World no tobacco day 2021 : நுரையீரலை பாதிக்கும் புகையிலையால் உடலுக்கு என்னென்ன தீங்கு..?

உலக புகையிலை எதிர்ப்பு நாள் 2021

புகையிலை பொருட்களால் ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் மக்கள் இறக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது.

  • Share this:
உலகெங்கிலும் புற்றுநோய்க்கு புகையிலை ஒரு முக்கிய காரணமாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, புகையிலை ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 8 மில்லியன் மக்களைக் கொல்கிறது என்பது தெரியவந்துள்ளது. எனவே, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலகின் 193 ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளில் புகையிலை எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.

முந்தைய காலங்களில் ஆண்கள் மட்டுமே புகைப்பழக்கத்தை கடைபிடித்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலான பெண்களும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. உலகளவில் ஆண்களை விட அதிக அளவு பெண்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக அதிர்ச்சிகர தகவலையும் மருத்துவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

புகையிலை பொருட்களால் ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் மக்கள் இறக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது. புகையிலையால் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன.



நுரையீரல் புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட பல நுரையீரல் தொடர்பான சிக்கல்களுக்கு புகைபிடித்தல் ஏற்கனவே ஆபத்தான காரணியாக அறியப்படுகிறது. காசநோயைப் பொறுத்தவரை, 20 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் புகைப்பழக்கத்தின் விளைவுகளுடன் தொடர்புடையவை. மேலும், புகைப்பழக்கம் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. தற்போதைய COVID-19 தொற்றுநோயுடன், புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து ஒரு விவாதம் நடந்துள்ளது. அதில் பல வல்லுநர்கள் புகைபிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்.

புகைப்பிடிப்பவரா நீங்கள்?: உலக சுகாதார அமைப்பு உங்களுக்காக வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

புகைப்பிடிப்பிற்கும் COVID-19க்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

WHOன் கூற்றுப்படி, COVID-19 வைரஸ் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருப்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என கூறியுள்ளது. ஆனால் புகைப்பிடிப்பவர்களுக்கு கைகள், உதடுகள் தொடர்பானது அதிகம் இருப்பதால் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, இதனால் புகைப்பிடிப்பவர்கள் COVID-19 தொற்றால் பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என விளக்கியுள்ளது.

மேலும், தொடர்ந்து புகைபிடிக்கும் நபர்களின் நுரையீரல் பலவீனமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது, மற்றும் பலவீனமான நுரையீரல் COVID-19 வைரஸின் தாக்குதலை எதிர்த்துப் போராட முடியாது, எனவே தான் புகைபிடிப்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்ற தகவல் பரவுவதாக கூறப்படுகிறது.



புகையிலை எதிப்பு தினமான இன்று புகைபிடிப்பதை விட்டுவிடுவதை கருத்தில் கொள்ளுமாறு WHO பரிந்துரைக்கிறது.நீங்கள் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தும் தருணத்திலிருந்து நுரையீரல் மற்றும் இதயம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் சீராகும். மேலும் இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு சாதாரண நிலைக்கு குறையும் என்றும் நீங்கள் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்திய 2 வாரங்களுக்குள் இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் செயல்பாடு மேம்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், அதனை கைவிடுவது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இரண்டு முகங்களுடன், இரண்டு நுரையீரலை வடிவமைத்து, புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக பரவும் என்பதை உணர்த்தும் வகையில் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். இந்த மணல் சிற்பத்தை 5 டன் மணலில் 6 மணி நேரத்தில் உருவாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published: