உலக மகிழ்ச்சி தினம்: நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க சில யோசனைகள்!

மாதிரி படம்

மகிழ்ச்சி என்பது ஒரு உணர்ச்சி. அதனை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சி என்பது ஒரு உணர்ச்சி. அதனை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான் இருக்கிறது. மகிழ்ச்சி எல்லாவித மாற்றங்களையும் கொண்டு வரக்கூடியதாகும். எப்போதும் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பது நமது ஆயுளை கூட்டும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் நமது சந்தோஷம், நிம்மதி என அனைத்தையும் பறித்துவிட்டு சென்றது.

இருப்பினும், கொடிய வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக துவண்டு போகாமல், தங்களது வாழ்க்கையில் அடுத்த அடியை மக்கள் எடுத்து வைத்துள்ளனர். காரணம், வாழ்வில் காட்டாயம் சாதித்து விடுவோம் என்ற நம்பிக்கை தான். அதில் வெற்றியை கண்ட பிறகு அவர்களுக்கு கிடைக்கும் ஒரு அனுமானம் மகிழ்ச்சி. மகிழ்ச்சியைப் பெறும் நோக்குடன் செய்யும் எல்லா செயல்களும் மகிழ்ச்சியைத் தந்துவிடாது. தீங்கு விளையக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் செய்யும் செயல்களே மகிழ்ச்சியை அளிக்கும். அப்படி தீங்கற்ற செயல்களால் தன்னை உருவாக்கிக் கொள்பவர்கள் வாழ்வில் வெற்றிகாண்பர்.

மகிழ்ச்சி என்பதும் ஒரு திறமைதான். உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள காட்டாயம் உங்களுக்கு திறமை வேண்டும். தேவையற்ற எதிர்மறை விஷயங்களை விரும்பாமலும், அனுமதிக்காமலும், சிறந்த விஷயங்களையே பின்பற்றும் திறமை உங்களிடம் இருந்தால்தான் உங்களுக்கு மகிழ்ச்சி சாத்தியம். எனவே உங்களுக்கு மகிழ்ச்சி வேண்டுமானால் நீங்கள் தீங்கு தரும் எந்த செயல்களையும் செய்யாதிருங்கள். மேலும் கொரோனா தொற்று காரணமாக, எதிர்பாராத அளவு தனிமை மற்றும் பயம் நம்மில் அதிகம் எழுந்துள்ளது. இந்த சமயங்களில் நாம் ஒவ்வொருவரும் தனிமையில் இருந்து விடுபட போராடுகிறோம்.

Also read... காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது கோவிட்-19 வைரஸை குணப்படுத்துமா.? தீவிர ஆய்வில் எய்ம்ஸ் விஞ்ஞானிகள்

இந்த சமயங்களில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நமக்கு ஒரு ஆதரவு தேவைப்படுகிறது. அந்த நேரங்களில் வீடியோ அழைப்புகள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தன. இதனால் அனைவரும் தங்களுக்கு விருப்பமுள்ளவர்களுடன் அன்பையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொண்டனர். இதுகூட ஒரு விதத்தில் நாம் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது தான். சமுதாயத்தின் ஒரு பகுதியாக, நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதற்கும், உலகை ஒரு சிறந்த இடமாக உணரவைப்பதற்கும் இதுபோன்ற சில வழிகள் உள்ளன. இதற்கு அதிக நேரம் அல்லது பணம் செலவாகாது. பொதுவாகவே மகிழ்ச்சிக்கும், சிரிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மகிழ்ச்சியின் அடிப்படையாக உணரப்படுவது சிரிப்பு. எனவே சிரிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தூண்ட முடியும்.

மகிழ்ச்சியின் மூலம் சிரிப்பைத் தூண்ட முடியும். சிரிப்பு ஆரோக்கியம் தருவதாக தற்போதைய மருத்துவ கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. சிரிப்பு மன அழுத்தத்தை குறைக்கிறது, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. முகத் தசைகளை இயக்குகிறது. மூளையை புத்துணர்ச்சிப் படுத்தி ஆயுளை அதிகரிக்கிறது. இதுபோலவே மனநிலையை மகிழ்ச்சியாக பராமரிப்பதன் மூலம், சிரிப்பையும், ஆரோக்கியத்தையும் வாழ்வில் தக்க வைக்க முடியும். எனவே, நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் முகத்தில் புன்னகையோடு பேசும்போது, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தானாகவே துளிர்விடும். இதேபோல, நம்மால் முடித்த அளவு பிறருக்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சியை பெறவும் முடியும், பிறருக்கு தரவும் முடியும். இன்றைய பெருத்தொற்று காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உங்களால் முடித்த சிறு உதவியை செய்து அவர்களை சந்தோஷப்படுத்துங்கள்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: