Home /News /lifestyle /

உலக முதலுதவி தினம் 2021 : முதலுதவியின் அவசியம் என்ன..? முதலுதவி பெட்டியில் கட்டாயம் இருக்க வேண்டியவை என்ன..?

உலக முதலுதவி தினம் 2021 : முதலுதவியின் அவசியம் என்ன..? முதலுதவி பெட்டியில் கட்டாயம் இருக்க வேண்டியவை என்ன..?

உலக முதலுதவி தினம்

உலக முதலுதவி தினம்

உலக முதலுதவி தினத்தின் முதல் நோக்கம் காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட நபர்களின் உயிரைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே ஆகும்.

முதலுதவி பல உயிர்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று, உலக முதலுதவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் செப்டம்பர் 11ம் தேதி அதாவது இன்று இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. முதலுதவி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

அந்த வகையில் முதலுதவி ஒரு பரந்த வளர்ச்சி மூலோபாயத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்கள் (IFRC) நம்பிக்கை கொண்டுள்ளன. மக்களிடையே முதலுதவி பயிற்சியை ஊக்குவிப்பதற்கும், விபத்து ஏற்பட்டால் முதலுதவியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. முதலுதவி பயிற்சி ஒருவரை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள உதவுகிறது. இதன் மூலம் அவசர காலத்தில் முதலுதவி செய்வதற்கான தைரியத்தை இந்த பயிற்சிகள் கொடுக்கும்.

சர்வதேச முதலுதவி தினத்தின் வரலாறும் மற்றும் முக்கியத்துவமும்:

2000 ஆம் ஆண்டில், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்கள் (IFRC) உலக முதலுதவி தினத்தை நிறுவியது. ஜெனீவாவை சேர்ந்த இளம் வணிகரான ஹென்றி டுனன்ட் என்பவர் 1859ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி அன்று சோல்பெரினோ போரின் போது பயங்கரமான துயரத்தையும் வேதனையையும் அனுபவித்தார். அந்த போரில் பலர் படுகாயமடைந்ததை பார்த்த அவர், நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையும் பொருட்களையும் வாங்கியதோடு, தற்காலிக மருத்துவமனைகளைக் கட்ட உதவினார். பின்னர் 1863 ஆம் ஆண்டில், அவர் எழுதிய "எ மெமரி ஆஃப் சோல்பெரினோ" என்ற புத்தகம் தான் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (IFRC) உருவாக்க காரணமாக இருந்தது.இந்த சர்வதேச நாளில், உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சிலுவை அமைப்புகள் முதலுதவியின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சரியான நேரத்தில் போதிய மருத்துவ பராமரிப்பு இல்லாததன் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் காயமடைகிறார்கள் அல்லது மரணமடைகிறார். ஆனால் முதலுதவி கொடுப்பதன் மூலம் இதுபோன்ற பேரழிவுகள் மற்றும் அன்றாட சூழ்நிலைகளால் ஏற்படும் இறப்புகள், காயங்கள் போன்றவற்றின் தாக்கத்தை திறம்பட குறைக்க முடியும். எனவே முதலுதவியின் முக்கிய நோக்கம் உயிர்களைக் காப்பாற்றுவதும், நோய் மோசமடைவதைத் தடுப்பதும் ஆகும்.

Heart Attack : உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் இந்த மாற்றங்களை செய்தால் மாரடைப்பை தவிர்க்கலாம்...

இந்த நாளின் தீம் மற்றும் குறிக்கோள் என்ன?

உலக முதலுதவி தினத்தின் முதல் நோக்கம் காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட நபர்களின் உயிரைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே ஆகும். இரண்டாவது நோக்கம் காயமடைந்த நபரின் நிலையை முதலுதவி அளிப்பதன் மூலமும் தொற்றுநோயைத் தவிர்க்க முயற்சிப்பதன் மூலமும் நிர்வகிப்பதாகும். மூன்றாவது நோக்கம் காயமடைந்த நபரை விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகும். முதலுதவி அளிக்கும்போது ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவேளை முதலுதவி எப்படி செய்வது என்று தெரியாவிட்டால், அவர்கள் மற்றவர்களிடமிருந்தும் நிபுணர்களிடமிருந்தும் உதவி பெற வேண்டும். IFRC இன் படி, இந்த ஆண்டில் உலக முதலுதவி தினத்தின் கருப்பொருள் என்பது "முதலுதவி மற்றும் சாலை பாதுகாப்பு" என்பதாகும்.முதலுதவி கிட்டில் இருக்க வேண்டியவை:

முதலுதவி பெட்டியில் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு பின்வரும் விஷயங்கள் இருக்க வேண்டும். தேவை மற்றும் சுகாதார நிலைமைகளுக்கு தகுந்தாற் போல முதலுதவி கிட்டில் உள்ள மருத்துவ பொருட்கள் மாறலாம்.

* முதலுதவி கையேடு அதாவது எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்ற குறிப்பு.
* இரண்டு கம்ப்ரெஸ் ட்ரெஸ்ஸிங் அப்சார்பெண்ட் (5 x 9 அங்குலங்கள்)
* 25 பேன்டேஜ்கள் (வகைப்படுத்தப்பட்ட அளவுகள்)
* ஒரு ரோல் துணி டேப் (10 கெஜம் x 1 அங்குலம்)
* ஆண்டிபயாடிக் ஆயின்மென்ட் - 5 பேக்
* ஆண்டிசெப்டிக் வைப்பர்ஸ்- 5 பைகள்
* இரண்டு ஆஸ்பிரின் பாக்கெட்டுகள் (தலா 81 மி.கி.)
* அவசரநிலைக்கு 1 போர்வை
* ஒரு சுவாச கருவி (ஒரு வழி வால்வுடன்)
* ஒரு கோல்டு கம்ப்ரெஸ் (உடனடி)
* இரண்டு ஜோடி லேடெக்ஸ் இல்லாத கையுறைகள் (அளவு: பெரியது)
* ஹைட்ரோகார்டிசோன் ஆயின்மென்ட் - 2 பாக்கெட்டுகள்
* ஒரு காஸ் ரோல் (ரோலர்) பேண்டேஜ், 3 இன்ஞ்
* ஒரு பேண்டேஜ் ரோலர் (4 அங்குல அகலம்)
* 5 ஸ்டெர்லி காஸ் பட்டைகள் (3 x 3 அங்குலம்).
* 5 ஜோடி ஸ்டெர்லைஸ்ட் செய்யப்பட்ட துணி பட்டைகள் (4 x 4 அங்குலங்கள்)
* பாதரசம் அல்லாத கண்ணாடி அல்லாத வெப்பமானி
* ஒரு முக்கோண வடிவத்தில் 2 பேண்டேஜ்கள்
* டீவீசர். ஆகியவை தேவை அடிப்படையில் இருக்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: First Aid, Health tips

அடுத்த செய்தி