முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மக்கள் தொகையில் அதிகரிக்கும் உடல் பருமன்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

மக்கள் தொகையில் அதிகரிக்கும் உடல் பருமன்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

காட்சிப்படம்

காட்சிப்படம்

Obesity : 2035 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் பாதிபேர் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக உலக உடல்பருமன் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

Over weight எனப்படும் அதிக எடை அல்லது Obesity எனப்படும் உடல் பருமன் என்ற நிலை பல நோய்களுக்கு வழிவகுக்கக் கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதனின் எடையை கிலோகிராம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை அவரது மீட்டர் Square கணக்கிலான உயரத்தால் வகுத்து கிடைக்கும் எண்-தான் BMI எனப்படும் உடல் எடை குறியீட்டெண். BMI 18.5 முதல் 24.9க்குள் இருந்தால், சரியான எடையில் இருப்பதாக அர்த்தம். 18.5 என்ற எண்ணிக்கைக்குக் குறைவாக இருந்தால் குறைவான எடை, 25 முதல் 29.9வரையிலான BMI overweight என்றும், 30-க்கு மேல் இருந்தால் obesity என்றும் வகுக்கப்பட்டுள்ளது.

2035 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் 51 சதவிகிதத்தினர், அதாவது 400 கோடி பேர் அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் நிலையை அடைய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது உலக மக்கள் தொகையில் 38 சதவிகிதம் பேர் அதிக உடல் எடை அல்லது உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், இளம் வயதினரிடையே ஒபேஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.

2035-இல், 21 கோடி சிறுவர்களும், 17.5 கோடி சிறுமிகளும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

சராசரியான எடையிலிருந்து அதிகமாக இருக்கும் ஒவ்வொரு 10 கிலோவுக்கும், தனது ஆயுட்காலத்தில் 3 ஆண்டுகளை இழக்கிறார்கள் எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள். மேலும், இது தனிமனித ஆரோக்கியம் சார்ந்தது மட்டுமின்றி, நாட்டில் பொருளாதார சூழ்நிலையையும் பாதிக்கவல்லது என எச்சரிக்கப்படுகிறது.

2035-இல் உடல் எடை அதிகரிப்பு தொடர்புடைய நோய்களின் சிகிச்சைக்காக, உலக GDP-யில் 3 சதவிகிதத்தை செலவழிக்க நேரிடும் என உலக உடல்பருமன் கூட்டமைப்பு எச்சரிக்கிறது.

எனவே, உலக நாடுகளும், கொள்கை வகுப்பவர்களும் உடல் பருமன் அதிகரிப்பிற்கான சமூக, சுற்றுச்சூழல் காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Also Read : குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட என்ன காரணம்..? இயல்பு நிலைக்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும்..?

உடல் எடை அதிகரித்திருப்பதை அழகு சார்ந்ததாக அல்லாமல், ஆரோக்கியம் சார்ந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துவதைக் கருத்தில் கொண்டு உணவுமுறையில் மாற்றம், உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

First published:

Tags: Obesity, Overweight women