ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

World Diabetes Day 2022 : இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம்..!

World Diabetes Day 2022 : இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம்..!

நீரிழிவு நோய் அறிகுறிகள்

நீரிழிவு நோய் அறிகுறிகள்

World Diabetes Day 2022 : நீரிழிவு நோய் பரவுவது பாலின சார்புடையது அல்ல என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. இருப்பினும், பல ஆய்வுகள் பெண்களுடன் ஆண்களை ஒப்பிடும்போது நீரிழிவு நோய்/சர்க்கரை நோய் ஆண்களுக்கே அதிகம் என்று கூறுகின்றன.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நீரிழிவு என்பது உடலின் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ இயலாமையால் வகைப்படுத்தப்படும் ஒரு நாள்பட்ட நிலை. இது பல காரணிகளால் இருக்கலாம். அவை சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மரபணு போன்றவற்றால் ஏற்படலாம். நீரிழிவு நோய் பரவுவது பாலின சார்புடையது அல்ல என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. இருப்பினும், பல ஆய்வுகள் பெண்களுடன் ஆண்களை ஒப்பிடும்போது நீரிழிவு நோய்/சர்க்கரை நோய் ஆண்களுக்கே அதிகம் என்று கூறுகின்றன.

  ஆரம்பகால அறிகுறிகள்: உயிரியல், வாழ்க்கை முறை, கலாச்சாரம், சமூக பொருளாதார நிலை, மரபியல், ஊட்டச்சத்து காரணிகள் மற்றும் பாலியல் ஹார்மோன்கள் ஆகியவற்றில் சிக்கல் இருந்தால் நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. ஆரம்ப கட்டத்தில் இதற்கான அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வதால் பல பிரச்சனைகளை தடுக்கலாம். பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களில் அறிகுறிகள் வித்தியாசமாகக் காணப்படலாம். சரி வாருங்கள் சர்க்கரை நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகளை இப்போது காண்போம்.

  கண் பார்வை மங்கல்: கண் பார்வை கூர்மையானவர்களுக்கு பார்வை திறன் மங்கலாக இருக்கும். பார்வையில் ஏற்கனவே குறைபாடு இருப்பவர்களுக்கு இவை மேலும் மங்கலான பார்வைகுறைபாட்டை உண்டாக்கும். சர்க்கரை நோய் ஒருவருக்கு இருந்தால் அவரின் கண்களில் இருக்கும் ரெட்டினா பகுதி முதலில் பாதிப்படையும். அறிகுறியை அலட்சியம் செய்தால் கண் பார்வையை மங்க செய்து தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும். பார்வை குறைபாடு என்று கண் மருத்துவரிடம் சென்றால் அவரே சர்க்கரை நோய் பரிசோதனை செய்யவும் வலியுறுத்துவார். இதர அறிகுறிகளோடு பார்வையும் மங்கலாக இருக்கும் பட்சத்தில் சர்க்கரை நோய் பரிசோதனையும் செய்து கொள்வது நல்லது.

  அதிகப்படியான சோர்வு: நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படும். இது பல்வேறு வகையான ஊட்டச்சத்து, வாழ்க்கை முறை, நாளமில்லா மற்றும் உளவியல் காரணிகளால் ஏற்படலாம். சோர்வு ஒரு நீரிழிவு அறிகுறியாக மட்டும் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், சோர்வு குறித்த புகார் பெரும்பாலும் முன்கணிப்பு நோயாளிகளால் நிரூபிக்கப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சரியாக ஓய்வெடுத்து ஆரோக்கியமாக சாப்பிட்டாலும் ஒருசிலருக்கு சோர்வு ஏற்படும், அது நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

  Also Read : சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய சரியான நேரம் எது..? இதனால் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்ன..?

  அடிக்கடி சிறுநீர் கழித்தல்: நாள் ஒன்றுக்கு 4 அல்லது 5 முறை சிறுநீர் கழிப்பது சரி. ஆனால் அதற்கு அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றுவதும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் சர்க்கரை நோய்க்கான அறிகுறிதான். இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது அவை இரத்த ஓட்டத்தில் திரவங்களின் அளவை அதிகரித்து சிறுநீரகத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கும்.

  இதனால் அதிக அளவு சிறுநீரை உறிஞ்சும் சிறுநீரகமானது சிறுநீரை வெளியேற்ற அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை உண்டாக்கும். சிலருக்கு சிறுநீர் தொற்றும் உண்டாக கூடும். மேலும் அதிக வறட்சியால் அதிக தண்ணீர் குடிக்க நேரும் போது அதிக சிறுநீர் கழிப்பதும் இயல்பு என்று பலரும் இதை தவறாக நினைத்துவிடுகிறார்கள். ஆனால் இவை இரண்டுமே சர்க்கரை நோயின் ஆரம்ப கட்ட அறிகுறி என்பதை உணர வேண்டும்.

  திடீர் உடல் எடை இழப்பு: உங்கள் உடலில் இரத்த குளுக்கோஸை சரியாக செயலாக்க முடியாதபோது, திடீர் எடை இழப்பு ஏற்படும். எந்தவொரு உணவு முறை, உடற்பயிற்சி அல்லது டையூரிடிக் சிகிச்சை இல்லாமல் எடை இழப்பு ஏற்படுகிறதோ, அது பொதுவாக நீரிழிவு நோயின் அறிகுறியாக அடையாளம் காணப்படுகிறது. இது குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய்க்கான சிக்கல்களுக்கான ஆபத்து காரணியாகவும் இருக்கலாம்.

  தோல் நிறமாற்றம்: உங்கள் கழுத்து, அக்குள், இடுப்பு போன்றவற்றில் அடர் கருப்பு நிறத்தில் மாறும். அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ் (அக்குள் மற்றும் கழுத்து போன்ற தோல் மடிப்புகளில் தோலின் நிறம் கருப்பாக மாறும்) என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவான தோல் அறிகுறியாகும். சில சமயம் இந்த தோல் நிற மாற்றம் உங்கள் உயிருக்கு ஆபத்தானவை. நீரிழிவு நோயால் கண்டறியப்படாத நோயாளிகளுக்கு இது முதல் அறிகுறியாகும். ஆரம்ப கட்டத்தில் இத்தகைய அறிகுறிகளை அடையாளம் காண்பது கிளைசெமிக் கட்டுப்பாட்டிற்கும் நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் உதவும்.

  Also Read : சர்க்கரை நோய் இருக்கா? இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க..

  ஆறாத காயம்: உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இரத்த ஓட்ட மண்டலம் சேதமடையும். இதனால் காயங்கள் குணமாவதற்கு தாமதமாகும். அதோடு பிற தொற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கும். சர்க்கரை நோய் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் அவை அந்த காயத்தை ஆற செய்யாமல் அதிகப் படியாகவே தாக்க தொடங்கும். உடலில் இருக்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே இதற்கு காரணம். குறிப்பாக சருமத்தில் சாதாரணமாக உண்டாகக்கூடிய சிராய்ப்புகள் முதல் வெட்டு காயங்கள் வரை மெதுவாக ஆறும். அதனால் தான் சர்க்கரை நோயாளிகள் காயம் உண்டாகாமல் உடலை பார்த்துகொள்ள அறிவுறுத்த படுகிறார்கள்.

  நீங்கள் நன்றாக தேடிப்பார்த்தால் மேற்கண்ட உடல் சிக்கல்கள் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் இருக்கும். அவர்களுக்கு மேற்சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் உடனே அவர்களுக்கு சரியான சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றுவது நம் கடமை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Diabetes, Diabetes symptoms