ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

World Diabetes Day 2022 : இளம் வயதினரை தாக்கும் நீரிழிவு நோய் : தவிர்ப்பதற்கான பழக்கங்கள்..!

World Diabetes Day 2022 : இளம் வயதினரை தாக்கும் நீரிழிவு நோய் : தவிர்ப்பதற்கான பழக்கங்கள்..!

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

கிராமங்களில் வாழும் இளைஞர்களை விட நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாக்கெட் மணி என்பது பெற்றோர்களால் கிடைக்கிறது. இதனால் வரைமுறை இன்றி கட்டுப்பாடற்ற உணவு பழக்க வழக்கத்தை மேற்கொண்டு நீரிழிவு நோய் தாக்குவதற்கு உண்டான அனைத்து வசதிகளையும் இவர்களே செய்து கொடுக்கிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் பல்வேறு தரப்பினரையும் தாக்கி வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை 40 அல்லது 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் தாக்கி வந்த இந்த நோய், தற்போது 25 வயது உடைய இளைஞர்களை கூட மிக எளிதாக தாக்குகிறது. இவ்வாறு இளம் வயதிலேயே நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்களையும், சரியான உணவு பழக்க வழக்கத்தின் மூலம் நீரிழிவு நோய் ஏற்படாமல் எப்படி தற்காத்துக் கொள்வது என்பதையும் இந்த பதிவில் காண்போம்.

இன்றைய இளம் வயதினர் அனைவரையும் உடல் ஆரோக்கியத்தை இரண்டாம் பட்சமாக வைத்துக் கொண்டு, சுவைக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். ஒரு உணவு எவ்வளவு கெடுதல் தரக்கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை, அதில் எவ்வளவு வேதி பொருட்கள் இருந்தாலும் பரவாயில்லை. வெறும் சுவைக்காக மட்டுமே அதனை உண்கின்றனர். முக்கியமாக கும்பலாக ஏதேனும் பார்ட்டிகளுக்கு செல்லும்போதோ அல்லது கூட்டமாக உணவு அருந்தும் போதோ உணவை பற்றி அக்கறையை காற்றில் பறக்க விடுகின்றனர்.

“இன்றைய நிலையில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்வது என்பது இளைஞர்களிடம் அறவே இல்லை. உணவில் எந்த அளவு நார்ச்சத்து இருக்க வேண்டும் என்றும், எந்த அளவு புரதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு ஒரு சரியான புரிதல் இல்லை” என்று லில் குட்னஸ் நிறுவனரும் சிஇஓ-வுமான எஸ் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

இவ்வாறு புரதங்களும் ஊட்டச்சத்துக்களும் குறைவான உணவுகளை உட்கொள்வதால் இளம் வயதிலேயே நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. இந்த காரணத்தினால்தான் தற்போது இருக்கும் இளம் வயதினர் பலருக்கும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் மிக எளிதாக தாக்குகிறது.

“கிராமங்களில் வாழும் இளைஞர்களை விட நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாக்கெட் மணி என்பது பெற்றோர்களால் கிடைக்கிறது. இதனால் வரைமுறை இன்றி கட்டுப்பாடற்ற உணவு பழக்க வழக்கத்தை மேற்கொண்டு நீரிழிவு நோய் தாக்குவதற்கு உண்டான அனைத்து வசதிகளையும் இவர்களே செய்து கொடுக்கிறார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Also Read : World Diabetes Day 2022 : இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம்..!

உங்கள் குழந்தைகளை நீரிழிவு நோய் தாக்காமல் இருக்கவும் மற்றும் பல வியாதிகளிடமிருந்து பாதுகாக்கவும் சில குறிப்பிட்ட உணவு பழக்க வழக்கங்களின் மூலம் நீங்கள் இதனை செய்ய முடியும்.

என்ன விதமான உணவு வகைகளை உட்கொள்வது?

அதிக அளவிலான கார்போஹைட்ரேடுகள் மற்றும் சர்க்கரை அடங்கிய உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை மிகவும் அதிகமாகின்றன. இவை நாளடைவில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. உதாரணத்திற்கு ரொட்டி, உருளைக்கிழங்கு மற்றும் காலை உணவாக உட்கொள்ளப்படும் பல்வேறு உணவுப் பொருட்களில் இந்த சர்க்கரை அதிகமாக இருக்கின்றன. இவற்றிற்கு பதிலாக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், உடலுக்கு நன்மை தரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும் பச்சை காய்கறிகள் தானியங்கள் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

இன்றைய குழந்தைகள் வீடியோ கேம் அல்லது டிவி பார்த்துக் கொண்டே ஸ்நாக்ஸ் என்ற பெயரில் தேவையற்ற கொழுப்புகளை கொடுக்கக்கூடிய எண்ணெய்யில் பொரித்த பல்வேறு உணவுப் பொருட்களை உட்கொள்கின்றனர். இதனால் உடல் பருமன் அதிகரிக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. எனவே ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவு வகைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் என வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்யுமாறு பிள்ளைகளை வற்புறுத்த வேண்டும். மேலும் உடலுக்கு ஆக்டிவாக வைத்துக் கொள்ள நடைபயிற்சி செய்வது, ஃபுட்பால், கிரிக்கெட், நடனம், நீச்சல், யோகா போன்ற பல்வேறு இதர பயிற்சிகள் செய்வது நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பை மெதுவாக குறைக்கிறது.

மேலும் கடைகளில் வேதிப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். இவற்றில் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சர்க்கரை வகைகள் அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. பதின்ம வயதில் உள்ள குழந்தைகள் அல்லது இளம் வயதினர் முடிந்த அளவு நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ள உணவை உட்கொள்வதின் மூலம் வயிற்றின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் உடல் எடையும் சரியான அளவில் இருக்குமாறு பராமரிக்க இயலும். மேலும் இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பை மெதுவாக குறைக்கிறது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Child Diabetes Symptoms