உலக தாய்ப்பால் வாரம் : தாய்ப்பால் நேரடியாக கொடுப்பது அல்லது பிரஸ்ட் பம்ப் செய்வது இரண்டில் எது சிறந்தது? நன்மை, தீமைகள் என்ன?

உலக தாய்ப்பால் வாரம்

ந்த தாய்ப்பால் வாரத்தில் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுப்பது சிறந்ததா? அல்லது பிரெஸ்ட் பம்ப் மூலம் எடுத்து கொடுப்பது சிறந்ததா? என்ற கேள்வி எழுகிறது .

  • Share this:
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதிவரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

இது தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதற்காகவும், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கொண்டாடப்படுகிறது. இந்த தாய்ப்பால் வாரத்தில் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுப்பது சிறந்ததா? அல்லது பிரெஸ்ட் பம்ப் மூலம் எடுத்து கொடுப்பது சிறந்ததா? என்ற கேள்வி எழுகிறது .

முந்தைய நாட்களில் பெண்கள் பொதுவாக வீட்டிலேயே இருப்பதால், தாய்மார்களின் எல்லா நேரமும் குழந்தையின் பராமரிப்பிற்கும் குழந்தையின் தேவைகளை கவனிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போது ஏராளமான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் பிரசவத்திற்குப் பிறகு 3 முதல் 4 மாதங்களில் மீண்டும் வேலைக்கு செல்கிறார்கள். இதனால் தொடர்ந்து தாய்ப்ப்பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இவர்களுக்கு பிரெஸ்ட் பம்ப் மிகவும் உதவியாக இருக்கும். மார்பகத்தில் பால் சுரப்பை செயற்கையாக தூண்டுவதற்கு பயன்படும் கருவியே பிரெஸ்ட் பம்ப். கூடுதலாக இவை தாய்ப்பாலை சேமித்து வைத்துகொண்டு குழந்தையின் பசியாறுதலுக்கு உதவுகிறது. இது பிஸியான தாய்மார்களுக்கு அவசியமானது. எனினும் இப்போது இதுகுறித்து நிறைய விவாதங்கள் செல்கின்றன, இதுகுறித்து புனே, தாய்ப்பால் மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் அர்ச்சனா வாட்கர் கூறிய தகவல்களை இங்கு காண்போம்.



நேரடியாக தாய்ப்பால் கொடுப்பதன் நன்மை :

* நேரடியாக தாய்ப்பால் கொடுப்பது என்பது உங்கள் குழந்தைக்கு நீங்களே பால் கொடுப்பதாகும். இதனால் குழந்தையின் தேவைக்கேற்ப உணவளிக்கப்படுகிறது . உங்கள் உடலுடன் தொடர்பு கொள்வது குழந்தையின் தேவைகளைப் பற்றிய செய்தியை அனுப்புகிறது, அதன்படி குழந்தைக்கு உணவளிக்கப்படுகிறது.

* குழந்தை நீண்ட நேரம் பால் குடிக்க விரும்பினால், தாயின் உடல் அதை உணர்ந்து குழந்தைக்கு அதிக நேரம் பால் கொடுக்கிறது மேலும் குழந்தைக்கு அதிகப்படியான பால் கொடுப்படாது என்பதையும் உறுதி செய்கிறது.

உலக தாய்ப்பால் வாரம் 2021 : முதன்முறையாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

* தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், குழந்தைக்கும் இடையிலான ஆரோக்கியமான பிணைப்பை ஊக்குவிக்கிறது, ஏனெனில் இது நீங்கள் உங்கள் குழந்தைக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்படும் நேரம் ஆகும். பால் கொடுக்கும் போது உங்கள் குழந்தையை பாசத்துடன் தடவி கொடுக்க வேண்டும். இந்த தொடுதல் உணர்வு தாயுடன் குழந்தை பிணைப்புக்கு உதவுகிறது.

* குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களின் ஆரோக்கியமும் மேம்படும். இந்த முறையில் நீங்கள் எதையும் பணம் கொடுத்து வாங்க தேவையில்லை. நீங்களே தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு உணவளிப்பதில் மிகவும் சிறந்தது ஆகும்.



தாய்ப்பால் கொடுப்பதன் தீமைகள் :

* தாய்ப்பால் கொடுக்கும் போது, ​​தாயின் நேரம் மற்றும் குழந்தையின் தேவைகளுக்கு மட்டுப்படுத்தப்படுகிறது. குழந்தையின் பசியின் காலக்கெடுவில் தாய் மற்ற வேலைகளை செய்ய முடியாது. இதனால் அவருக்கு நிறைய நேரம் இருக்காது.

* தாய்ப்பால் கொடுப்பதால் முலைக்காம்புகள் புண் ஆகலாம், இதனால் தொடர்ந்து கொடுக்கும் போது வலி, அசவுகரியம் ஏற்படும். அது தாய்க்கு வெறுப்பாக இருக்கும்.



பிரஸ்ட் பம்ப் நன்மைகள் :

* பிரஸ்ட் பம்ப் கொண்டு தாய்ப்பால் எடுத்து கொடுப்பதால் தாய்க்கு வேலைக்கும் நேரம் ஒதுக்க முடியும். குழந்தைக்கு உணவளிக்கும் நேரத்தை தாயால் கட்டுப்படுத்த முடியும்.

* தாய்மார்கள் தாய்ப்பாலை எடுத்து சேமித்து வைத்து விட்டு, விரும்பியபடி வேலைக்குத் திரும்பலாம்.

இந்த முறையில் பாலை பாட்டில்களில் சேமித்து வைக்கலாம். குழந்தைக்கு உணவளிக்கும் பொறுப்பை தாய் பகிர்ந்துகொள்ளும்போது, ​​அவருக்கும் மன மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தீமைகள் :

* பிரஸ்ட் பம்ப் உபகரணங்கள் விலை உயர்ந்தவை, எல்லோரும் அதை வாங்க முடியாது

* தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் தொடர்பு இல்லாததால் குழந்தையின் உணவு தேவையில் பற்றாக்குறை ஏற்படுகிறது.



* பம்ப் கொண்டு தாய்ப்பால் எடுத்து சேமித்து வைப்பதால், அதன் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக குழைந்தைக்கு கிடைக்காது.

இரண்டு நடைமுறைகளிலும் நன்மை, தீமைகள் உள்ளது. ஒருவர் அவரவர் தேவைகள், சுற்றுப்புறங்கள் மற்றும் வேலைக்குத் திரும்பும் அம்சத்தைப் பொறுத்து முடிவு எடுக்க வேண்டும். ஒரு நல்ல முடிவை எடுக்க உங்கள் மருத்துவரை அணுகி, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் மிகவும் வசதியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதைத் தேர்வு செய்யவும்.

 
Published by:Sivaranjani E
First published: