Home /News /lifestyle /

உலக தாய்ப்பால் தினம் 2022 : பிரசவத்துக்கு முன்னும் பின்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

உலக தாய்ப்பால் தினம் 2022 : பிரசவத்துக்கு முன்னும் பின்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

உலக தாய்ப்பால் தினம்

உலக தாய்ப்பால் தினம்

குழந்தை பிறந்து குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் தான் அந்த குழந்தைக்கு முழு உணவு ஆகும். குழந்தையின் முழுமையான வளர்ச்சி, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களும் தாய்ப்பாலில் இருக்கின்றது.

மேலும் படிக்கவும் ...
    குழந்தை பிறந்து குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் தான் அந்த குழந்தைக்கு முழு உணவு ஆகும். குழந்தையின் முழுமையான வளர்ச்சி, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களும் தாய்ப்பாலில் இருக்கின்றது. தவிர்க்க முடியாத காரணங்களால், ஒரு சில பெண்களுக்கு மட்டுமே தாய்ப்பால் சுரக்காமல் போகும் அல்லது போதிய அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை.

    சில நேரங்களில் குழந்தைக்கு ஒவ்வாமை இருந்தால், அவர்களுக்கு ஃபார்முலா மில்க் வழங்கப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியம் என்பது பற்றி உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடைய குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு, டெலிவரி ஆவதற்கு முன்னும் பின்னும் தாய்ப்பால் கொடுப்பது பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

    குழந்தைக்கான ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி என்பதை கடந்து தாய்பால் கொடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே உடல் மற்றும் மனதளவில் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் தாய்ப்பால் கொடுப்பது அம்மா மற்றும் குழந்தைக்கு இடையே ஒரு அழகான மற்றும் உறுதியான பிணைப்பையும் ஏற்படுத்துகிறது. UNICEF கூற்றுப்படி குழந்தை பிறந்த 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மற்றும் குழந்தைக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே போதும் என்ற வகையில் அது ஒரு முழு உணவு ஆகும்.

    பிரசவத்துக்கு முன்பு தாய்ப்பால் கொடுப்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

    குழந்தை டெலிவரி ஆவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பே தாய்ப்பால் கொடுப்பது பற்றிய சந்தேகங்கள் கேள்வி ஏதேனும் இருந்தால் அதைப் பற்றி புரிந்து கொள்வது அவசியம்.

    அதுமட்டுமல்லாமல் எந்த உணவு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும், எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிடும் உணவுகள் குழந்தையும் பாதிக்கும் என்பதால் குழந்தை பிறந்த பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

    ALSO READ |  மங்கி பாக்ஸ் பற்றி பரவும் இந்த வதந்திகளை நம்பாதீங்க...

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள் என்பதை புரிதல் இருக்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் மட்டுமே போதும் என்பதால் அது எவ்வளவு நன்மை அளிக்கிறது என்று தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். தாய்பால் கொடுப்பது தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்க உதவுகிறது.

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு என்று உடல்ரீதியாக தனியாக தயாராக வேண்டிய அவசியம் இல்லை. இது இயற்கையாகவே உடலில் ஏற்படும் ஒரு மாற்றம் தான். எனவே நீங்கள் கருவுற்று இருந்த காலத்திலேயே உங்கள் உடல் உங்கள் குழந்தைக்கான தாய்ப்பால் கொடுப்பதற்கு தயாராகி விடும். உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் இரண்டாவது ட்ரைமெஸ்டர் முடியும் பொழுதே தாய்ப்பால் சுரப்புக்கு தயாராகி விடும்.

    பிரசவத்துக்கு பின்பு தாய்ப்பால் கொடுப்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

    குழந்தை பிறந்த பின்பு உடனடியாக ஸ்கின் டூ ஸ்கின் காண்டாக்ட் என்று கூறப்படும், குழந்தையை ஒரு தாய் தன்னுடைய மார்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இது குழந்தையின் உடலின் வெப்பத்தை ரெகுலேட் செய்து குழந்தைக்கு தேவையான பாக்டீரியா கிடைக்க உதவுகிறது.

    ஏற்கனவே கூறியுள்ளது போல ஒரு குழந்தை பிறந்தவுடன் எவ்வளவு விரைவாக அதற்கு முதல் தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அந்த அளவு விரைவாக கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பது சிரமம் என்பதால் தாய்ப்பாலை சேகரித்து அது குழந்தைக்கு கொடுக்கப்படலாம்.

    ALSO READ  | அந்தமான், தாய்லாந்துக்கு அசத்தல் டூர் பேக்கேஜ்; ஐஆர்சிடிசியின் அதிரடி அறிவிப்பு! 
     குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு கொடுக்கப்படும் தாய்ப்பாலின் பெயர் கோலோஸ்ட்ரோம். இது மஞ்சள் நிறத்தில் கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும். இந்த தாய்ப்பால் அடர்த்தியாக இருப்பதால் சிறிய அளவு குடித்தாலே பிறந்த குழந்தைக்கு போதுமானதாக இருக்கும். பிரசவமான உடனேயே சில நாட்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது சிரமமாக இருக்கும். இருப்பினும், படுத்துக் கொண்டு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. உங்களுக்கு வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Breastfeeding, World breastfeeding week

    அடுத்த செய்தி