், நிம்மதியான வாழ்க்கை முறை ஆகியவை உடல் பருமனை விரைவில் போக்க கூடிய காரணியாக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.