Home /News /lifestyle /

உலக செவித்திறன் தினம் - செவித்திறன் இழப்பை தடுப்பது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

உலக செவித்திறன் தினம் - செவித்திறன் இழப்பை தடுப்பது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

உலக செவித்திறன் தினம்

உலக செவித்திறன் தினம்

World Hearing Day 2022 : உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3ஆம் தேதி உலக செவித்திறன் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3ஆம் தேதி உலக செவித்திறன் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, வாழ்க்கை முழுவதும் நல்ல செவித்திறனை தக்க வைத்துக் கொள்வதற்கான முக்கியத்துவம் குறித்து உலக சுகாதார அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது. 2022 ஆம் ஆண்டு உலக செவித்திறன் நாளின் நோக்கம் இதுதான்: “வாழ்நாள் முழுவதும் கேட்க வேண்டும் என்றால், கவனமுடன் கேளுங்கள்’’ என்பதே. கவனமாக கேட்பதன் மூலமாக செவித்திறன் இழப்பை தடுக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

நிறுவனம் அல்லது அமைப்புகளில் முடிவு எடுக்கும் இடத்தில் இருப்பவர்கள், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், பொழுதுபோக்கு அம்சங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை மையப்படுத்தி இந்த ஆண்டு விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் அரசுகள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. உங்களுக்கு எத்தனை வயது ஆகிறது என்பது முக்கியமல்ல. காது கேளாமை பிரச்சினை உங்களுக்கு வர விடாமல் தடுக்க வேண்டும் என்றால், பின்வரும் ஆலோசனைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

இதையும் படியுங்கள் : உக்ரைனில் இருந்து வெளியேற பாகிஸ்தான் மாணவர்களுக்கு உதவும் இந்திய கொடி!


  • பெண்கள் கர்ப்பமடையும் காலத்தில் அவர்களுக்கு ரூபெல்லா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது பிறவியிலேயே குழந்தைகளுக்கு செவித்திறன் இழப்பு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியதாகும்.

  • காதுகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தூசிகளை சேர விடக் கூடாது. தண்ணீர், வேக்ஸ் போன்றவை காதுகளுக்குள் சேர விடக் கூடாது. தீக்குச்சிகள், பென்சில், ஹேர்பின் போன்ற கூர்மையான பொருட்களை வைத்து காது குடையக் கூடாது. அவை செவிமடலை பாதிக்கக் கூடும்.

  • காது அருகே ஏதேனும் அடி ஏற்பட்டு விடாத அளவுக்கு உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், மீண்டும் சரி செய்ய இயலாத அளவுக்கு செவித்திறன் இழப்பு பிரச்சினை ஏற்படக் கூடும்.

  • மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், காதை சுத்தம் செய்வதற்காக எண்ணெய் அல்லது சுத்தம் இல்லாத தண்ணீரை ஊற்றக் கூடாது. காதுகளில் வீக்கம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை இருந்தால் மருத்துவரை அணுகவும்.

  • அசுத்தமான தண்ணீரை கொண்ட நீர்நிலைகளில் நீச்சல் செய்ய வேண்டாம். அதில் உள்ள அசுத்தங்களால் உங்கள் காதுகளில் தொற்று ஏற்படக் கூடும். நீச்சல் அடிக்கும் போதும், குறிப்பாக டைவ் அடிக்கும் போதும், காதுகளில் பருத்தி துணியை கொண்டு அடைத்துக் கொள்ள வேண்டும்.

  • சாலையோரத்தில், பாதுகாப்பற்ற சாதனங்களை வைத்துக் கொண்டு காதுகளை சுத்தம் செய்பவர்களிடம் உங்கள் காதுகளை சுத்தம் செய்ய கூடாது. காதுகளை சுத்தம் செய்ய காட்டன் பட்ஸ் பயன்படுத்தவும் அல்லது மருத்துவரை அணுகவும்.

  • மிகுந்த ஒலி எழும்பும் பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்கவும். அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Healthy Life

அடுத்த செய்தி