ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இன்று உலக சைக்கிள் தினம் : சைக்ளிங்கில் இருக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா ? 

இன்று உலக சைக்கிள் தினம் : சைக்ளிங்கில் இருக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா ? 

இன்று உலக சைக்கிள் தினம்

இன்று உலக சைக்கிள் தினம்

பணியிடத்தில் அதிக உற்பத்தித் திறனைக் காட்டவேண்டுமெனில் சைக்ளிங்தான் சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

உடல் ஆரோக்கியத்தைக் காக்க , மன அழுத்தத்தைப் போக்க , உங்களை சுறுசுறுப்பாக்க என இவை எல்லாவற்றையும் ஒரே பயிற்சியில் பெற வேண்டுமெனில் அது சைக்ளிங்கில்தான் முடியும் என்று  பரிந்துரைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

அதுவும் பணியிடத்தில் அதிக உற்பத்தித் திறனைக் காட்டவேண்டுமெனில் சைக்ளிங்தான் சிறந்தது என்றும் பரிந்துரைக்கின்றனர்.

பணியிடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்போருக்கு உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் என பல உடல் நோய்கள் தாக்கக் கூடிய ஆபத்துகள் அதிகமாக இருக்கின்றன.

கனடாவைச் சேர்ந்த மாண்ட்ரியல் என்னும் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் சைக்ளிங் செய்வது நீங்கள் வகுக்கும் இலக்குகளையும் வேகமாக முந்திச் செய்வீர்கள் என்றுக் கூறுகிறது.

மேலும் இது இதயத்தின் துடிப்பையும் அதிகரிக்கச் செய்து , ஆற்றலையும் அள்ளி வழங்குகிறது. இதனால் வேலையில் ஏற்படும் டென்ஷன்கள் அதனால் உருவாகும் உயர் இரத்த அழுத்தம் இப்படி எதுவும் உங்களை அண்டவிடாது என அதன் ஆராய்ச்சிகள் தெளிவாக விளக்குகின்றன.

ஹெல்தியான உடலைப் பெறவும், நீண்ட நேரம் அமர்ந்தே வேலைப்பார்க்கும் கார்பரேட் ஊழியர்களும் இந்த சைக்ளிங் பயிற்சியை தினமும் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என இதன் ஆராய்ச்சியாளர் மேத்யூ குறிப்பிடுகிறார்.


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Bicycle