World brain day: மூளை மற்றும் அதன் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக மூளை அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 அன்று உலக மூளை தினமாக கொண்டாடுகிறது.
மூளை விழிப்புணர்வு வாரம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் மூளை விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன.
மனித மூளை இயற்கையின் அற்புதமான படைப்பு. ஒன்றரை கிலோ எடை கொண்ட இந்த உறுப்பு சுமார் 100 பில்லியன் நரம்புகளைக் கொண்ட சிக்கலான அமைப்பாகும். அதில் உள்ள நரம்புகளை நீளமாக கட்டினால் பூமி முழுவதையும் நான்கு முறை சுற்றி வரலாம். நரம்பு மண்டலத்தில் காயம் ஏற்பட்டால், சுற்றியுள்ள திசுக்கள் வளர்ந்து காயமடைந்த நரம்பு மண்டலத்தின் வேலையைச் செய்யலாம், ஆனால் புதிய நரம்புகள் பிறக்க முடியாது. எனவே மூளை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
WHO இன் கூற்றுப்படி, நல்ல மூளை ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த திறன்களை உணர்ந்து, வாழ்க்கை சூழ்நிலைகளை சமாளிக்க அவர்களின் அறிவாற்றல், உணர்ச்சி, உளவியல் மற்றும் நடத்தை செயல்பாட்டை மேம்படுத்த முக்கிய தேவை ஆகும்.
ஒரு தனிநபரின் வாழ்க்கை முறை அவரது மூளையின் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முறையான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் மக்கள் அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை குறைக்க முடியும்.
ஜூலை 22: தித்திக்கும் தேசிய மாம்பழ தினம் இன்று.! - மாம்பழத்தின் வரலாறு தெரியுமா?
மூளைக் கோளாறுகளைத் தடுக்க உதவும் சில முக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் இதோ:
உடற்பயிற்சி
சுறுசுறுப்பாக இருப்பவர்களுடன் ஒப்பிடும்போது செயலற்ற நிலையில் உள்ள பெரியவர்களிடையே அறிவாற்றல் வீழ்ச்சி இரண்டு மடங்கு பொதுவானது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
வாரத்திற்கு 5 முறை 30 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்வது நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், நமது மூளையின் சிந்தனை, கற்றல், பிரச்சனைகளைத் தீர்ப்பது மற்றும் உணர்ச்சித் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. கவலை, மனச்சோர்வு மற்றும் டிமென்ஷியாவை குறைக்கிறது.
7-8 மணிநேரம் தூக்கம்:
தூக்கம் என்பது நமது மன ஆரோக்கியத்தின் அடித்தளம். படுக்கை நேரம் என்பது நமது மூளையின் மறுசீரமைப்பு நேரத்தை குறிக்கும். எவ்வளவு நேரம் தூங்குகிறீர்களோ, அவ்வளவு புத்துணர்ச்சி பெரும் மூளை. தூக்கமின்மை எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களை உண்டாக்கும். அதே போல் இரவில் வேலை செய்துவிட்டு பகலில் தூங்குவதும் ஆபத்தானது. இரவு 10 காலை 3 வரை கண்டிப்பாக தூங்க வேண்டும்.
வேலைக்கு நடுவே ஓய்வு:
ஏதேனும் வேலையில் மன அழுத்தம் அதிகரித்தால் அந்த காரணியை விட்டு வெளியே வந்து மா.ற்றத்தைக் குறித்து யோசியுங்கள் அல்லது சிறிது ஓய்வெடுங்கள். அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியாவின் ஆபத்தில் இருந்து தப்பிக்கும் வழி இது.
புகைபிடிக்க வேண்டாம்:
புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களின் பெருமூளைப் புறணி மெல்லியதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மூளையின் புறணி என்பது சிந்தனை மற்றும் பகுத்தறிவு திறன்களுக்கு பொறுப்பான மூளையின் ஒரு பகுதியாகும். எனவே புகையை தவிர்த்துவிடுங்கள். சிலர் ஆழ்ந்து யோசிக்கும் போது புகைபிடிக்கும் பழக்கம் கொண்டிருப்பர். புகை பிடித்தால் நுரையீரல் மட்டுமல்ல மூளையும் பாதிக்கும் மக்களே.
நாள்பட்ட நோய் மேலாண்மை:
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற ஏற்கனவே இருக்கும் நோய்களின் உகந்த மேலாண்மை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். இதன் மூலம் நமது மூளையை ஆரோக்கியமாக பராமரிக்க இயலும்.
சமூக வாழ்க்கை:
சமூக தொடர்பு மற்றும் இணைப்பு இல்லாதது நமது மூளை ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சந்திப்பது, புதிய செயலில் ஈடுபடுவது, உரையாடுவது போன்றவையும் நமது மூளை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
இயற்கையோடு வாழ்வது:
கணினி காலத்தில் கணினி, செல்போன் என்று திரைகளை பார்த்துக்கொண்டே இருக்கிறோம் இதனால் கண்ணோடு மூளையும் பாதிக்கும். அதனால் ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது திரைகளை பார்க்காமல் பசுமையான இயற்கை காட்சிகளை பார்க்கலாம்.
தோட்ட அமைப்பு.
பணம் வேலை என்று அதை பற்றி மட்டுமே யோசிக்காமல் சின்ன தொட்டியில் கீரை, பூச்செடி முதலியவற்றை வளர்ப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். மன அமைதியும் தரும்.
உணவு பழக்கம்
சமச்சீரான,ஆரோக்கியமான உணவு, குறைவான கொழுப்புகள் உள்ள உணவுகள், பழங்கள், கீரை மற்றும் பச்சை இலை காய்கறிகளை அதிக அளவு உட்கொள்பவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடு மற்றும் டிமென்ஷியா ஆபத்து குறைகிறது என்கிறார் நொய்டா,நரம்பியல் ஃபோர்டிஸ் மருத்துவமனை டாக்டர் ஜோதி பாலா ஷர்மா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Brain Disorder, Brain Health, Health