புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஓட ஓட விரட்டுவது எப்படி? இதோ சில எளிய வழிகள்!

புகையிலை மொத்தம் 7,000 இரசாயணங்கள் உள்ளடக்கியிருக்கிறது. அதில் 69 இரசாயணங்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியது.

news18
Updated: May 31, 2019, 6:13 PM IST
புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஓட ஓட விரட்டுவது எப்படி? இதோ சில எளிய வழிகள்!
புகையிலைப் பழக்கத்தைக் கைவிட யோசனைகள்
news18
Updated: May 31, 2019, 6:13 PM IST
சிகரெட்டில் மொத்தம் 7,000 இரசாயணங்கள் இருக்கின்றன. அதில் 69 இரசாயணங்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. ஒருவர் வெளியிடும் சிகரெட் புகை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் காற்றில் கலந்து உலாவருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதை சுவாசிக்கும் மக்கள் நுரையீரல் புற்றுநோய், தொடர்ந்து மூச்சு விடுவதில் சிக்கல், நுரையீரல் செயலிழத்தல் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்கிறது இந்தியா சுகாதார அமைச்சகம். இப்படி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய புகைப் பழக்கத்தை விட்டுவிடுவதே நல்லது. இனியும் யோசிக்காமல் உடனே கைவிட இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.தேதியை தேர்வு செய்யுங்கள்:
நீங்கள் புகைப்பழக்கத்தைக் கைவிட முடிவு செய்துவிட்டால், ஒரு குறிப்பிட்ட நாளை தேர்வு செய்துகொள்ளுங்கள். அந்தத் தேதியை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் தெரியபடுத்துங்கள். அதற்கு ஏற்ப அந்த நாளுக்காக ஒவ்வொரு நாளும் உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

சுவிங்கம் சாப்பிடலாம்:

Loading...

தற்போது சிகரெட் பழக்கத்தைக் கைவிட பல சுவிங்கங்கள் விற்கப்படுகின்றன. அதை அடிக்கடி வாயில் மென்று கொண்டே இருங்கள். இது உங்கள் சிகரெட் போதையை குறைக்கும். புகைப்பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தாலும் இதை மென்று கொண்டிருந்தால் அந்த எண்ணம் மாறிவிடும்.புகையிலை இல்லா சமூகம்:

புகைப்பதைக் கைவிடுவதற்கென்றே சில குழுக்கள் இருக்கின்றன. அந்த குழுக்களுடன் நீங்களும் சேர்ந்துகொண்டால், உங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட உதவியாக இருக்கும். அங்கு சில குறிப்புகள், புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள், அதனால் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல் என சில ஆக்டிவிடீஸ் இருக்கும். அவற்றை சரியாக பின்பற்றினாலே நிச்சயம் புகைப்பிடிப்பதை விட்டுவிடலாம்.

சிகரெட் நினைவுகள் வேண்டாமே!

உங்கள் வீடு, கார், பைக், அலுவலகம், உங்கள் அறை இப்படி எந்த இடத்திலும் சிகரெட்டை நினைவுபடுத்தும் விஷயங்கள் இருந்தால் அதை முற்றிலுமாக மறந்துவிடுவது நல்லது. உங்கள் நண்பர்களுக்கு புகைப்பழக்கம் இருந்தாலும் அவர்களிடம் அதுகுறித்து பேச வேண்டாம் என்று கூறிவிடுவது நல்லது. புகைப்பிடிப்பவரின் அல்லது பிடித்தவரின் அருகில் செல்வதை தவிர்க்கலாம். அந்த வாசனையும் உங்களை ஈர்க்க வாய்ப்புள்ளது.

சிந்தனைகளை மடைமாற்றுங்கள்:

சிகரெட் பழக்கத்தை அறவே ஒழிக்க ஏதேனும் பயிற்சி வகுப்புகள் செல்லலாம். நீச்சல், உடற்பயிற்சி, யோகா, கிரிக்கெட், ஃபுட்பால் என உங்கள் சிந்தனைகளை வேறு திசைகளுக்கு மாற்றுவது சிறந்தது.

smocking , புகைப்பிடித்தல்

மருத்துவரை அணுகலாம்:

மேலே சொன்னது எதுவும் எடுபடவில்லை என்றால் இறுதியாக மருத்துவரிடம் செல்லலாம். ஆனால் எக்காரணத்திற்காகவும் உங்கள் முடிவிலிருந்து பின் வாங்காதீர்கள். மருத்துவர் நிச்சயம் உங்களின் குறைகள், எதிர்பார்ப்புகளை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப சிகிச்சை அளிப்பார்.

சிகரெட் குறித்த நினைவு வந்தால் என்ன செய்வது?

தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்களுக்கு அதன் ஞாபகம் வரலாம். ஆனால், அது 3 முதல் 5 நிமிடங்களுக்கு மட்டுமே வந்து போகும். அந்த நிமிடங்களைக் கடந்தாலே போதும், புகைபிடிப்பதை விட்டுவிடலாம்.

சிகரெட் பிடிக்கவேண்டும் என்று தோன்றினால், மூச்சை நன்கு இழுத்துவிடுங்கள். மூக்கு அல்லது வாயை நன்கு திறந்துகொண்டு மூச்சை நன்றாக இழுத்துவிடுங்கள். அந்த நேரங்களில் கண்களை மூடி உங்கள் நுறையீரலில் தூய காற்று நிறம்புவதை கற்பனை செய்து பாருங்கள். இதுபோல தொடர்ந்து செய்வது நல்லது.

அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பதும் நல்லது.

உங்களை எப்போதும் பிசியாகவே வைத்துக்கொள்ளுங்கள். நண்பர்களுடன் பேசுங்கள். இருக்கும் வேலைகளை இழுத்துபோட்டு செய்யுங்கள். உங்களை நீங்களே தொந்தரவு செய்துகொண்டே இருங்கள். ஒருபோதும் உங்கள் முடிவிலிருந்து பின்வாங்காமல் இருந்தால், புகைபிடிக்கும் பழக்கம் உங்களை கைவிட்டுவிடும்.

இதையும் படிக்க :

புகையிலை பயன்பாடு உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களின் உயிருக்கும் ஆபத்து..!

புகைப்பிடிப்பதால் கண் பார்வை பறிபோகும் ஆபத்து! ஆய்வில் தகவல்
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...