உலக கை சுகாதார நாள் 2021 : கைகளை சுத்தமாகக் கழுவுவதன் அவசியம் என்ன..? எப்படி கைக்கழுவ வேண்டும்..?

5. ஈரமான கைகளில் கிருமிகள் உடனடியாக பரவும் அபாயம் உள்ளது. எனவே கைகளை சுத்தமாக கழுவினால் மட்டும் போதாது. கழுவிய பின் கைகளை சரியாக காய வைக்க வேண்டும்.

எந்தவொரு வைரஸ் அல்லது தொற்று நோயை அழிக்க ஒரு நபர் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் நன்கு சுத்தம் செய்ய குறைந்தது 20 வினாடிகள் செலவழிக்க வேண்டும் என்று WHO பரிந்துரைக்கிறது.

  • Share this:
    இன்று மக்கள் எங்கும் எதிலும் சுகாதாரத்தை பின்பற்றுகிறார்கள் எனில் கொரோனா தொற்றுக்குத்தான் பெரும் பங்கு உண்டு. குறிப்பாக கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கம் இன்று மக்களிடம் அதிகரித்திருக்கிறது எனில் ஆச்சரியத்திற்கு இல்லை. ஆனால் கை சுத்தம் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்பதற்காகவே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மே 5 ஆம் தேதி உலக கை சுகாதார நாள் கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா சுகாதாரப் பணியாளர்களின் கை சுத்தத்தை பராமரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்துள்ளது.

    அந்த வகையில் இந்த ஆண்டு, உலக சுகாதார நிறுவனம், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் இடத்தில் கைக்கழுவுதலை உறுதி செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளது. அதேபோல் நோயாளி, சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவமனை அல்லது சிகிச்சை ஆகிய மூன்று விஷயங்களை ஒன்றிணைக்கும் இடத்தில் கைக்கழுவுதலின் விழிப்புணர்வை செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளது. இந்த ஆண்டின் பிரச்சாரத்திற்கான முழக்கம் : Seconds save lives – clean your hands!

    எந்தவொரு வைரஸும் அல்லது தொற்று நோயை அழிக்க ஒரு நபர் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் நன்கு சுத்தம் செய்ய குறைந்தது 20 வினாடிகள் செலவழிக்க வேண்டும் என்று WHO பரிந்துரைக்கிறது.



    உங்கள் கைகளை எப்படி சரியாக கழுவ வேண்டும்..?

    படி 1: உங்கள் கைகளை தண்ணீரில் நனைத்து, போதுமான திரவ சோப்பு அல்லது சோப்-ஐ பயன்படுத்துங்கள்.

    படி 2: இப்போது, உங்கள் உள்ளங்கையில் சோப்பை வட்டப்பாதை இயக்கத்தில் தேய்க்கவும்.



    படி 3: உங்கள் கைகளின் பின்புறம் மற்றும் உங்கள் விரல்களுக்கு இடையில் உள்ள பகுதியை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.

    படி 4: இப்பகுதியை சுத்தம் செய்ய உங்கள் விரல்களையும் முன்னும் பின்னுமாக தேய்க்கவும்.

    கொரோனா சமயத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம்..! மருத்துவர்கள் விளக்கம்

    படி 5: உங்கள் விரல் மற்றும் நகங்களை உங்கள் உள்ளங்கையின் குறுக்கிலும் தேய்க்கவும்.

    படி 6: உங்கள் கட்டைவிரலையும் சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sivaranjani E
    First published: