ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உலக மூளை புற்றுநோய் தினம் 2022 : இளம் வயதினரிடம் மூளைப் புற்றுநோய் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

உலக மூளை புற்றுநோய் தினம் 2022 : இளம் வயதினரிடம் மூளைப் புற்றுநோய் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

உலக மூளை புற்றுநோய் தினம் 2022

உலக மூளை புற்றுநோய் தினம் 2022

World Brain Tumor 2022 | பெரும்பாலான மூளைப் புற்றுநோய் நோயாளிகளில் பாதிக்கப்பட்ட நபர்களில் கை கால் வெட்டி இழுத்தல் முதல் அறிகுறியாக கூறப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பெரும்பாலான உயிர்க்கொல்லி நோய்களுக்கான அறிகுறிகளை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும். குறிப்பாக, தற்போது வரை தீர்வு கிடைக்காக உயிர்கொல்லியான ஒரு சில வகை புற்றுநோய்களில் நோய் தீவிரமாகும் வரை எந்த அறிகுறிகளும் தோன்றாது.

புற்றுநோய் எந்த வயதில், உடலின் எந்த பாகத்தில் வளரும் என்பதை கணிக்கவே முடியாது. அதிர்ஷ்டவசமாக ஒரு சில வகையான புற்றுநோய்கள் அறிகுறிகளை கண்டறிவதன் மூலம் முதல் கட்டத்திலேயே உரிய சிகிச்சை பெற்றுக் கொண்டால் நோயிலிருந்து முழுவதுமாக விடுபட முடியும்.

இளைஞர்களைக் கூட புற்றுநோய் விட்டு வைப்பதில்லை. புற்றுநோய் பற்றிய கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு குறிப்பிட்ட தினங்கள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் உலக மூளை புற்றுநோய் தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. மூளை புற்றுநோய் தற்போது இளைஞர்களை கூட பாதிப்பதால் இதைப் பற்றிய அறிகுறிகளை தெரிந்து வைத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

மூளைப் புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

மூளையின் ஏதேனும் ஒரு பகுதியில் புற்றுநோய் கட்டிகள் அபரிமிதமாக வளர்வது அல்லது கட்டிகள் தோன்றுவதால் மூளை அமைப்பும் அதன் திசுக்களும் மாற்றமடையும். ஒரு சில மூளைக் கட்டிகள் கேன்சர் அல்லாத கட்டிகளாகவும் இருக்கும். மூளைப்புற்றுநோயின் முதல் அறிகுறியாக தீவிரமான தலைவலி.

தலைவலி, தீவிரமான தலைவலி, ஒவ்வொரு முறையும் தலைவலியின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு அதிகரிப்பது மட்டுமில்லாமல் தலைவலிக்கும் நேரத்தில் அதிகப்படியான அழுத்தத்தை உணரக்கூடும். காலையில் எழுந்து கொள்ளும் போதும் தீவிரமான தலைவலியுடன் கண் விழிப்பதும் அடங்கும். தலைவலியுடன் பார்வை கோளாறு, வாந்தி மற்றும் குமட்டல் மற்றும் மயக்க உணர்வு ஆகியவையும் ஏற்படும்.

குறிப்பாக தீவிரமான தலைவலி மற்றும் டபுள் விஷன் எனப்படும் பார்ப்பது அனைத்தும் இரண்டிரண்டாக தெரிவது ஆகியவை மூளை புற்று நோயை கிட்டத்தட்ட உறுதி செய்யும் அறிகுறிகளாக இருக்கலாம்.

மூளையின் எந்தப் பகுதியில் புற்றுநோய் கட்டி வளர்கிறது என்பதைப் பொறுத்து கை கால்கள் வெட்டி இழுப்பது, பேசுவதில் சிரமம், வாய் குழறுதல், நடப்பதில் சிரமம், உடலை பேலன்ஸ் செய்ய இயலாமல் போகும் நிலை, பக்கவாதம் ஆகியவையும் ஏற்படலாம்.

Also Read :ச்சந்தலை பராமரிப்பில் இதையெல்லாம் சரியாக செய்தால் தலைமுடி பிரச்சனைகளே இருக்காது..!

அதுமட்டுமில்லாமல் ஒரு நபரின் அடிப்படை குணங்களில் மாற்றமும் அடிக்கடி மறதி, நினைவுகளில் தடுமாற்றம் ஆகியவையும் உண்டாகலாம்.

ஃபோர்டிஸ் மெமோரியல் ஆய்வு இன்ஸ்டிட்யூட்டின் நியூரோ சர்ஜரி துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான மருத்துவர் சந்தீப் மூளை புற்றுநோய் பற்றி கூறுகையில், புற்று கட்டிகள் மூளையின் கணிசமான பகுதியை ஆக்கிரமிக்கும். எனவே மூளைக் கட்டி பெரிதாகும் போது மூளையிலுள்ள திசுக்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். மூளை எக்ஸ்பேண்ட் ஆகக் கூடிய ஒரு உறுப்பு கிடையாது. எனவே இந்த அழுத்தம் தலைவலி டபுள் விஷன் மற்றும் வாந்தி ஆகியவற்றை தொடர்ச்சியான அறிகுறிகளாக வெளிப்படுத்தும். உடனடியாத மருத்துவரிடம் ஆலோசனை செய்யாவிட்டால் நினைவு தவறி, நோயாளி இறந்து போகும் அபாயமும் உள்ளது என்று தெரிவித்தார்.

பெரும்பாலான மூளைப் புற்றுநோய் நோயாளிகளில் பாதிக்கப்பட்ட நபர்களில் கை கால் வெட்டி இழுத்தல் முதல் அறிகுறியாக கூறப்பட்டுள்ளது.

மூளைப் புற்றுநோயைக் கண்டறிதல்

தீவிரமான தலைவலிக்காக MRI செய்யும் போது மிகச்சிறிய அளவு கட்டிகள் கூட ரிப்போர்டில் தோன்றக்கூடும். மூளை புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிசெய்ய கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் உங்களுக்கு தொடர்ந்து தீவிரமான தலைவலியுடன் வாந்தி மற்றும் பார்வை கோளாறு ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனைகளை நர்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

மூளைப் புற்றுநோய்க்கான சிகிச்சையை பொறுத்தவரை மூளையின் எந்த இடத்தில் புற்றுநோய் வளர்ந்திருக்கிறது மற்றும் கட்டிகளின் வகை அளவு மற்றும் எந்த இடத்தில் கட்டி இருக்கிறது என்பதை பொறுத்து தான் சிகிச்சையை முடிவு செய்ய முடியும் என்று மயோ கிளினிக் கூறுகிறது.

First published:

Tags: Brain tumor, Health