• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சர்வதேச மாதவிடாய் சுகாதார தினம்: இந்தியாவில் பீரியட்ஸ் குறித்த கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

சர்வதேச மாதவிடாய் சுகாதார தினம்: இந்தியாவில் பீரியட்ஸ் குறித்த கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

சர்வதேச மாதவிடாய் சுகாதார தினம்

சர்வதேச மாதவிடாய் சுகாதார தினம்

இந்த கட்டுக்கதைகள் தற்போது ஒரு மூடநம்பிக்கையாக பெண்களிடையே வலம் வருவது தான் பெருஞ்சோகம்!

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் மே 28-ம் தேதி அன்று உலக அளவில் மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்ப்பதும், உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாளின் நோக்கமாக இருக்கிறது. இந்த சிறப்பு சுகாதார நாள் ஜெர்மனியின் இலாப நோக்கற்ற வாஷ் யுனைடெட் என்ற அமைப்பு மூலம் 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2014-ல் இந்த தினத்தின் முதல் கொண்டாட்டத்திலிருந்து, உலகளவில் இந்த தினத்திற்கான ஆதரவுகள் மற்றும் குரல்கள் அதிகரித்துள்ளது.

அதன்படி இந்தாண்டு மாதவிடாய் சுகாதார தினத்தன்று இரண்டு முக்கிய நோக்கங்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. முதலாவது, மாதவிடாய் சுழற்சியைப் பற்றி பேசுவது மற்றும் விவாதிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமூக விதிமுறைகளை மாற்றுவது ஆகும். மேலும் இந்த நாளின் இரண்டாவது நோக்கம் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்காக பெண்களின் செயல்களை ஊக்குவிக்க முடிவெடுப்பவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகும்.

மாதவிடாய் மிகவும் இயற்கையான மற்றும் இனப்பெருக்க சுழற்சியாகும். ஆனால் அந்த நிகழ்வு களங்கப்படுத்தப்பட்டு, அதில் ஏராளமான தடைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்திய சமுதாயத்தில் நிலவும் கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சமூக-கலாச்சார வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறைந்த அளவிலான அறிவு, குறைந்த கல்வி மற்றும் பெண்கள் பற்றிய விழிப்புணர்வு காரணமாக இது ஒருங்கிணைக்கப்படுகிறது. இவை தீங்கு விளைவிக்கும் தாக்கங்களைக் கொண்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

அதிலும் இந்திய கலாச்சாரங்களின்படி, அன்று முதல் இப்போதும் கூட பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது சில கட்டுப்பாடுகளுக்கு ஆளாகின்றனர். பிரபலமான நம்பிக்கைகளின்படி, மாதவிடாய் சுழற்சியின் போது பெண்கள் சாதாரண வாழ்க்கை முறையை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அப்போதைய காலகட்டத்தில் பெண்கள் தூய்மையற்றவர்களாக கருதப்படுகிறார்கள். இதுபோல, பெண்கள் மற்றும் அவர்களின் மாதவிடாய் சுழற்சி குறித்து இன்னும் பல கட்டுக்கதைகள் வலம் வந்து கொண்டுருக்கின்றன. உண்மையில் அதற்கான காரணங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம். மாதவிடாய் சுற்றி இந்தியாவில் இன்னும் பேசப்படும் கட்டுக்கதைகளையும் உண்மைகளையும் பற்றி தெரிந்து கொள்வோம்.

முதல் கட்டுக்கதை: மாதவிடாய் சுழற்சியின் போது பெண்கள் பிரார்த்தனை மற்றும் பூஜை செய்யவோ அல்லது கோவிலுக்குள் நுழையவோ கூடாது!

உண்மை காரணம்: அந்த நேரங்களில் பெண்கள் தூய்மையற்றவர்கள் என்பது ஒரு கலாச்சார நம்பிக்கை மட்டுமே. இது ஒரு உயிரியல் செயல்முறை ஆகும். ஆனால் இது மத உணர்வுகள் அல்லது சுகாதாரத்துடன் தொடர்புடையது அல்ல.

இரண்டாம் கட்டுக்கதை: அந்த காலத்தில் பெண்கள் ஊறுகாயைத் தொட அனுமதி இல்லை. ஏனெனில் அது அழுகிவிடும்!

உண்மைக் காரணம்: அந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி பல பெண்கள் பீரியட்ஸ் காலங்களில் துணியைப் பயன்படுத்துகிறார்கள். துரதிஷ்டவசமாக பீரியட்ஸை கையாள்வதற்கான ஒரு சுகாதாரமற்ற வழி இதுவாகும். இது உங்கள் நெருக்கமான பகுதிகளிலும் கைகளிலும் நுண்ணிய உயிரினங்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. எனவே, அந்த சமயங்களில் ஊறுகாய் மற்றும் பிற சமையலறை பொருட்களைத் தொடுவது சுகாதாரமற்றதாக கருதப்பட்டது. இன்றைய காலகட்டங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் சானிட்டரி பேடை பயன்படுத்துகிறார்கள். எனவே, நீங்கள் கவலையில்லாமல் சமையலறைக்குள் நுழைந்து சமைக்கலாம். எதையும் தொடக்கூடாது என்ற தடை அவசியமற்றது.

மூன்றாம் கட்டுக்கதை: மாதவிடாய் சுழற்சியின் போது படுக்கையில் தூங்கக்கூடாது!

உண்மைக் காரணம்: முன்னதாக பெண்கள் சானிட்டரி பேட்களுக்கு பதிலாக ஒரு துணியைப் பயன்படுத்தும்போது, ​​கசிவு பிரச்சினைகள் காரணமாக அவர்கள் படுக்கையில் தூங்க அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், இப்போது பல பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியில் சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான முறைகளைப் பயன்படுத்தும்போது, ​​அவர்கள் படுக்கையில் தூங்கக்கூடாது என்ற விதிமுறையை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை.

இதுபோன்ற பல கட்டுக்கதைகள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சுற்றி பரவி கிடக்கிறது. ஆனால் அவை அனைத்தும் பெண்களின் சுகாதார நன்மைகளுக்காகவே போடப்பட்டது. இந்த கட்டுக்கதைகள் தற்போது ஒரு மூடநம்பிக்கையாக பெண்களிடையே வலம் வருவது தான் பெருஞ்சோகம்!



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: