உலக மாதவிடாய் சுகாதார தினம் 2019 : மாதவிடாய் காலத்தில் கையாள வேண்டிய சுகாதார வழிகள்!

மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தை வலியுறுத்தவே ஒவ்வொரு ஆண்டும் மே 28 ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.

உலக மாதவிடாய் சுகாதார தினம் 2019 : மாதவிடாய் காலத்தில் கையாள வேண்டிய சுகாதார வழிகள்!
உலக மாதவிடாய் சுகாதார தினம் 2019
  • News18
  • Last Updated: May 28, 2019, 1:49 PM IST
  • Share this:
பெண்களுக்கு மூன்று நாள் மாதவிடாய் என்பது தவிர்க்க முடியாதது.  வலிகளைத் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவம் அங்கிருந்துதான் பெண்களுக்குத் தொடங்கியதோ என்கிற எண்ணமும் தோன்றும். அந்த அளவிற்கு முதல் நாள் வலியைப் பொருத்துக் கொண்டு அன்றாட வேலைகளையும் சமாளிப்பார்கள்.பெண்கள் அந்த நாட்களில் தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்வதும் அவசியம். இருப்பினும் சிலர் பாதுகாப்பாக இருப்பதில்லை. அதை வலியுறுத்தவே மாதவிடாய் சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 28 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


எவ்வாறெல்லாம் அந்த மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வே இந்தக் கட்டுரை.

பேடை  அடிக்கடி மாற்றவும் : சிலர் ஒரு பேடையே ஒரு நாள் முழுவதும் பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு நான்கு அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை பேடை மாற்றுவது அவசியம். குறைவான இரத்தப்போக்கு நாட்களிலும் அவ்வாறு மாற்றுவது அவசியம். பயன்படுத்தப்பட்ட பேடை பாலிதீன் பைகளில் கட்டி குப்பைத் தொட்டியில் போடுவதும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.

சுத்தமாகக் கழுவுவது அவசியம் : இரத்தப்போக்கு வரும் பகுதியை சுத்தமாகக் கழுவுவது அவசியம். அங்கு வெதுவெதுப்பான நீரால் சுத்தம் செய்துக் கழுவினால் வலி சற்று குறையும். இரத்தப் போக்கும் சீராக வரும்.

சோப்பு , மற்ற கெமிக்கல்களைப் பயன்படுத்த வேண்டாம் : இரத்தப் போக்கு வரும் இடத்தை சுத்தமாகக் கழுவுகிறேன் என்ற பெயரில் சோப்பு, வாசனைக் கலந்த கெமிக்கல் திரவியங்களைப் பயன்படுத்தாதீர்கள். அது வெஜினாவின் வழியாக உள்ளே சென்று பல ஆபத்துகளை ஏற்படுத்தலாம். உடலே அதன் அசுத்தத்தை சுத்தப்படுத்திக் கொள்ள இயற்கை முறையைக் கையாளும். நீங்கள் வெறும் வெதுவெதுப்பான நீரால் கழுவுவதே போதுமானது.

துடைக்கும் டவலிலும் சுத்தம் அவசியம் : பேட் மாற்றுவது போல் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் டவலைக் கூட சுத்தமாகப் பயன்படுத்துவது அவசியம். வெஜினா போன்ற இடங்களைத் துடைக்கும்போது டவல் மூலமாக கிருமிகள் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தினமும் துடைப்பதற்கு துவைத்த , சுத்தமான டவலைப் பயன்படுத்துங்கள்.ஆடை சுத்தம் : அந்த மூன்று நாட்கள் பயன்படுத்திய ஆடைகளை சுத்தமாக துவைத்துப் பயன்படுத்துங்கள். நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளை நன்கு வாஷ் செய்து வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். நன்கு வெயில் படும்படி காய வையுங்கள். முடிந்தால் டெட்டால் பயன்படுத்தி அலசலாம்.

கைகளின் சுத்தம் : கைகளை பேட் மாற்றுவதற்கு முன்னும் , பின்னும் சுத்தமாகக் கழுவுவது அவசியம். உங்கள் கைகளில் இருக்கும் பாக்டீரியாவால் தொற்றுகள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

இதையும் படிக்க :

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா... கூடாதா? மருத்துவர்கள் விளக்கம்!மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை நீக்க வீட்டுக் குறிப்புகள்


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading