இன்று உலக ஆஸ்துமா தினம் : ஆஸ்துமா அறிகுறிகளும்... கட்டுப்படுத்தும் வழிகளும்..!

உலகம் முழுவதும் இரண்டு கோடி மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சதவீதம் பேர் இந்தியர்கள்.

Sivaranjani E | news18
Updated: May 7, 2019, 8:20 PM IST
இன்று உலக ஆஸ்துமா தினம் : ஆஸ்துமா அறிகுறிகளும்... கட்டுப்படுத்தும் வழிகளும்..!
உலக ஆஸ்துமா தினம்
Sivaranjani E | news18
Updated: May 7, 2019, 8:20 PM IST
வாழ்க்கை முறை சரியாக இல்லாத அறிகுறியே ஆஸ்துமா. மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல், பதட்டமான சூழ்நிலை , சரியான தூக்கமின்மை, மன அழுத்தம், இறுக்கமான சூழல், குளுர்ச்சியான காற்று போன்ற காரணங்களே ஆஸ்துமாவின் அடித்தளம். குறிப்பாக மெட்ரோ நகரங்களில் வாழும் மக்கள்தான் அதிகமாக இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.

உலக சுகாதார அமைச்சகத்தின் படி உலகம் முழுவதும் இரண்டு கோடி மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சதவீதம் பேர் இந்தியர்கள் எனக் குறிப்பிடுகிறது. அதேபோல் ஐந்து முதல் பதினோறு வயது குழந்தைகளில் 10 முதல் 15 சதவீதம் பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது.

ஆஸ்துமா  அறிகுறி என்ன ?


ஆஸ்துமா உங்களைத் தாக்குகிறதெனில் அடிக்கடி தொடர் இருமல். மார்புப் பகுதி இறுகுதல், மூச்சுத் திணறல், மூச்சுவிடுதலில் பிரச்னை போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும். சிலருக்கு மிதமான ஆஸ்துமா பிரச்னை இருக்கும். அவர்களுக்கு அது அடிக்கடி தெரியாது. உடற்பயிற்சி, நீண்ட தூரம் நடத்தல், உடல் உழைப்பு போன்றவை செய்யும்போது மூச்சு விடுதலில் பிரச்னை ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.

ஆஸ்துமா குணப்படுத்தமுடியாது என்றாலும் நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதால் கட்டுப்படுத்தலாம். அதேபோல் ஆஸ்துமா உள்ளவர்கள் கட்டாயம் இன்ஹேலர் பயன்படுத்துவது அவசியம். இன்ஹேலர் பயன்படுத்துவது மட்டுமே அவர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறலை கட்டுப்படுத்தி சுவாசத்தை சீராக்கும்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டால்  என்ன செய்ய வேண்டும் ?

Loading...

ஆஸ்துமா பிரச்னை இருப்பின் இன்ஹேலரை எப்போதும் உடன் வைத்திருப்பது அவசியம். மூச்சுத் திணறல் ஏற்பட்டால் இன்ஹேலர் மூடியைத் திறந்து நன்கு வேகமாக குளுக்க வேண்டும். பதட்டப்படாமல் மெதுவாக மூச்சை முழுமையக இழுத்துவிடவும். பின் இன்ஹேலரை தடித்தப் பகுதியை மேல் நோக்கியவாறு கைகளில் பிடித்துக் கொள்ள வேண்டும். குறுகியப் பகுதியை வாயில் விட்டு வாயை இறுக மூடிக்கொள்ளவும். மேல் பகுதியில் உள்ள பட்டனை அழுத்தவும். பொறுமையாக அழுத்தவும்... அழுத்தியதும் இன்ஹேலரை வாயிலிருந்து எடுத்துவிட்டு வாயை இறுக்கமாக மூடிக் கொள்ளவும். 10 - 15 நிமிடங்கள் வாய் வழியே மூச்சு விடாமல் இருக்கவும். தற்போது மூச்சு நன்கு வரும். மூச்சுத் திணறல் கட்டுக்குள் இருக்கும். 20 - 30 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டவது பஃப் கொடுக்க வேண்டும்.

இந்த குறிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும். எனினும், மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ முறைகளை கையாள்வது நன்று.
First published: May 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...