Home /News /lifestyle /

மழைக்காலத்தில் கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இதை ஃபாலோ பண்ணுங்க..!

மழைக்காலத்தில் கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இதை ஃபாலோ பண்ணுங்க..!

கொசுக்கள் எளிதில் கடிக்க ஏதுவாக இருக்கும் இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும்.

கொசுக்கள் எளிதில் கடிக்க ஏதுவாக இருக்கும் இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும்.

கொசுக்கள் எளிதில் கடிக்க ஏதுவாக இருக்கும் இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொசுக்கடி என்பது நமக்கு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா ஆகியவை கொசுக்களால் பரவும் பொதுவான நோய்களாகும்.


உலக கொசுக்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. 1897ஆம் ஆண்டில், பெண் கொசு மனிதர்களிடையே மலேரியாவை பரப்புகிறது என்பதைக் கண்டறிந்த பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ரோஸை இந்த நாள் நினைவு கூருகிறது. உலக கொசுக்கள் தினம் 2021-ன் கருப்பொருள் ’மலேரியா இல்லாத உலகை அடைதல்’ ஆகும். கொசுக்கள் மனிதர்களுக்கு நோய்களை பரப்பும் திறனைக் கொண்டுள்ளன. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான இறப்புகளுக்கு காரணமாகின்றன. உலக சுகாதார அமைப்பின்படி, உலகளவில் சுமார் 219 மில்லியன் மக்களுக்கு மலேரியா நோய் ஏற்படுத்துகிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை இந்நோய் ஏற்படுத்துகிறது. மறுபுறம், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 96 மில்லியன் மக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்படுகின்றனர்; 40 ஆயிரம் இறப்புகளும் பதிவாவதாக கூறப்படுகிறது. சரி, கொசுக்கள் நம்மை கடிக்காமல் தடுக்க உதவும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

சரியான ஆடைகளைத் தேர்வு செய்யவும்:

பொதுவாக, முழு கை, தளர்வான ஆடைகளை அணிவது கொசு கடிப்பதைத் தடுக்க உதவும். கொசுக்கள் எளிதில் கடிக்க ஏதுவாக இருக்கும் இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும்.

Must Read | வருகிறது மழைக்காலம்… காய்ச்சல், சளியில் இருந்து தப்பிக்க சில வழிகள்!

மஸ்கிட்டோ ரிபெல்லன்ட் பயன்படுத்துங்கள்:

கொசு கடிப்பதைத் தவிர்க்க வீட்டில் இன்செக்ட் ஸ்ப்ரே (insect spray) பயன்படுத்தலாம். தீங்கு விளைவிக்கும் விளைவுகளிடம் இருந்து தப்பிப்பதற்காக அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள். அதிகமாக பயன்படுத்துவது நல்லதல்ல. கொசுக்களை இயற்கையாக விரட்ட, கொசு விரட்டும் தாவரங்களான எலுமிச்சை தைலம், துளசி, லாவெண்டர் மற்றும் ரோஸ்மேரி போன்றவற்றை முயற்சி செய்யுங்கள். உடலில் எசென்சியல் ஆயில்களை தேய்த்தல் மற்றும் டிஃப்பியூசர்களை பயன்படுத்துவதும் உதவியாக இருக்கும். புதினா, எலுமிச்சை, துளசி மற்றும் யூகலிப்டஸ் ஆகியவை நீங்கள் பயன்படுத்த வேண்டிய சில அத்தியாவசிய எண்ணெய்கள் ஆகும்.

சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள்:

தோட்டத்தில் அல்லது உங்களுக்கு அருகில் உள்ள இடங்களில் தண்ணீர் தேங்க விடாதீர்கள். தேவையில்லாமல் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க பாத்திரங்கள், பானைகள், பக்கெட்களை தலைகீழாக கவிழ்த்து வைக்கவும். மேலும், தேவையில்லாத நேரங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும். இப்படி செய்தால், தேவையின்றி கொசுக்கள் உங்கள் வீட்டை முகாமிடாது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அறிகுறிகளைக் கவனியுங்கள்:

மழைக்காலங்களில் கொசுக்களால் பரவும் நோய்கள் பொதுவானவையே. உங்களுக்கு டெங்கு, மலேரியா அல்லது சிக்குன்குனியா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது சிறந்தது.
Published by:Archana R
First published:

Tags: Dengue, Malaria, Mosquito, Mosquito bite

அடுத்த செய்தி