• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • World Chocolate Day 2021 : டார்க் சாக்லெட் கோவிட் மன அழுத்ததை குறைக்க உதவுமா..?

World Chocolate Day 2021 : டார்க் சாக்லெட் கோவிட் மன அழுத்ததை குறைக்க உதவுமா..?

உலக சாக்லெட் நாள்

உலக சாக்லெட் நாள்

சாக்லெட் பொதுவாகவே ஒருவரின் மன அழுத்தம் மற்றும் சோர்வில் இருப்பவர்களை உடனடியாக புத்துணர்ச்சி நிலைக்கு திரும்ப உதவியாக இருக்கிறது.

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7ம் தேதி உலக சாக்லெட் நாள் கொண்டாடப்படுகிறது. 16ம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் இருந்தாலும், கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து உலக சாக்லெட் நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1550 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் கண்டுபிடிக்கப்படுள்ள சாக்லெட், இனிப்பு சுவை காரணமாக வெகு சீக்கிரம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. தலைமுறைகள் கடந்தாலும் சாக்லெட்கள் மீதான ஈர்ப்பு குறையவில்லை.

தற்போது ஆயிரக்கணக்கான சாக்லெட் வகைகள் இருக்கின்றன. மன அழுத்தம் மற்றும் சோர்வில் இருப்பவர்கள் உடனடியாக புத்துணர்ச்சி நிலைக்கு திரும்ப உதவியாக இருக்கும் சாக்லெட், கோவிட் காலத்திலும் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிவாரணியாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, டார்க் சாக்லெட் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மனக்கவலைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது.

கோவிட் - டார்க் சாக்லெட் பயன்கள் :

அனைவராலும் விரும்பக்கூடிய சாக்லெட் சிறந்த இனிப்பு சுவைக்காக மட்டுமில்லாமல் ஆரோக்கிய நன்மைக்களையும் கொண்டதாக இருக்கிறது. உறவுகளை இனிமையாக்கவும், வாழ்வின் எல்லா மறக்க முடியாத சந்தோஷமான தருணங்களையும் மேலும் மகிழ்ச்சியாக்குவதிலும் சாக்லெட்டுக்கு பெரும்பங்கு உண்டு. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் மிகப்பெரிய துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர். ஏதாவதொரு வகையில் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுகளுக்குள்ளாகியுள்ளனர்.இந்த சோர்வுகளில் இருந்து விடுபடுவதற்கு டார்க் சாக்லெட் பயன்படுவதாக கூறப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அண்மையில் பதிவிட்ட டிவிட்டர் பதிவில், 70% கோகா நிறைந்திருக்கும் சாக்லெட்டின் ஒரு பகுதியை மக்கள் சாப்பிடலாம் என பரிந்துரை செய்திருந்தார். இதன் மூலம் மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

White Bread : உடல் பருமன் முதல் சர்க்கரை நோய் வரை… வெள்ளை பிரெட் உண்பதால் வரும் ஆபத்துகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

சாக்லெட்கள் குறித்து மேற்கொள்ள பல ஆய்வுகளிலும் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. நாள்தோறும் 2 வாரங்களுக்கு 1.4 ஹவுன்ஸ் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் கார்டிசோல் மற்றும் கேடோகோலமைன்கள் ஹார்மோன்கள் அளவை கட்டுப்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கவனக்குறைவான மன நிலையை மேம்படுத்துவதுடன், ரத்த அழுத்தத்தை குறைத்து வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வைரஸ் தடுப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தகுந்த உதவியை செய்வதாகவும், மன அழுத்தத்துக்கு முழு நிவாரணத்தைக் கொடுப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆன்டி ஆக்சிடன்டுகள், பைட்டோ நியூட்டிரியன்கள் சாக்லெட்டுகளில் நிறைந்துள்ளன. பைட்டோ நியூட்டிரியன்கள் வைரஸில் குறிப்பிடத்தகுந்த நொதிகள் அல்லது புரோட்டீய்களை சேதப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன.டார்க் சாக்லெட்டில் காணப்படும் ஃபிளவனோல்கள் மற்றும் புரோந்தோசயனிடின்கள் கோவிட் வைரஸில் உள்ள முக்கிய புரோட்டீஸின் செயல்பாட்டைத் தடுக்கும் திறன் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வைரஸின் வளர்ச்சி அல்லது பரவல் மெதுவாகலாம் அல்லது கட்டுப்படுத்தப்படலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். டார்க் சாக்லெட் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்துவதற்கு உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்கும் என்பதற்காக இதனை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கக்கூடாது. உணவு, உடற்பயிற்சி உள்ளிட்ட பிற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். கோவிட் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த மருத்து மாத்திரைகளையும் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: