2016 ஆய்வுப்படி, ஆஸ்துமா உலக அளவில் 4.2 லட்சம் பேரை இறப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அப்படியானால் ஒரு நாளைக்கு 1000 பேரைக் கொல்லும் இந்நோய் யாருக்கு எப்போது வரும் என்று சொல்ல முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் தாக்கும் இந்த நோய் கட்டுக்குள் இருக்குமேயன்றி தீர்வு இல்லை.
மூச்சுத் திணறல், நெஞ்சு இறுக்கிப் பிடித்தல், நெஞ்சு வலி போன்ற அறிகுறிகளுடன் தோன்றும் இந்நோய் சில உணவுப் பழக்கங்களாலும் இந்த அறிகுறிகள் அதிகரிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
அப்படி எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.
ஆஸ்துமா இருப்பவர்கள் பூண்டு, குளுர்ச்சியான உணவுகள், தயிர் , ஐஸ் கிரீம், பால், பால் பொருட்கள், மீன், நொருக்குத் தீனிகள் , பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டால் அறிகுறிகளை மேலும் அதிகமாக்கும். ஏனெனில் இந்த உணவுகள் நுரையீரலை பாதித்து மூச்சு விடுதலை சிரமமாக்கும்.
2017 ஆண்டு நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியான ஆய்வுப்படி தானிய வகைகள், பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சிகள், டெசர்ட் உணவுகளை அதிகம் உட்கொள்வது ஆஸ்துமா நோயாளிகளுக்கு நிலைமையை தீவிரமாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் அதிக கெமிக்கல், அதிக சோடியம் கொண்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஆல்கஹால் முற்றிலும் தவிர்த்தல் நல்லது.
கிளிக்: மதியம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா..?
எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் :
ஃபிரெஷான காய்கறிகள்,பழங்கள், வீட்டில் ஃபிரெஷாக சமைத்த உணவுகள், ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த உணவுகள், நட்ஸ், வைட்டமின் D, மெக்னீசியம் நிறைந்த கீரை வகைகள், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை, தேன் போன்றவை சாப்பிடுவது ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்க உதவும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.