புகைத்தல் ஏன் கர்பிணிகளுக்கு மிகவும் ஆபத்தானது?

World No Tobacco Day 2019 | ஆண்டுதோறும் மே 31-ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

புகைத்தல் ஏன் கர்பிணிகளுக்கு மிகவும் ஆபத்தானது?
புகைத்தல் கர்பிணிகளுக்கு ஆபத்தானது
  • News18
  • Last Updated: May 31, 2019, 1:59 PM IST
  • Share this:
புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த புகை பிடிக்கும் பழக்கத்தால் கேன்சர் உள்ளிட்ட உயிரைக்கொள்ளும் நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. உலகின் 2-வது உயிர்கொல்லி என்று புகையிலையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகையிலை பழக்கத்தை தடுக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இதற்காக ஆண்டுதோறும் மே 31-ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

புகையிலையை புகைப்பவருக்கு மட்டுமில்லாமல் அந்த பாதிப்பு அருகில் உள்ளவர்களுக்கும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எந்தவொரு வடிவத்திலும் புகையிலையின் நுகர்வு எல்லோருக்கும் தீங்கிழைக்கக்கூடியதுதான். இது குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு அதிகளவில் தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது தாய் மற்றும் வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே கர்பிணிகள் புல்கைப்பதோ அல்லது புகைப்பவரின் அருகில் நிற்பதோ நல்லது அல்ல.

மேலும் புகைக்கும் பெண்களுக்கு புற்றுநோய்கள், இதய நோய்கள், சுவாச பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். குறிப்பாக ஒரு கர்ப்பிணி பெண் புகைக்கிறார் என்றால், அவருக்கு கருச்சிதைவு, குறைமாத பிரசவம் மற்றும் எடை குறைந்த குழந்தை பெற்றெடுக்கும் நிலை ஏற்படும்.


குறைவான எடை குழந்தைகளுக்கு எளிதாக தொற்றுநோய்கள் பரவும். மேலும் மூச்சுத்திணறல், நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் ஆகியவறால் பாதிக்கபடுவார்கள். ஒரு புள்ளிவிவர கணக்குப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 லட்சம் மக்கள் இந்தியாவில் புகைபிடிப்பதால் இறந்து போகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

புகைக்கும் பெண்


இது குறித்து டாக்டர் செளஜன்யா அகர்வால் மற்றும் மேக்ஸ் சூப்பர் சிறப்பு மருத்துவமனையின் முக்கிய ஆலோசகர், வைஷாலி கூறுகையில், கர்பிணிகள் புகைப்பதை அல்லது புகைப்பவர்களில் அருகில் இருப்பதை கண்னிப்பாக தவிக்க வேண்டும். அது அவரது குழந்தை மற்றும் அதன் வளர்ச்சியை பெரிய அளவில் பாதிக்கும். ஒவ்வொரு முறையும் அதனை நுகரும்போது அதில் தீங்கு விளைவிக்கும் நிக்கோட்டின் என்ற நச்சுத்தன்மை வெளிபடுகிறது. அது உங்கள் குழந்தையின் செயல்பாடுகளையும் அதன் ஆரோக்கியத்தையும் குறைக்கும் என்றனர்.மேலும் சில முக்கியமான தகவல்களையும் இங்கு கூறியுள்ளார்.

புகைபிடிக்கும் கர்ப்பிணிக்கு ஏற்படும் சில முக்கியமான சிக்கல்கள்:

* கருப்பைக்குள் குழந்தை இறந்து போய்விடுவது.

* தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்படுவது.

* கருப்பையின் வாய் சிதைந்து போவது.

*எக்டோபிக் கர்ப்பம் அடைய வாய்ப்பு உள்ளது. இந்த வகையான கர்ப்பம் கருப்பைக்கு வெளியே கருவைத்தரிக்கும். இது மிகவும் ஆபத்தனது.

புகைப்பிடித்தல் கூடாது.


கர்ப்பிணி பெண்கள் புகையிலை ஏன் தவிர்க்க வேண்டும்: 

* இது குழந்தையின் மூளை மற்றும் நுரையீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

* கருப்பையில் இருக்கும்  குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கிறது.

* நிகோடின் மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுத்தன்மை காரணமாக ஆக்ஸிஜனின் அளவு குறைதல்.

*  சிகரெட்டை புகைத்த பிறகு குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்திற்கு கருப்பையில் குழந்தை எந்தவித செயல்பாடுகளையும் செய்யாது இருத்தல். (No Movement)

கர்பிணிக்கு அருகில் இருப்பவர்கள் புகைத்தல்


கர்ப்ப காலத்தில் தொடர்ந்து புகைபிடிப்பதன் காரணமாக பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பிரச்சினைகள்:

* ஒரு குழந்தை பிறந்தபின்பு கூட, குடும்பம் அல்லது குடும்ப உறுப்பினர்கள் புகைபிடிப்பதைத் தொடர்ந்தால், அந்த குழந்தை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும்.

* தொடர்ந்து புகைப்பதினாலோ புகைப்பதை நுகர்வதினாலோ குழந்தைக்கு  திடீர் இறப்பு ஏற்படும்.

* ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

* உடல் பருமன் அதிகரிக்கும்.

* குழந்தை பருவ புற்றுநோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற ஒவ்வாமைகள் ஏற்படும்.

*  நுரையீரல் மற்றும் இதயம் பலவீமடையும்.

* பிறப்பு எடையானது குறையும். இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்யை ஏற்படுத்தும்.

Also see... Menstrual Hygiene Day 2019: உறிபஞ்சுகளை பயன்படுத்துவது எப்படி? 

உலக மாதவிடாய் சுகாதார தினம் 2019 : மாதவிடாய் காலத்தில் கையாள வேண்டிய சுகாதார வழிகள்!

Also see...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading