கொரோனா பெருந்தொற்று காலம் இந்த உலகை எந்த அளவுக்கு கட்டிப்போட்டது என்பதை நீங்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். இந்த நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அண்மையில் கூட சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டிருப்பதாக வரும் தகவல் பீதியை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
ஆக, எந்தவொரு பெருந்தொற்று நோயும் உலகளாவிய அபாயமாக தடுக்கும் வகையிலான புதிய விதிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஐ.நா. அமைப்பின் சுகாதார முகமையாக திகழும் உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ள இந்த ஒப்பந்தத்தை, அதில் அங்கம் வகிக்கும் 194 உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொள்ள உள்ளன. ஐ.நா. தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரீசஸ் தற்போது உலக சுகாதார அமைப்பின் தலைவராக இரண்டாம் முறை பதவி வகித்து வரும் நிலையில், புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த அவர் முனைப்புகாட்டி வருகிறார்.
உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி உலகெங்கிலும் 6.5 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த சூழலில் புதிய தொற்றுகளை எதிர்கொள்ள இவ்வுலகம் தயாராக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில், அது எங்கிருந்து பரவியது என்பதை விசாரிப்பதிலும், கட்டுப்பாடு நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் உலக சுகாதார நிறுவனம் ஒரு அதிகாரமற்ற அமைப்பு போல செயல்பட்டது என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பெருந்தொற்று கால ஒப்பந்தம் என்றால் என்ன?
சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை விதிகள் (2005) என்ற விதிகளை உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. இதன்படி, எல்லை தாண்டிய தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வர்த்தகம் மற்றும் பயணங்கள் வழியாக தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2002ஆம் ஆண்டில் சார்ஸ் பெருந்தொற்று ஏற்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட இந்த விதிமுறைகள், எபோலா உள்பட பல தொற்றுகளை கட்டுக்குள் வைக்க உதவிகரமாக இருந்தது.
புதிய ஒப்பந்தம் எப்படி வேலை செய்யும்?
2005ஆம் ஆண்டின் விதிமுறைகள் மற்றும் தற்போதைய விதிமுறைகள் எப்படி இணைந்து செயல்பட போகின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆனால், புதிய ஒப்பந்தத்தை ஏற்பது விருப்பத்திற்குரியதாக இருக்க வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்படுகிறது.
ஏனென்றால் ஏற்கனவே உள்ள ஒப்பந்தம் உள்நாட்டளவில் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆகவே, இரண்டாம் ஒப்பந்தம் என்பதை, பெருந்தொற்று ஒன்றை உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் சமயத்தில் செயல்படுத்தினால் போதும் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது.
பரிசீலிக்கப்படும் வேறு சீர்திருத்தங்கள் என்ன?
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் குறைந்தபட்சம் 12க்கும் மேற்பட்ட நாடுகள் முன்வைத்துள்ள பரிந்துரைகளை பரிசீலனை செய்து, 2005ஆம் ஆண்டு விதிமுறைகளுடன் சேர்த்து செயல்படுத்துவது குறித்து தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read : பசும்பாலில் கொரோனா வைரஸை அழிக்கும் ஆற்றல் உள்ளதா..? ஆய்வில் வெளியான தகவல்..!
குறிப்பாக தொற்று ஏற்படும் பகுதிகளுக்கு உலக சுகாதார அமைப்பு உடனடியாக செல்ல வேண்டும் என்றும், இதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஏனென்றால், சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கொரோனா தொற்று பரவியபோது அங்கு ஆய்வு நடத்த உலக சுகாதார நிறுவனத்திற்கு சீனா அனுமதி அளித்தது. ஆனால், தொடக்க கால தொற்றுகள் மற்றும் சார்ஸ்-2 வைரஸ் குறித்த தொடர்புகள் முதலியவற்றை சீனா மறைத்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.