Home /News /lifestyle /

உலக புற்றுநோய் தினம் 2022: ஒருவர் புறக்கணிக்க கூடாத ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்..

உலக புற்றுநோய் தினம் 2022: ஒருவர் புறக்கணிக்க கூடாத ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்..

World Cancer Day

World Cancer Day

அமெரிக்காவின் சிறந்த மருத்துவ மையங்களில் ஒன்றான கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UCSF Health) முன்கூட்டிய கண்டறிதல் புற்றுநோய்க்கு எதிரான சிறந்த ஆயுதங்களில் ஒன்றாகும் என்று கூறி இருக்கிறது.

உலகளவில் இதய நோய்களுக்கு அடுத்ததாக அதிக மரணத்தை ஏற்படுத்த கூடிய நோயாக இருந்து வருகிறது புற்றுநோய். புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த கொடிய நோய் வராமல் தடுக்கவும், புற்றுநோயை கண்டறிதல் மற்றும் சிகிச்சையை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 (இன்று) உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 40 - 50 வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் ஏற்பட்டாலே மரணம் நிச்சயம் என்று இருந்த நிலையில் மருத்துவ அறிவியல் மிகவும் மேம்பட்டுள்ளதால் தற்போது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகும் மக்கள் நீண்டகாலம் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் பரிசோதனைகள் காரணமாக உயிர் பிழைப்பு விகிதம் இரட்டிப்பாகி இருக்கிறது. அமெரிக்காவின் சிறந்த மருத்துவ மையங்களில் ஒன்றான கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UCSF Health) முன்கூட்டிய கண்டறிதல் புற்றுநோய்க்கு எதிரான சிறந்த ஆயுதங்களில் ஒன்றாகும் என்று கூறி இருக்கிறது. மேலும் ஸ்கிரீனிங் மூலம் புற்றுநோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே கண்டறிய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஒரு நபர் தன் உடலில் பல வாரங்கள் நீடிக்கும் புதிய அல்லது வித்தியாசமான அறிகுறி ஒன்றை கண்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது. மருத்துவரை நாட வேண்டிய சில அறிகுறிகள் இங்கே..

Also read:  காரின் உட்பகுதி டாய்லெட் சீட்டை விட அசுத்தமானது - ஷாக்கிங் ரிப்போர்ட்!

அசாதாரண மாதவிடாய் அல்லது இடுப்பு வலி:

பெரும்பாலான பெண்களுக்கு அவ்வப்போது ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது பிடிப்புகள் ஏற்படுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களுடன் வலி தொடர்ந்து இருந்தால், இது கர்ப்பப்பை வாய், கருப்பை அல்லது ஓவரியன் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

கழிவறை பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள்:

UCSF Health-ன்படி, உடல் செயல்பாடுகளில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பெருங்குடல், புரோஸ்டேட் அல்லது சிறுநீர்ப்பை புற்றுநோயை குறிக்கலாம். மேலும் இவற்றுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் தொடர்ந்து மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, மலத்தில் கருப்பு அல்லது சிவப்பு ரத்தம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ரத்தப்போக்கு ஏற்படுவது உள்ளிட்டவை ஆகும்.

Also read:  எலெக்ட்ரிக் பைக்குகளை தவணை முறையில் எளிதாக வாங்கலாம் - Hero Electric நிறுவனத்தின் அட்டகாச திட்டம்.

உப்புசம்:

தொடர்ந்து 2 மேல் வயிறு உப்புசமாக இருந்தால் அது கருப்பை புற்றுநோய் மற்றும் பல இரைப்பை குடல் புற்றுநோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்:

ஒரு பெண்ணின் மார்பகங்களில் முலைக்காம்பை சுற்றி ஏற்படும் மாற்றங்கள், நிறமாற்றம், கட்டி அல்லது அசாதாரண திரவ வெளியேற்றம் உள்ளிட்ட மாற்றங்களை எதிர்கொண்டால் அவர் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். ஏனெனில் இது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

Also read:  வாகனம் ஓட்டுபவரா நீங்கள்.. இந்த போக்குவரத்து குறியீடுகள் மற்றும் அடையாளங்களை தெரிந்து கொள்ளுங்கள்

நாள்பட்ட இருமல்..

2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல் குறிப்பாக வறட்டு இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

வேறு சில அறிகுறிகள்..

நாள்பட்ட தலைவலி, விழுங்குவதில் சிரமம், அடிக்கடி காய்ச்சல் அல்லது தொற்று, சரும மாற்றங்கள், நீடிக்கும் வலி, தொடர்ச்சியான சோர்வு, போஸ்ட்மேனோபாஸல் ப்ளீட் மற்றும் விவரிக்க முடியாத எடை இழப்பு உள்ளிட்டவை நேரங்களில் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
Published by:Arun
First published:

Tags: Cancer, Cancer symptoms, World Cancer Day

அடுத்த செய்தி