இன்றைய உலக ஹைப்பர் டென்ஷன் தினத்தில் என்பதால் இரத்த அழுத்தம் எதனால் உண்டாகிறது. உயர் ரத்த அழுத்தத்தை கையாளும் வழிமுறைகள் என்ன போன்ற விஷயங்களை காணலாம்.
பொதுவாக இன்று பலருக்கும் உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. இதற்கு அதிகபட்ச காரணங்களாக மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு , பரம்பரையாக தொடரும் பிரச்னை போன்றவை கூறப்படுகின்றன.
இதைக் கட்டுப்படுத்த என்ன வழி..?
ஆரோக்கியமான உணமுறை : ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஃபிரெஷ்ஷாக வீட்டில் சமைத்த உணவுகளை சரியான நேரத்தில் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். குறிப்பாக பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.
உப்பு, கொழுப்பு வேண்டாம் : இரத்த அழுத்தம் உள்ளவர்களை மருத்துவர்களே உப்பு மற்றும் கொழுப்பை அதிகம் சேர்த்துக்கொள்ளாதீர்கள் என்று கூறுவார்கள்.
உடற்பயிற்சி : உடல் உறுப்புகள் சீராக இயங்க முடிந்த உடற்பயிற்சிகளை தினமும் 30 நிமிடங்களாவது செய்வது அவசியம்.
இரத்த அழுத்தத்தை கண்கானித்தல் : அடிக்கடி உங்கள் இரத்த அழுத்த அளவை டெஸ்ட் செய்து தெரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் அது உயர்ந்தாலும் கட்டுப்படுத்தும் விஷயங்களை செய்ய முடியும்.
மாத்திரைகளை தினமும் சாப்பிடுதல் : மருத்துவர் பரிந்துரைத்துள்ள மாத்திரைகளை தவறாமல் தினமும் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.
காப்பீட்டுத் திட்டம் : உங்களின் ஒரு பங்கு வருமானத்தை காப்பீட்டுத் திட்டத்திற்கென சேமித்து வையுங்கள். இது எதிர்காலத்தில் உங்களின் மருத்துவ செலவுகளுக்கு உதவலாம்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.