• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இர்ஃபான் கான் முதல் மனிஷா கொய்ராலா வரை...புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபலங்களின் ஊக்குவிக்கும் கதைகள்!

இர்ஃபான் கான் முதல் மனிஷா கொய்ராலா வரை...புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபலங்களின் ஊக்குவிக்கும் கதைகள்!

பிரபலங்கள்

பிரபலங்கள்

இன்றைய புற்றுநோய் தினத்தில் நம்மை ஊக்குவிக்கும் வகையில் சில வாழ்நாள் கதாநாயகர், நாயகிகளின் வாழக்கை வரலாற்றைக் காண்போம்.

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) உலக புற்றுநோய் தினத்தை பிப்ரவரி 4ம் ஆம் தேதி அனுசரித்து வருகிறது. உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் புற்றுநோய் இல்லாத எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்றைய புற்றுநோய் தினத்தில் நம்மை ஊக்குவிக்கும் வகையில் சில வாழ்நாள் கதாநாயகர், நாயகிகளின் வாழக்கை வரலாற்றை குறித்து காண்போம்.

சில திரையுலக பிரபலங்கள் தங்களது நடிப்பால் மக்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், பல வழிகளில் நம்மை ஊக்கப்படுத்துகிறார்கள். பல பாலிவுட் பிரபலங்கள் திரையில் ஹீரோக்களாக மட்டுமல்லாமல் அவர்களின் நிஜ வாழ்க்கையிலும் இருந்திருக்கிறார்கள். அவ்வாறு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில திரையுலக பிரபலங்களின் எழுச்சியூட்டும் கதைகளைப் தெரிவித்து கொள்வோம்.

இர்பான் கான் (Irrfan Khan)

கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி அன்று பாலிவுட் நடிகர் இர்பான் கான் புற்றுநோயுடன் தனது போராட்டத்தை குறித்து முதல் அறிக்கையை வெளியிட்டார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, " நியூரோஎண்டோகிரைன் கட்டி எனக்கு உருவாகியுள்ளது என்பதை அறிந்துகொள்வது இப்போது கடினமாக உள்ளது. ஆனால் என்னைச் சுற்றியுள்ளவர்களின் அன்பும் வலிமையும் என்னை நம்பிக்கைக்குரிய இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதன் பயணம் என்னை நாட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்கிறது.

மேலும் அனைவரும் தங்கள் விருப்பங்களை தொடர்ந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் பல கதைகளைச் சொல்ல நான் திரும்பி வருவேன் என்று நம்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார். ஒரு வருடம் லண்டனில் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு, இர்ஃபான் பிப்ரவரி 2019 இல் இந்தியா திரும்பினார். புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தபோது தனக்கு ஆதரவளித்த தனது நலம் விரும்பிகளுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தார். அவரது உடல்நிலை மேம்பட்டது. மேலும் அவர் "ஆங்ரேஸி மீடியம்" என்ற படத்தில் நடித்தார். மேலும் அவரது கடைசி படமும் அதுதான். இந்த நிலையில் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த அபாயகரமான நோயால் உயிரிழந்தார்.சோனாலி பிந்திரே: (Sonali Bendre)

2018 ஆம் ஆண்டில், மற்றொரு பாலிவுட் பிரபலமான சோனாலி பிந்திரே மெட்டாஸ்டேடிக் எனப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடுமையான போராட்டத்திற்கு பிறகு இந்த நோயில் இருந்து நடிகை மீண்டு வந்தார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டதாவது, "நம் அனுபவங்கள் நம்மை எவ்வாறு மாற்றுகின்றன அல்லது நம்மை வடிவமைக்கின்றன என்பதைக் கூற ஒரு வழியும் கிடையாது. எல்லா மாற்றங்களும் வெளியில் தெரியப்போவதில்லை. நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், எந்த ஒரு விஷயமும் ஒருபோதும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது." என தெரிவித்திருந்தார். 
View this post on Instagram

 

A post shared by Sonali Bendre (@iamsonalibendre)

ரிஷி கபூர்: (Rishi Kapoor)

பாலிவுட்டின் மூத்த நடிகர் ரிஷி கபூர், கடந்த 2020 ஆம் ஆண்டில் தான் புற்றுநோயுடன் போராடி வருவதாகவும், சுமார் ஒன்பது மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் முழு சிகிச்சை செயல்முறையும் சுமார் 11 மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். நோயுடனான தனது போராட்டத்தை பற்றி உலகத்திற்கு வெளிப்படுத்தினார். மேலும் தனது கடைசி மூச்சு வரை ஒரு ஹீரோவைப் போல வாழ்ந்தார். 
View this post on Instagram

 

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54)


மனிஷா கொய்ராலா (Manisha Koirala)

கருப்பை புற்றுநோய்யால் பாதிக்கப்பட்ட நடிகை மனிஷா அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தார். மேலும், "ஹீல்ட்: ஹவ் கேன்சர் கேவ் மீ எ நியூ லைஃப்" என்ற நினைவுக் குறிப்பையும் அவர் எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார்.லிசா ரே (Lisa Ray)

லிசா ரே கடந்த 2009ம் ஆண்டு மல்டி மைலோமா என்ற இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இது குறித்து ஒரு நேர்காணலில் பேசிய அவர், "புற்றுநோய் என்னை மாற்றிவிட்டது. ஆனால் ஒரு வித்தியாசமான வழியில். இது ஒரு புதிய கட்டத்தின் நுழைவாயிலாக இருந்துள்ளது. மக்கள் தங்கள் வாழ்க்கையின் அன்பைக் கண்டுபிடிப்பதில் புற்றுநோயை தொடர்புபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் என் வாழக்கையில் நான் புற்றுநோயை திருமணம் செய்து கொண்டேன். என் புற்றுநோய்க்கு முடிவே இல்லை. என் வாழ்க்கை பல தடவைகள் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. எனது புத்த நடைமுறைகள் மூலம் நான் மிகுந்த அமைதி அடைந்தேன்" என்று அவர் கூறினார். 
View this post on Instagram

 

A post shared by lisaraniray (@lisaraniray)


சாட்விக் போஸ்மேன்: (Chadwick boseman)

ஹாலிவுட் படமான ‘ப்ளாக் பேந்தர்’ மூலம் உலகிற்கே பரிட்சயமானவர் சாட்விக் போஸ்மேன். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு போஸ்மேனுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார் போஸ்மேன். ஆனால், தனக்குப் புற்றுநோய் இருப்பது குறித்து வெளி உலகத்துக்கு அவர் அறிவிக்கவில்லை. இருப்பினும் அவர் தனது சிகிச்சையின் நடுவே திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாட்விக் போஸ்மேன் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார். அவர் மறைந்தாலும் இன்னும் ரசிகர்கள் மனதில் ஹீரோவாகவே வாழ்ந்து வருகிறார்.

இவர்களின் ஊக்குவிக்கும் கதைகளை போலவே எண்ணற்றோர் புற்றுநோயுடன் போராடி தங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றியை கண்டு வருகின்றனர். எனவே, இந்த புற்றுநோய் தினத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து புற்றுநோய்க்கு எதிராக மாற்றத்தை கொண்டுவருவோம்.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: