ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7 : ஏன் கொண்டாடப்படுகிறது..? இந்நாளின் முக்கியத்துவம் என்ன..?

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7 : ஏன் கொண்டாடப்படுகிறது..? இந்நாளின் முக்கியத்துவம் என்ன..?

உலக தாய்ப்பால் வாரம்

உலக தாய்ப்பால் வாரம்

உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தீம் எனும் கருப்பொருளுடன் குறிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, தாய்ப்பால் வாரத்திற்கான கருப்பொருள் "தாய்ப்பால் பாதுகாத்தல்  அனைவருக்குமான பொறுப்பு" என்பதாகும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இருப்பினும், கிட்டத்தட்ட 3 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு குறைந்தப்பட்சம் 6 மாதங்கள் கூட தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என ஆய்வு தெரிவிக்கிறது. உலகளாவிய அளவில் தாய்ப்பால் கொடுப்பது கட்டாயமாக்கினால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,20,000 குழந்தை உயிர்கள் காப்பாற்றப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2019-20ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS-5) படி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் நடைமுறையில் கவலை அளிக்கும் போக்கு காணப்படுகிறது என தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதிவரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

இது தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதற்காகவும், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கொண்டாடப்படுகிறது. இந்த தாய்ப்பால் வாரத்தில் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இது ஆகஸ்ட் 1990ல் அரசாங்க கொள்கை வகுப்பாளர்கள், WHO, யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதி) மற்றும் பிற நிறுவனங்கள் சார்பில் கையெழுத்திடப்பட்ட இன்னசென்டி பிரகடனத்தை நினைவுகூர்கிறது. பொதுவாக குழந்தை பிறந்து 2 வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும். குறைந்தது 1 வருடமாவது தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பால் கொடுப்பதினால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். மேலும் தாய்ப்பாலில் இருந்துதான் குழந்தைக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.

உலக தாய்ப்பால் வாரம் : பாலூட்டும் பெண்கள் குழந்தை ஆரோக்கியத்திற்காக சாப்பிட வேண்டிய 10 ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

குழந்தை பிறந்த உடனே இந்த தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகிவிடும். இது தவிர பல்வேறு நோய்களை எதிர்ப்பு போராடவும் தாய் பால் அவசியமாகிறது. தாய் பால் கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி இதனால் தாய்மார்களின் உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. குறிப்பாக தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு டைப் 2 நீரிழிவு, மனஅழுத்தம், மார்பகப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதில்லை ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

உலக தாய்ப்பால் வாரம் 2019க்கான தீம் :

உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தீம் எனும் கருப்பொருளுடன் குறிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, தாய்ப்பால் வாரத்திற்கான கருப்பொருள் "தாய்ப்பால் பாதுகாத்தல்  அனைவருக்குமான பொறுப்பு" என்பதாகும். அனைவரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு தாய்ப்பால் எவ்வாறு பங்களிக்கிறது, மற்றும் உலகளாவிய தாய்ப்பால் பாதுகாப்பது ஏன் அவசியம் என்பதில் இந்த ஆண்டு கவனம் செலுத்தப்படுகிறது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Breastfeeding, World breastfeeding week